Budget 2025 : ஸ்விக்கி.. சொமேட்டோ ஊழியர்களுக்கு இன்சூரன்ஸ் வசதி! பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
Budget 2025 : உணவு டெலிவரி உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு புதிய காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

டெலிவரி செய்யும் ஸ்விக்கி,சொமேட்டோ, செப்டோ உள்ளிட்ட டெலிவரி ஊழியர்களுக்கு இலவச காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தும் என்று பட்ஜெட்டில் அறிவிப்பு
மத்திய பட்ஜெட் 2025:
2025-26-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதற்கான நிதிநிலை அறிக்கையை நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தால் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
இதையும் படிங்க: Budget 2025 LIVE: ஆண்டு வருமானம் ரூ. 12 லட்சம் வரை உள்ளபவர்களுக்கு வருமான வரி கிடையாது - நிர்மலா அறிவிப்பால் மக்கள் இன்ப அதிர்ச்சி
டெலிவரி ஊழியர்களுக்கு காப்பீடு:
2025-26 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பொருட்களை டெலிவரி செய்யும் ஸ்விக்கி,சொமேட்டோ, செப்டோ உள்ளிட்ட டெலிவரி ஊழியர்களுக்கு இலவச காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
Investing in Street Vendors and Online and Urban Workers
— PIB India (@PIB_India) February 1, 2025
🔹 Gig workers of online platforms to be provided with identity cards and registration on e-Shram portal
🔹 Scheme for socio-economic upliftment of urban workers to be implemented
🔹 PM SVANidhi scheme to be revamped… pic.twitter.com/sdhD4u6TRf
இது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று தனது பட்ஜெட் உரையில், கிக் தொழிலாளர்களுக்கு அரசு அடையாள அட்டை வழங்கப்படும் என்று அறிவித்தார். கிக் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் சுகாதார வசதியும் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: Budget 2025 Income Tax: அட்ராசக்க..! ரூ.12 லட்சம் வரை வருமான வரியே கிடையாது - பட்ஜெட்டில் பம்பர் ஆஃபர் அறிவிப்பு
தனது அரசாங்கம் தெருவோர வியாபாரிகள் மற்றும் ஆன்லைன் மற்றும் நகர்ப்புற தொழிலாளர்களுக்கு முதலீடு செய்யும் என்றார். ஆன்லைன் பிளாட்ஃபார்ம்களின் கிக் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டைகள் மற்றும் இ-ஷ்ரம் போர்ட்டலில் பதிவு வழங்கப்படும் எனவும் வங்கிகளில் இருந்து மேம்படுத்தப்பட்ட கடன்கள், ரூ.30,000 வரம்புடன் UPI இணைக்கப்பட்ட கிரெடிட் கார்டுகள் மற்றும் திறன் மேம்பாட்டு ஆதரவு ஆகியவற்றுடன் PM SVANIdhi திட்டம் புதுப்பிக்கப்படும் என்றார் நிதியமைச்சர்.






















