Share Market | புது வருடம்.. புது தொடக்கம்.. பங்குச்சந்தை நிலவரம் :500 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ், 150 புள்ளிகள் உயர்ந்த நிஃப்டி
புத்தாண்டின் முதல் நாளான இன்று பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை அடைந்துள்ளன.
2021ஆம் ஆண்டின் கடைசி நாளில் பங்குச்சந்தைகள் உச்சத்துடன் நிறைவடைந்தன.கடைசி நாளில் சென்செக்ஸ் 450 புள்ளிகள் உயர்ந்தது. அதேபோல் நிஃப்டியும் 150 புள்ளிகள் அதிகரித்தது. பிஎஸ்இ சென்செக்ஸ் 58,253.82 புள்ளிகளுடன் நிறைவு பெற்றது. அத்துடன் நிஃப்டி 17,354.05 புள்ளிகளுடன் நிறைவு பெற்றது. கடந்த வெள்ளிகிழமை பங்குச்சந்தையில் உலோகங்கள் மற்றும் ஆட்டோ நிறுவனங்களால் பங்குச்சந்தை உச்சத்துடன் நிறைவு பெற்றது.
2022ஆம் ஆண்டில் இன்று பங்குச்சந்தைகள் முதல் நாளாக செயல்படுகிறது. இதனால் இன்று நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் உள்ளிட்டவற்றில் எப்படி தொடங்கும் என்ற அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில் ஆண்டின் முதல் நாளான இன்றே சென்செக்ஸ் 500 புள்ளிகள் அதிகரித்து 58,543 ஆக உயர்ந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையை போல் இன்றும் பங்குச்சந்தையில் ஆட்டோ நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பங்குகள் அதிகரித்துள்ளன. அத்துடன் இந்திய நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளும் உயர்வுடன் தொடங்கியுள்ளது. தற்போது வரை பங்குச்சந்தைகளின் உயர்வு வேகமாக இருப்பதால் ஆண்டின் முதல் நாளில் பங்குச்சந்தைகள் உச்சத்துடன் தொடங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
Equity indices open in green on the first trading day of 2022 with Sensex up by 289 points at 58,543 and Nifty jumping 89 points to reach 17,443 pic.twitter.com/I2swgQRPbM
— ANI (@ANI) January 3, 2022
இந்தியாவில் வேகமாக ஒமிக்ரான் தொற்று பரவிவரும் சூழலில் அந்த பாதிப்பு பங்குச்சந்தையில் பாதிப்பு எதையும் ஏற்படுத்தவில்லை. கடந்த ஆண்டு தொழில்நுட்ப நிறுவனங்களில் பங்குகள் 60 சதவிகிதம் வரை உயர்ந்தது. இது 2020ஆம் ஆண்டு இந்த 55 சதவிகிதத்தைவிட மிகவும் அதிகமானது. இந்த வளர்ச்சி 2022ஆம் ஆண்டும் தொடரும் என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர். அதேசமயம் கடந்து ஆண்டு மிகவும் மோசமாக செயல்பட்ட தனியார் வங்கிகளின் பங்குகள் இந்தாண்டு மீண்டு எழுந்து நன்றாக அமையும் என்று கருதப்படுகிறது.
அதேபோல் ஆண்டின் முதல்நாளான இன்று டாட்டா மோட்டர்ஸ், அசோக் லெலாண்ட், மஹிந்திரா, டிவிஎஸ் மோட்டர்ஸ் ஆகியவை உச்சத்துடன் 2022ஆம் ஆண்டை தற்போது தொடங்கியுள்ளன. இவை தவிர வோடாஃபோன், ஐடிஎஃப்சி ஆகியவற்றின் பங்குகளும் உயர்வுடன் 2022ஆம் ஆண்டை தொடங்கியுள்ளது. ஸ்பைஸ்ஜெட் மற்றும் இண்டிகோ நிறுவனங்களில் பங்குகள் இறங்கியுள்ளன. இதற்கிடையே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 14 பைசா குறைந்து 74.43 ஆக உள்ளது. மேலும் படிக்க:பிறக்கப்போகுது தை மாதம்.. அதிரடியாக குறைந்தது தங்கம் விலை..