Bank Holiday 2022 : அக்டோபரில் எந்தெந்த தேதிகளில் வங்கி விடுமுறை தெரியுமா? வேலைகளை இப்போவே ப்ளான் பண்ணுங்க..
அக்டோபர் மாதம் எந்தெந்த தேதிகளில் வங்கிகள் விடுமுறை அளிக்கப்படுகிறது என்பதை கீழே விரிவாக காணலாம்.
அக்டோபர் 1-ந் தேதி வரும் சனிக்கிழமை பிறக்கிறது. வரும் அக்டோபர் மாதத்தில் சரஸ்வதி பூஜை, விஜயதசமி பூஜை, தீபாவளி ஆகிய பண்டிகைகளும், காந்தி ஜெயந்தியும் கொண்டாடப்பட உள்ளது. இதனால், அக்டோபர் மாதத்தில் பொதுமக்களுக்கு அதிகளவில் பண்டிகை செலவு இருக்கும்.
இதனால், அக்டோபர் மாதத்தில் என்னென்ன தேதிகளில் வங்கிகள் செயல்படாது என்பதை கீழே விரிவாக காணலாம். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமையும் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம்.
- இந்த மாதத்தில் அக்டோபர் 2-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காந்தி ஜெயந்தி அன்று அரசு விடுமுறை ஆகும்.
- அக்டோபர் 4-ஆம் தேதி செவ்வாய்கிழமை ஆயுதபூஜை பண்டிகைக்காகவும், அக்டோபர் 5-ந் தேதி புதன்கிழமை விஜயதசமி பூஜைக்காகவும் வங்கி விடுமுறை ஆகும்.
- அக்டோபர் 8-ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை வங்கி விடுமுறை ஆகும்.
- அக்டோபர் 9-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறையுடன், மிலாடி நபி பண்டிகைக்காக சேர்த்து விடுமுறை அளிக்கப்படுகிறது.
- அக்டோபர் 22-ஆம் தேதி நான்காவது சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது.
- அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகைக்காக திங்கள்கிழமை வங்கி செயல்படாது.
மேற்கண்ட தேதிகளில் வங்கிகள் விடுமுறை என்பதால் பணப்பரிமாற்ற நடவடிக்கைகளுக்காக, பிற பணிகளுக்காக வங்கி செல்வோர் மாற்று தேதிகளில் தங்களது பணிகளை மேற்கொள்வது நல்லது ஆகும்.
மேலும் படிக்க : MIB Order : ஜீ மீடியா வழக்கில் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் உத்தரவு.. சிறு ஊடகங்களுக்கான சமவாய்ப்பு..!
மேலும் படிக்க : Rupee Value : வரலாறு காணாத ரூபாய் மதிப்பு சரிவு.. பெட்ரோல் விலையில் ஏற்படப்போகும் தாக்கம்; இந்தியா என்ன செய்யப்போகிறது?