மேலும் அறிய

Budget 2023 : தங்கம் வாங்கணும்னு நினைக்கிறவங்க வாங்கிக்கோங்க... மேலும் எகிறப்போகும் தங்கம் விலை...! பயமுறுத்தும் பட்ஜெட் அறிவிப்பு

தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி உயர்ந்துள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Budget 2023 : தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி உயர்ந்துள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்ம உரையுடன் தொடங்கியது. பின்னர், பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

இதனை தொடர்ந்து, இந்தியாவின் 2023-2024ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து அறிவிப்புகளை இன்று வெளியிட்டார். இந்தியாவின் கடந்த கால பொருளாதார வளர்ச்சிகளுடன், புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டு பேசி வரும் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசும்போது, தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரியை உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். அதே நேரம் வைரம் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எவ்வளவு உயர்வு?

குறிப்பாக தங்கத்தின் மீதான இறக்குமதி வரியானது குறைக்கப்பட வேண்டும் என் நீண்ட நாட்கள் கோரிக்கையாக இருந்து வந்தது. தற்போது தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி மீதான வரி குறையுமா, சாமானிய மக்களும் தங்கத்தினை வாங்க முடியுமா  என்று மக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது. 

பலத்த எதிர்பார்ப்புகள் மத்தியில் 2023-2024ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, 2023ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், தங்கம், வெள்ளி பொருட்களுக்கான சுங்க வரி 20 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வைரங்கள் மீதான இறக்குமதி வரி, குறைக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த பட்ஜெட்டில் தங்கம், வெள்ளியின் வரி குறைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிந்தது. இதுபோன்ற வரி குறைத்தால், தங்கம், வெள்ளி விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்க்கப்பட்டதற்கு எதிராக தங்கம், வெள்ளி, பிளாட்டின் ஆகியவற்றிருக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இதனால் வரும் காலங்களில் தங்கம், வெள்ளி விலை உயர்வும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தங்கம், வெள்ளி விலை உயர்ந்துள்ள நிலையில், தற்போது அதற்கான வரி உயர்த்தி இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை உயர்வு

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளதால் இறக்குமதி குறைந்த இந்தியாவில் தங்கத்தின் விலை  மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிக பணம் கொடுத்து தங்கத்தை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இறக்குமதியை கட்டுப்படுத்தவும், இறக்குமதி-ஏற்றுமதிளில் சமநிலையை பராமரிக்கவும் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தங்கம், வெள்ளியின் இறக்குமதி வரி உயர்த்தப்பட்ட  சில மணி  நேரத்திலேயே தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ. 43,320 க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு தங்கம் விலையானது ரூ.55 உயர்ந்து ரூ5,415க்கு விற்கப்படுகிறது. 

அதேபோல், சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ1.20 உயர்ந்து ரூ.76க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கக் கட்டிகளில் இருந்து செய்யப்படும் ஆபரணங்களுக்கு சுங்கவரி உயர்த்தப்பட்டதால தங்கம் விலை தற்போது அதிரடியாக உயர்ந்தது.  தங்கத்தின் விலையானது காலையில் கிராமுக்கு ரூ22 எனவும், மதியம் கிராமுக்கு ரூ.55 எனவும் இன்று மட்டும் தங்கம் விலை ரூ.77 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை 3வது நாள் கூட்டம் - கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுகவினர்!
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை 3வது நாள் கூட்டம் - கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுகவினர்!
Flyover : கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
மக்களே ரெடியா? நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு! என்ன ஸ்பெஷல்? என்ன செய்ய வேண்டும்?
மக்களே ரெடியா? நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு! என்ன ஸ்பெஷல்? என்ன செய்ய வேண்டும்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2Anita Anand | அடுத்த கனடா பிரதமர் யார்? ரேஸில் தமிழ் பெண்! யார் இந்த அனிதா ஆனந்த்? | Canada

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை 3வது நாள் கூட்டம் - கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுகவினர்!
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை 3வது நாள் கூட்டம் - கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுகவினர்!
Flyover : கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
மக்களே ரெடியா? நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு! என்ன ஸ்பெஷல்? என்ன செய்ய வேண்டும்?
மக்களே ரெடியா? நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு! என்ன ஸ்பெஷல்? என்ன செய்ய வேண்டும்?
Champions Trophy 2025: கில் vs ஜெய்ஸ்வால்! ரோகித்துடன் களமிறங்க போவது யார்? சாம்பியன்ஸ் டிராபி 2025
Champions Trophy 2025: கில் vs ஜெய்ஸ்வால்! ரோகித்துடன் களமிறங்க போவது யார்? சாம்பியன்ஸ் டிராபி 2025
ISRO Chairman: தமிழ்நாடே பெருமிதம் - இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம், யார் இவர்?
ISRO Chairman: தமிழ்நாடே பெருமிதம் - இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம், யார் இவர்?
முடிஞ்சிப்போன கதை! இப்போ ஏன்? - உதயநிதி அரசியல் குறித்த கேள்விக்கு மனைவி கிருத்திகா கொடுத்த பதில்
முடிஞ்சிப்போன கதை! இப்போ ஏன்? - உதயநிதி அரசியல் குறித்த கேள்விக்கு மனைவி கிருத்திகா கொடுத்த பதில்
Erode East By Election: அதிர்ச்சியில் தமிழக அரசியல் கட்சிகள் - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், வேட்புமனு தாக்கலில் சிக்கல்?
Erode East By Election: அதிர்ச்சியில் தமிழக அரசியல் கட்சிகள் - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், வேட்புமனு தாக்கலில் சிக்கல்?
Embed widget