மேலும் அறிய

Bill Gates: கிரிப்டோகரன்சி என்பது 'The Great Fool Theory’ அடிப்படையில் உருவாக்கப்பட்டது - பில்கேட்ஸ் கருத்து

Bill Gates: கிரிப்டோகரன்சி என்பது 'The Great Fool Theory’ அடிப்படையில் உருவாக்கப்பட்டது - பில்கேட்ஸ் கருத்து

பில் கேட்ஸ் (Bill Gates) என்றாலே பெரும் பணக்காரர்; தொழிலதிபர்; உலக அளவில் பல்வேறு வகையில் நிதி உதவிகளை வழங்கி வருபவர்; - இப்படிதான் நினைவுக்கு வரும் இல்லையா. பெரும் முதலீட்டாளராக பில் கேட்ஸ், இன்னும் கிரிப்டோகரன்சி, பிட்காயின் சுழலில் சிக்க வில்லை என்பதைவிட, அவருக்கு இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை என்பதுபோல் இருக்கிறது. 

ஆம். சமீபத்தில் கலிஃபோர்னியாவில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றில் பில் கேட்ஸ் கூறுகையில் கிரிப்டோகரன்சி என்பது ஒரு சொத்து அல்ல. இது “The Great Fool theory" அடிப்படையாக கொண்டது. நான் இதுவரை கிரிப்டோகரன்சியில் எவ்வித முதலீடும் செய்யவில்லை. என்று கிரிப்டோகரன்சிக்கு எதிராக கருத்துக்களைக் கூறியுள்ளார். கடந்த இரண்டு வராங்களாக பிட்காயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், பில்கேட்சிம் இந்தக் கருத்து கவனிக்கப்படுவதாய் அமைந்திருக்கிறது. 

அதென்ன The Great Fool theory: 

The Great Fool Theory என்பது ஒரு சந்தையில் விலை மதிப்பு மிக்க பொருள் ஒன்றை மிகப்பெரும் சொத்தாக நினைத்து வாங்குவது, இன்னும் கொஞ்சம் காலம் சென்றபிறகு அதை வேறொரு முட்டாள யாராவது அதை வாங்குவார் என்று நினைத்து கொள்வதே இந்த தியரின் பொருள். 

கடந்த 2015 ஆம் ஆண்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க Breakthrough Energy Ventures என்ற அமைப்பை நிறுவினார் பில் கேட்ஸ்.  Berkeley நகரில் TechCrunch என்ற ஆன்லைன் ஊடகம் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பில்கேட்ஸ், விலை உயர்ந்த டிஜிட்டல் வடிவில் உருவாக்கப்பட்ட குரங்கின் படம்தான் இந்த உலகை மேம்படுத்தப்போகிறது (NFT வகையிலான ஓவியங்களை பில் கேட்ஸ் இங்கு குறிபிடுகிறார்.)  என்று நக்கலாக கூறினார். அதாவது, இதுபோன்ற கிரிப்டோகரன்சிகளால் இந்த உலகத்திற்கு எந்த பயனும் இல்லை என்கிரார். கிரிப்டோ மைனிங் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த திங்கள் கிரிப்டோகரன்சியின் சந்தை மதிப்பு 15 சதவீதம் சரிந்தது. செவ்வாயன்று, மேலும், 4.5 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. 

பில்கேட்ஸும் கிரப்டோகரன்சி பற்றிய கருத்துகளும்:

கிரிப்டோகரன்சிகள் குறித்து பில்கேட்ஸ் தொடக்கத்தில் இருந்தே அதிருப்தி தெரிவித்து வருகிறார். முன்னதாக, 

செயற்கை ஓபியாய்ட் ஃபெண்டனில் (opioid fentanyl) போன்ற போதை மருந்துகள் வாங்க பிட்காயின் போன்ற டிஜிட்டல் நாணயங்கள் பயன்படுத்தப்படுவதாக அவர் கூறுகிறார்.

ரெடிட் (Reddit) ஊடகம் நடத்திய ;Ask Me Anything" கலந்துரையாடல் அமர்வு ஒன்றில்  கலந்துக்கொண்ட பில்கேட்ஸ், யாருடையது என்று தெரியாத டிஜிட்டல் நாணயங்கள், பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பது, பண மோசடிகளுக்கு துணைபோவது என பல ஆபத்துகளை ஏற்படுத்தும் என்று கூறினார்.

தொழில்நுட்பத்தை பற்றி பில் கேட்ஸ் தவறான தகவலை பரப்புவதாக அவர் மீது விமர்சனங்கள் தொடர்ந்து வருகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மோடிக்கு எதிரான கார்ட்டூன்; விகடன் இணையதளம் முடக்கம்? எல்.முருகன் தரப்பு பதில் இதுதான்!
மோடிக்கு எதிரான கார்ட்டூன்; விகடன் இணையதளம் முடக்கம்? எல்.முருகன் தரப்பு பதில் இதுதான்!
"பிச்சை கேட்கல" நிதி கொடுக்க முடியாது என சொன்ன மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஷ் பதிலடி!
"தமிழ்நாட்டிற்கு நிதி கிடையாதுங்க" புதிய கல்விக்கொள்கை விவகாரத்தால் மத்திய அமைச்சர் திட்டவட்டம்
சென்னையில் கட்டுமான கழிவுகள் என்ன செய்யப்படுகிறது? பதில் தந்த மாநகராட்சி
சென்னையில் கட்டுமான கழிவுகள் என்ன செய்யப்படுகிறது? பதில் தந்த மாநகராட்சி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | CrimePa Ranjith Slams MK Stalin | ”சாதிய வன்கொடுமை! ஒத்துக்கோங்க ஸ்டாலின்”பா. ரஞ்சித் சரமாரி கேள்வி! | DMKDMK Vs VCK | ”2026-ல் ஸ்டாலினை வீழ்த்துவோம் உண்மையான சங்கி திமுக” விசிக நிர்வாகி ஆவேசம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மோடிக்கு எதிரான கார்ட்டூன்; விகடன் இணையதளம் முடக்கம்? எல்.முருகன் தரப்பு பதில் இதுதான்!
மோடிக்கு எதிரான கார்ட்டூன்; விகடன் இணையதளம் முடக்கம்? எல்.முருகன் தரப்பு பதில் இதுதான்!
"பிச்சை கேட்கல" நிதி கொடுக்க முடியாது என சொன்ன மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஷ் பதிலடி!
"தமிழ்நாட்டிற்கு நிதி கிடையாதுங்க" புதிய கல்விக்கொள்கை விவகாரத்தால் மத்திய அமைச்சர் திட்டவட்டம்
சென்னையில் கட்டுமான கழிவுகள் என்ன செய்யப்படுகிறது? பதில் தந்த மாநகராட்சி
சென்னையில் கட்டுமான கழிவுகள் என்ன செய்யப்படுகிறது? பதில் தந்த மாநகராட்சி
Jayalalitha's Jewellery: அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
"அவரு OBC-யே கிடையாது" மோடி குறித்து ரேவந்த் ரெட்டி பரபர கருத்து!
"கோபாலபுரத்தை தாண்டி எந்த பெண்களுக்கும் பாதுகாப்பு இல்ல" பகீர் கிளப்பும் அண்ணாமலை
கனிமவளத்தில் கை வைத்த திமுக ; ரவுண்டு கட்டிய அன்புமணி - பின்னணி இதான்
கனிமவளத்தில் கை வைத்த திமுக ; ரவுண்டு கட்டிய அன்புமணி - பின்னணி இதான்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.