75 Years of Independence: இந்திய சுதந்திரமும்.. ஓவியமும்.. ஒரு வரலாற்று பின்னணி
இந்தியா நாடு சுதந்திரம் அடைந்த இந்த ஆகஸ்ட் 15ஆம் தேதியுடன் 75 ஆண்டுகள் நிறைவு அடைந்துவிட்டது. இதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு கொண்டாட்டங்களை கடந்த ஓராண்டாக செய்து வந்தன. அத்துடன் பல ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. முன்னதாக, இந்திய சுதந்திரத்தில் பல தலைவர்கள் முக்கிய பங்கு வகித்தனர். அவர்களில் முக்கியமானவர்கள் மகாத்மா காந்தியடிகள் மற்றும் முன்னாள் பிரதமர் நேரு.
சமீப காலங்களாக இந்த முக்கிய தலைவர்களின் பங்களிப்பை கேள்வி எழுப்பும் வகையில் சமீபத்தில் கருத்துகள் எழுந்து வருகின்றன. அத்துடன் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் வெற்றி ஆகியவை இதுபோன்ற கருத்துகளை மேலோங்கி இருக்கும் வகையில் காட்டுகின்றன. கடந்த சில ஆண்டுகளாவே இது தொடர்பான கருத்துகள் வாட்ஸ் அப், ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் மேலோங்கி வருகிறது. வரலாறு சம்பவங்களை இதுபோன்ற சமூக வலைதளங்களில் படிப்பவர்களுக்கு இப்படி தான் கருத்துகள் தோன்றும்.
சுதந்திர போராட்டம் தொடர்பாக எளிதாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அந்த சமயத்தில் இருந்த ஓவியங்களை மற்றும் ஓவியர்களின் படைப்புகளை பார்க்க வேண்டும். அவர்கள் அப்போதைய நிலையை மிகவும் எளிதாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் தெரிவிப்பார்கள். சுதந்திரம் தொடர்பான ஓவியங்களில் பொதுவாக காந்தியடிகளை முக்கியமான நபராக ஓவியர்கள் சித்தரித்திருப்பார்கள். குறிப்பாக சம்பாரான் சத்தியாகிரகம், உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு உள்ளிட்ட போராட்டங்களில் காந்தியடிகளை முக்கியமான நபராக சித்தரித்திருப்பார்கள். இதன்மூலம் அவருடைய பங்கு எத்தகைய சிறப்புடையது என்று தெரிந்து கொள்ளலாம்.
குறிப்பாக கான்பூர் பகுதியில் ஷியாம் சுந்தர் லால் என்பவர் ஓவியம் தொடர்பான தொழிலை நடத்தி வந்தார். அவருடைய ஓவிய கூடத்திற்கு பிரபு தாயல் என்பவர் பல ஓவியங்களை கொடுத்து வந்தார். அப்போது இருந்த ஓவியர்களைவிட மிகவும் வித்தியாசமான ஓவியங்களை இவர் வரைந்து வந்தார். அந்தவகையில் சத்தியகிரக போராட்டம் தொடர்பாக மகாத்மா காந்தி தொடர்பாக ஒரு படத்தை வரைந்திருந்தார். அதில் காந்தி நடுவில் அமர்ந்திருப்பது போலவும், பின்புறத்தில் மோத்திலால் நேரு மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகிய இருவரும் இருப்பது போல் ஓவியம் அமைந்திருந்தது.
இதைத் தொடர்ந்து அவருடைய மற்றொரு முக்கியமான ஓவியம் ஒன்று இருந்தது. அதில் சுதந்திர போராட்டத்தை ராவணன் -ராமர் சண்டையை போல் சித்தரித்து வரைந்திருந்தார். அதில் காந்தியடிகள் தன்னுடைய அகிம்சை கொள்கைகளை வைத்து வன்முறையை கையாண்ட பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக எப்படி செயல்பட்டார் என்பதை காட்டினார்.
அந்த ஓவியத்தில் காந்தியடிகளுக்கு உதவியாக அனுமானை போல் நேரு சித்தரிக்கப்பட்டிருந்தார். மேலும் காந்தியடிகளின் கையில் வில் அம்புகளுக்கு பதிலாக அவருக்கு மிகவும் நெருக்கமான சக்கரம் இருந்தது. இந்த ஓவியம் பலரையும் கவர்ந்தது. இவை தவிர பல்வேறு இவருடைய பல்வேறு ஓவியங்கள் சுதந்திர போராட்டம் தொடர்பாக பலருடைய வரவேற்பை பெற்றது. எனினும் சமீப காலங்களாக இவருடைய சில ஓவியங்களுக்கு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இவருடைய ஓவியங்கள் சுதந்திர போராட்டத்தை மட்டும் குறிக்கவில்லை அவை சுதந்திர இந்தியாவின் அடையாளத்தை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையின் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் கருத்துகளாகும். இதற்கும் ஏபிபி நாடுவிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.