மேலும் அறிய

VinFast MPV EV: வின்ஃபாஸ்ட் மின்சார 7 சீட்டருக்கான முன்பதிவு தொடக்கம் - கட்டணம் என்ன? பேட்டரி, ரேஞ்ச், விலை

VinFast MPV EV VF MPV 7: வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் புதிய மின்சார 7 சீட்டர் கார் மாடலுக்கான முன்பதிவு இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.

VinFast MPV EV VF MPV 7: வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் புதிய மின்சார 7 சீட்டர் கார் மாடலானது 2+3+2 இருக்கை கான்ஃபிகரேஷனில் சந்தைப்படுத்தப்பட உள்ளது.

வின்ஃபாஸ்ட் 7 சீட்டர் மின்சார கார் - முன்பதிவு தொடக்கம்

வின்ஃபாஸ்ட் நிறுவனம் தனது புதிய 7 சீட்டர் மின்சார எம்பிவி தொடர்பான பல டீசர்களை வெளியிட்ட நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ முன்பதிவையும் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. அதன்படி, இந்த மாதம் அறிமுக வாய்ப்புள்ளதாக கூறப்படும் காரை, 21 ஆயிரம் என்ற கட்டணத்தை செலுத்தி பயனர்கள் பதிவினை மேற்கொள்ளலாம். இந்திய சந்தைக்கான ப்ராண்டின் புதிய மின்சார எம்பிவி கார் மாடலானது உள்ளூர் சந்தையில், பெட்ரோல் மற்றும் பெட்ரோல் - ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் உள்ள டொயோட்டாவின் இன்னோவா க்ரிஷ்டாவுடன் போட்டியிட உள்ளது.

வின்ஃபாஸ்ட் 7 சீட்டர் மின்சார எம்பிவி - டிசைன் விவரங்கள்:

வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் மலிவு விலை மின்சார கார் மாடலாக ஓட்டுனர் மற்றும் 6 பயணிகளுக்கு என, 2+3+2 இருக்கை கான்ஃபிகரேஷனில் VF MPV 7 சந்தைப்படுத்தப்பட உள்ளது. இது 4 ஆயிரத்து 740 மில்லி மீட்டர் நீளம், ஆயிரத்து 872 மில்லி மீட்டர் அகலம், ஆயிரத்து 734 மில்லி மீட்டர் உயரத்தை கொண்டுள்ளது. அதன்படி, உள்ளூர் சந்தையில் வெகுஜன சந்தையில் விற்பனை செய்யப்படும் ஒரே மின்சார எம்பிவி கார் மாடலான, கியா காரென்ஸ் க்ளாவின்ஸை காட்டிலும் அளவீடுகள் அடிப்படையில் வின்ஃபாஸ்டின் புதிய கார் மேம்பட்டதாக உள்ளது. VF MPV 7 மாடலானது 2 ஆயிரத்து 840 மில்லி மீட்டர் வீல்பேஸ் மற்றும்185 மில்லி மீட்டர் க்ரவுண்ட் க்ளியரன்ஸை கொண்டுள்ளது. அதேநேரம், உள்ளூரில் நிலவும் மோசமான சாலை கட்டமைப்பை கருத்தில் கொண்டு, காலப்போக்கில் இதை மேம்படுத்தும் எனவும் கூறப்படுகிறது. 


VinFast MPV EV: வின்ஃபாஸ்ட் மின்சார 7 சீட்டருக்கான முன்பதிவு தொடக்கம் - கட்டணம் என்ன? பேட்டரி, ரேஞ்ச், விலை

வின்ஃபாஸ்ட் 7 சீட்டர் மின்சார எம்பிவி - பேட்டரி விவரங்கள்

ஒட்டுமொத்தமாக ஆயிரத்து 875 கிலோ எடையை கொண்டு, லக்கேஜ்களை வைப்பதற்காக ஆயிரத்து 240 லிட்டர் கார்கோ ஸ்பேஸை பெற்றுள்ளது. சர்வதேச சந்தையில் இந்த காரானது ஒற்றை மோட்டாரை கொண்ட ஃப்ரண்ட் வீல் ட்ரைவ் வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது. 60.2KWh பேட்டரியானது மோட்டாருக்கு ஆற்றலை வழங்குகிறது.6.9KW திறன் கொண்ட ஏசி சார்ஜிங் மற்றும் 80KW திறன் கொண்ட டிசி சார்ஜிங் திறனையும் பெற்றுள்ளது. 10 முதல் 70 சதவிகித சார்ஜிங்கை வெறும் 30 நிமிடங்களில் எட்டலாம் என கூறப்படுகிறது. VF MPV 7 காரில் ஈகோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் என மூன்று ட்ரைவ் மோட்கள் உள்ளன. காரின் ரிஜெனரேட்டிவ் ப்ரேக்கிங் சிஸ்டத்தின் தீவிரத்தன்மையை திருத்தும் விதமாக பேடல் ஷிஃப்டர்களும் இடம்பெற்றுள்ளன. பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 10 விநாடிகளில் எட்டும் என வின்ஃபாஸ்ட் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வின்ஃபாஸ்ட் 7 சீட்டர் மின்சார எம்பிவி - வெளிப்புற டிசைன்

வெளிப்புறத்தில் VF MPV 7 காரானது எல்இடி முகப்பு விளக்குகள், 19 இன்ச் அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது. உட்புறத்தில் PM 2.5 ஏர் ஃபில்டருடன் கூடிய சிங்கிள் ஜோன் ஆட்டோமேடிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 6 வழிகளில் மேனுவலாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, 4 வழிகளில் மேனுவலாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய முன்புற பயணியின் இருக்கை, இரண்டு யுஎஸ்பி டைப்-சி போர்ட்கள், இரண்டு யுஎஸ்பி டைப்-ஏ போர்ட்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. பாதுகாப்பை உறுதிப்படுத்த 4 ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், ட்ராக்‌ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ரோல் - ஓவர் மிடிகேஷன், ரிவெர்ஸ் கேமரா மற்றும்ரியர் பார்கிங் சென்சார்கள் போன்ற பிரதான தொழில்நுட்ப அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன.


VinFast MPV EV: வின்ஃபாஸ்ட் மின்சார 7 சீட்டருக்கான முன்பதிவு தொடக்கம் - கட்டணம் என்ன? பேட்டரி, ரேஞ்ச், விலை

7 சீட்டர் மின்சார எம்பிவி - இல்லாத ப்ரீமியம் அம்சங்கள்

VF MPV 7 கார் மாடலில் பல ப்ரீமியம் அம்சங்கள் இடம்பெறாதது இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கலாம். அதில் பனோரமிக் சன்ரூஃப், வெண்டிலேடட் மற்றும் எலெக்ட்ரிகலி அட்ஜெஸ்டபள் முன்புற இருக்கைகள், 360 டிகிரி கேமரா சிஸ்டம், லெவல் 2 ADAS, ஆகியவை அடங்கும். உள்ளூர் சந்தைக்கு என பிரத்யேகமாக சில அம்சங்களை இணைக்க மறுவடிவமைப்பு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் மற்றும் ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே ஆகியவை வழங்கப்படலாம்.

VF MPV 7 - விலை, ரேஞ்ச்

வரும் ஏப்ரல் 15ம் தேதி சந்தைப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படும் இந்த காரின் விலை, 19 லட்சத்தில் தொடங்கி 20 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 450 முதல் 500 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Honda SUV: ரூ.17 லட்சம் பட்ஜெட்டில் ஹோண்டாவின் புதிய 7 சீட்டர்..! ஹைப்ரிட் மைலேஜ் - வசதிகள், அம்சங்கள்
ரூ.17 லட்சம் பட்ஜெட்டில் ஹோண்டாவின் புதிய 7 சீட்டர்..! ஹைப்ரிட் மைலேஜ் - வசதிகள், அம்சங்கள்
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Hero First Electric Bike: இப்போ வாங்கடா போட்டிக்கு.! தாறுமாறான EV பைக்கை களமிறக்கும் ஹீரோ மோட்டோகார்ப்; அறிமுகம் எப்போ.?
இப்போ வாங்கடா போட்டிக்கு.! தாறுமாறான EV பைக்கை களமிறக்கும் ஹீரோ மோட்டோகார்ப்; அறிமுகம் எப்போ.?
Maruti Fronx on Discount: செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Embed widget