Budget 2022: ‛ஒரு வகுப்புக்கு ஒரு சேனல்... 200 டிஜிட்டல் சேனல்கள் தொடங்கப்படும்’ -நிதியமைச்சர் அறிவிப்பு!
கல்வித்துறையில் டிஜிட்டல் முறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சில அறிவிப்புகளை நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்து வருகிறார். அதில் கல்வி தொடர்பான சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி பிரதமர் இ-வித்யா திட்டத்தின் கீழ் ஒரு வகுப்பு ஒரு தொலைக்காட்சி என்பதன் படி 12 முதல் 200 டிவி செனல்கள் தொடங்கப்படும். இந்த செனல்கள் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்வி கற்க முடியாமல் பாதிக்கபட்ட கிராமப்புற மற்றும் எஸ்சி எடி மாணவர்களுக்கு அதிக பயன் கிடைக்கும். இதன்மூலம் மாநிலங்கள் தங்களுடைய மொழியில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை செனல்களை அளிக்க முடியும்.
மேலும் படிக்க:வருமான வரி செலுத்துபவரா நீங்கள்? பட்ஜெட்டில் உங்களுக்கு சொன்னது இதுதான்!
மேலும் மாநிலங்கள் தங்களுடைய வேளாண் பல்கலைக்கழக்கங்களின் பாடத்திட்டங்களை இயற்கை வேளாண்மை உள்ளிட்டவையின் தேவைக்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும் மாநிலங்களில் டிஜிட்டல் முறையில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. அதேபோல, இந்திய மாணவர்கள் உலகத்தரம் வாய்ந்த கல்வி கற்கும் வகையில் டிஜிட்டல் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். இதன் உள்ளடக்கம் வெவ்வேறு இந்திய மொழிகளில் உருவாக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
#BudgetWithABPNadu | நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.27% ஆக இருக்கும் என கணிப்பு - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்#UnionBudget2022 | #Budget2022 | #BudgetSession2022 | #Budget | #NirmalaSitharaman pic.twitter.com/uZWBLdL5vh
— ABP Nadu (@abpnadu) February 1, 2022
இதுகுறித்து மேலும் பேசிய அவர், ''இந்திய மாணவர்களின் வீட்டிலேயே உலகத் தரம் வாய்ந்த கல்வி கிடைக்கும் வகையில், டிஜிட்டல் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். ஐஎஸ்டிஇ தரத்தின் அடிப்படையில் இந்தப் பல்கலைக்கழகம் இருக்கும். இதற்கான உள்ளடக்கம் வெவ்வேறு இந்திய மொழிகளில் தயாரிக்கப்படும். தலைசிறந்த பல்கலைக்கழககங்களும் அரசு கல்வி நிறுவனங்களும் இணைந்து இந்தப் பணியை மேற்கொள்ளும்'' என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இவை தவிர சில முக்கியமான அறிவுப்புகளையும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னுடைய பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க: Union Budget 2022 Highlights in Tamil: பட்ஜெட் தொடங்கியது முதல் முடிவு வரை... முக்கிய அறிவிப்புகளின் தொகுப்பு இதோ...!