Bank Holidays December 2023: டிசம்பர் மாதத்தில் இத்தனை நாட்கள் வங்கி விடுமுறையா? முன்கூட்டியே வேலையை முடிங்க!
டிசம்பர் மாதத்தில் நாடு முழுவதும் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
Bank Holidays December 2023: டிசம்பர் மாதத்தில் நாடு முழுவதும் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
வங்கிகள் விடுமுறை:
வார இறுதி மற்றும் விழாக்காலங்களில் வங்கிகளுக்கு பொது விடுமுறை அளிப்பது வழக்கம். அந்த வகையில், டிசம்பர் மாதத்தில் மட்டும் 18 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. சில விடுமுறை நாடு முழுவதும் அனைத்து வங்கிகளுக்கும் பொதுவாக வழங்கப்பட்டாலும், சில பகுதிகளில் சில நாட்கள் உள்ளூர் விடுமுறையும் வழங்கப்படுகிறது. அதேநேரம், அனைத்து வங்கிகளுக்குமான ஆன்லைன் சேவை தடையின்றி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை:
டிசம்பர் மாதத்தின் வார இறுதி விடுமுறையை தாண்டி, சிறப்பு தினங்களாக அனுசரிக்கப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். ஆனால், குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டுமே உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படும்.
உதாரணமாக, டிசம்பர் 19ஆம் தேதி கோவா விடுதலை நாளையொட்டி கோவாவில் வங்கிகள் மூடப்படும். ஆனால், அதே பண்டிகைக்காக தமிழ்நாட்டில் வங்கிகள் மூடப்படாது. அதேபோல, டிசம்பர் மாதத்தில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (AIBEA) 6 நாட்கள் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இதனால் டிசம்பர் மாதத்தில் 18 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை தின பட்டியல்:
- டிசம்பர் 1: சுதேசி நம்பிக்கை நாள் (நாகலாந்து, அருணாச்சல பிரதேச வங்கிகளுக்கு விடுமுறை)
- டிசம்பர் 3: ஞாயிற்றுக்கிழமை
- டிசம்பர் 4: புனித பிரான்சிஸ் சேவியரின் விழா (கோவா, திரிபுராவில் வங்கிகளுக்கு விடுமுறை)
- டிசம்பர் 9: இரண்டாவது சனிக்கிழமை
- டிசம்பர் 10: ஞாயிற்றுக்கிழமை
- டிசம்பர் 12: பா-டோகன் நெங்மிஞ்சா சங்மா (மேகாலயா)
- டிசம்பர் 13: லோசூங்/நம்சூங் (சிக்கிம் வங்கிகளுக்கு விடுமுறை)
- டிசம்பர் 14: லோசூங்/நம்சூங் (சிக்கிம் வங்கிகளுக்கு விடுமுறை)
- டிசம்பர் 17: ஞாயிற்றுக்கிழமை
- டிசம்பர் 18: யூ சோஸோதாமின் இறந்த நாள் (மேகாலயாவில் வங்கிகளுக்கு விடுமுறை)
- டிசம்பர் 19: கோவா விடுதலை நாள் (கோவாவில் வங்கிகளுக்கு விடுமுறை)
- டிசம்பர் 23: நான்காவது சனிக்கிழமை
- டிசம்பர் 24: ஞாயிற்றுகிழமை
- டிசம்பர் 25: கிறிஸ்துமஸ்
- டிசம்பர் 26: கிறிஸ்துமஸ் (மேகாலயா, தெலுங்கானாவில் வங்கிகளுக்கு விடுமுறை)
- டிசம்பர் 27: கிறிஸ்துமஸ் (மிசோரமில் வங்கிகளுக்கு விடுமுறை)
- டிசம்பர் 30: யு கியாங் நங்பா (சிக்கிம், கேகாலயாவில் வங்கிகளுக்கு விடுமுறை)
வங்கிகள் வேலைநிறுத்தம்:
- டிசம்பர் 4: பஞ்சாப் நேஷனல் வங்கி, பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி, பாரத ஸ்டேட் வங்கிகள் வேலைநிறுத்தம்.
- டிசம்பர் 5: பாங்க் ஆப் பரோடோ, பேங்க் ஆஃப் இந்தியா வங்கிகள் வேலைநிறுத்தம்.
- டிசம்பர் 6: கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிகள் வேலை நிறுத்தம்.
- டிசம்பர் 7: இந்தியன் வங்கி, யூகோ வங்கி (UCO Bank) வங்கிகள் வேலைநிறுத்தம்.
- டிசம்பர் 8: யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கிகள் வேலைநிறுத்தம்.
- டிசம்பர் 11: அனைத்து தனியார் வங்கிகளும் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.