Stock Market Spike : பட்ஜெட் நாளில் அமோகம்....ஏறுமுகத்தில் இந்திய பங்குச்சந்தை...1,000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்...
இந்திய பங்குச்சந்தையானது பகல் 1 மணி நிலவரப்படி, உயர்ந்த நிலையிலேயே வர்த்தகமாகி வருகிறது.
இந்தியாவின் 2023-2024ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பல விதமான அறிவிப்புகளை வெளியிட்டார். இந்தியாவின் கடந்த கால பொருளாதார வளர்ச்சிகளுடன், புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டு நிர்மலா சீதாராமன் பேசினார்.
இந்நிலையில் இந்திய பங்குச்சந்தையானது பகல் 1 மணி நிலவரப்படி, உயர்ந்த நிலையிலேயே வர்த்தகமாகி வருகிறது. இன்று காலை வர்த்தகம் தொடங்கும் நேரத்திலும் இந்திய பங்குசந்தையானது ஏறுமுகத்தில் இருந்தது. அதன்படி இன்று காலையில், மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 443.39 அல்லது 0.74 % புள்ளிகள் உயர்ந்து 59,993.29 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 129.90 அல்லது 0.74% புள்ளிகள் உயர்ந்து 17,792.05 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, இந்திய பங்குச்சந்தை உயர்வுடனே வர்த்தகமாகி வருகிறது. அதன்படி, மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,173 அல்லது 1.97 % புள்ளிகள் உயர்ந்து 60,723 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 300 அல்லது 1.70% புள்ளிகள் உயர்ந்து 17,962 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது.
லாபம்-நஷ்டம்
ஐடிசி, டாடா ஸ்டீல், ஐசிஐசி வங்கி, டாடா கான்ஸ், சிப்ளா, டிசிஎஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், இன்போசிஸ், டெக் மகேந்திரா, லார்சன், விப்ரோ, கோடக் மகேந்திரா, பிரிட்டானியா, ஹின்டல்கோ, நெஸ்டிலே, அப்போலோ மருத்துவமனை, கிராசிம், பாரதி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
அதானி எட்டர்பிரிஸ், அதானி போர்ட்ஸ், எஸ்பிஐ, பஜாஜ் பின்சர்வ், பிபிசிஎல், யுபிஎல், எச்டிஎஃப்சி லைப், சன் பார்மா, கோல் இந்தியா, எம்எம், ஆக்சிஸ் வங்கி, மாருதி சுசிகி, ஹிரோ மோட்டோகோர்ப், டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.