மேலும் அறிய

Apple 3 Trillion: 3 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்.. ஆப்பிள் நிறுவனத்தில் கொட்டும் பணம்.. வரலாற்றிலேயே முதன்முறை..!

உலகிலேயே 3 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற சந்தை மதிப்பை அடைந்த முதல் நிறுவனம் என்ற பெருமையை ஆப்பிள் நிறுவனம் பெற்றுள்ளது.

உலகிலேயே 3 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற சந்தை மதிப்பை அடைந்த முதல் நிறுவனம் என்ற பெருமையை ஆப்பிள் நிறுவனம் பெற்றுள்ளது. இந்திய மதிப்பில் அந்நிறுவனத்தின் தற்போதையை மதிப்பு என்பது ரூ.2 கோடியே 46 லட்சம் கோடி ரூபாய் ஆகும். 

வரலாற்றில் முதன்முறையாக..!

நாஸ்டாக் (Nasdaq) எனப்படும் அமெரிக்க பங்கு சந்தையில் வெள்ளிக்கிழமையின் முடிவில்,  ஆப்பிள் நிறுவனத்தின் ஒரு பங்கு 193.97 அமெரிக்க டாலர் என்ற மதிப்பை எட்டியது. இதனால், அந்த நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 3.05 டிரில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்தது. இதன் மூலம் வரலாற்றிலேயே சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனம், 3 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் எனும் மதிப்பை எட்டுவது இதுவே முதன்முறையாகும். 

ஒருவழியாக வந்த சாதனை:

முன்னதாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அடுத்தடுத்த இரண்டு நாட்கள், ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது. ஆனால், நாளின் முடிவு வரை அதனை தக்க வைக்க முடியவில்லை. அதைதொடர்ந்து, கடந்த வியாழக்கிமை வரை ஒருமுறை கூட ஆப்பிள் நிறுவனம் 3 டிரில்லியன் என்ற மதிப்பை எட்டவில்லை. இந்நிலையில் தான், வெள்ளிக்கிழமை அன்று நாள் முடிவு வரையில் ஆப்பிள் நிறுவனம் 3 டிரில்லியன் என்ற சந்தை மதிப்பை எட்டியது.

மீண்டு வந்த ஆப்பிள் நிறுவனம்:

47 வயதான ஆப்பிள் நிறுவனத்தின் பங்குச்சந்தை மதிப்புகள் கடந்த ஆண்டில் கடும் வீழ்ச்சி கண்டது. வளர்ச்சியின் மந்தநிலை மற்றும் ஒட்டுமொத்த தொழில்நுட்பத்துறையையும் பாதித்த வட்டி விகிதங்களின் அதிகரிப்பு போன்ற காரணங்களால், நடப்பாண்டு தொடக்கத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குச்சந்தை மதிப்பு 2 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் கீழாக சரிந்தது.

அதிலிருந்து மீண்டு வந்து 3 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. முன்னதாக, 2018-ம் வருடம் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பை அடைந்ததும், அதன்பின் 2020-ல் 2 டிரில்லியன் அமெரிக்க டாலர் சந்தை மதிப்பை தொட்டதும், ஆப்பிள் ஏற்கெனவே எட்டிய மைல் கற்கள் ஆகும். 

காரணம் என்ன?

சர்வதேச அளவில் மந்தமடைந்திருந்த தொழில்நுட்பத் துறையில் சமீபத்தில் ஏற்பட்ட ஒரு பரந்த எழுச்சியினால் ஆப்பிள் நிறுவன பங்குகளின் விலை ஏற்றம் கண்டுள்ளது.  ஐபோனின் சுறுசுறுப்பான விற்பனையாலும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாக உள்ள "ஆப்பிள் விஷன் ப்ரோ" என்கிற கலப்பு-ரியாலிட்டி ஹெட்செட் மீதான மக்களின் உற்சாகம் ஆகியவற்றினாலும் இந்நிறுவன பங்குகள் கூடுதல் பலன் அடைந்திருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

அடுத்த இடங்களில் யார்?

ஆப்பிள் நிறுவனத்துடன் சேர்ந்து 6 நிறுவனங்கள் மட்டுமே சந்தையில் டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற மதிப்பை பெற்றுள்ளன. அவற்றில் 5 நிறுவனங்கள் தொழில்நுட்ப நிறுவனங்கள் எனபது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் நிறுவனத்தை தொடர்ந்து மைக்ரோசாப்ட் 2.5 டிரில்லியன், சவுதி அராம்கோ 2 டிரில்லியன், கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் 1.5 டிரில்லியன், அமேசான் 1.3 டிரில்லியன் மற்றும் என்விடியா 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் சந்தை மதிப்பை பெற்றுள்ளன.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (16.08.2026): ஞாயித்துக்கிழமை லக் அடிக்கப்போவது யாருக்கு? கேரளா லாட்டரி முடிவுகள்!
LIVE | Kerala Lottery Result Today (16.08.2026): ஞாயித்துக்கிழமை லக் அடிக்கப்போவது யாருக்கு? கேரளா லாட்டரி முடிவுகள்!
Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
Gold and silver rate today : தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ..
Independence Day 2026: 1947-இல் 1 ரூபாய்க்கு என்னென்ன வாங்க முடிந்தது? தங்கம் விலை எவ்வளவு இருந்தது?
1947-இல் 1 ரூபாய்க்கு என்னென்ன வாங்க முடிந்தது? தங்கம் விலை எவ்வளவு இருந்தது?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
Embed widget