(Source: ECI/ABP News/ABP Majha)
Gold-Silver Rate, 3 Jan: பிறக்கப்போகுது தை மாதம்.. அதிரடியாக குறைந்தது தங்கம் விலை..
இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கம் கிராமிற்கு ரூபாய் 9 ரூபாய் குறைந்து ரூபாய் 4,550க்கு விற்கப்படுகிறது.
சென்னையில் ஆபரணத்தங்கம் 22 காரட் கிராமிற்கு ரூபாய் 4,559க்கு நேற்று விற்கப்பட்டது. சவரன் தங்கம் ரூபாய் 36,472க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கம் கிராமிற்கு ரூபாய் 9 ரூபாய் குறைந்து ரூபாய் 4,550க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் ரூபாய் 72 குறைந்து ரூபாய் 36,400க்கு விற்கப்படுகிறது.அதேபோல, 24 காரட் தங்கம் கிராமிற்கு ரூபாய் 4,925க்கு நேற்று விற்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி 9 ரூபாய் குறைந்து கிராம் 4,916 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
அதேபோல் சவரன் தங்கம் நேற்று 39,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி 77 ரூபாய் குறைந்து 39,328 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் இன்றைய காலை நிலவரப்படி 66.20 காசுகளுக்கு விற்கப்படுகிறது. அதேபோல் ஒரு கிலோ வெள்ளி 400 ரூபாய் குறைந்து 66,200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சுப முகூர்த்த மாதமான தை மாதம் இன்னும் 10 நாட்களில் தொடங்கவுள்ள நிலையில் தங்கம் வெள்ளி விலை குறைவு என்பது மக்களிடையே மகிழ்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
முன்னதாக, தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்குமா என்பது குறித்து மெட்ராஸ் ஜூவல்லர்ஸ் மற்றும் டைமண்ட் மெர்ச்சன்ட் அசோசியேசன் தலைவர் ஜெயந்திலால் சலானி ஏபிபி நாடுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர் கூறும்போது, பொருளாதார மந்தமான சூழ்நிலை ஏற்படும்போது, பொருளாதார துறையைச் சேர்ந்த பங்குச் சந்தைகள் சரிவை நோக்கிப்போகும்.
அப்படிப்பட்ட சூழலில் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். இந்த மாதிரியான சூழ்நிலை தொடர்ந்து நீடித்தால் தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும். காரணம் முதலீட்டாளர்களிடம் உள்ள ஒரு பீதியால், தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். முதலீடுகள் எப்போதெல்லாம் அதிகரிக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிக்கக்கூடும் என்றார்.
காரணம் எது லாபம் கொடுக்குமோ அதில்தான் அவர்கள் முதலீடு செய்வார்கள். இப்போதைய சூழ்நிலை இதுவே" என்று கூறினார். கொரோனா தொடர்ந்து அதிகரிக்கும்பட்சத்தில், தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயரும். தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை கடக்க வாய்ப்புள்ளது என்றார். மீண்டும் தங்கம் விலை உயருமா, அல்லது குறையுமா என்பதை அடுத்தடுத்த நாட்களில் தெரிய வரும் என்றும் அவர் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
பிக்பாஸ் அஷராவுக்கு ரூ.1 கோடி ரூபாயில் அடித்த பம்பர் பரிசு.. சோஷியல் மீடியாவில் வைரல்..
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்