மேலும் அறிய

Affordable Mileage Bikes: 60 - 80 கிமீ மைலேஜ்; மலிவு விலை; உங்களுக்கான பெஸ்ட் பைக் எதுன்னு வாங்குறதுக்கு முன்னாடி தெரிஞ்சுக்கோங்க

மலிவான விலையில், 60 முதல் 80 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தரும் பைக்கை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், இந்த செய்தி உங்களுக்குத் தான். படித்துவிட்டு, உங்களுக்கான பெஸ்ட் பைக்கை தேர்ந்தெடுங்கள்.

இந்திய வாடிக்கையாளர்கள் எப்போதும் மலிவு விலையில் நல்ல மைலேஜ் தரும் பைக்குகளை தேடிக் கொண்டிருக்கிறார்கள். தினசரி பயணங்களுக்கு குறைந்த பராமரிப்பு செலவுகளைக் கொண்ட பைக்குகளை மக்கள் விரும்புகிறார்கள். இப்போது, உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யக்கூடிய சில பிரபலமான பைக்குகளை பற்றி நாங்கள் சொல்லப் போகிறோம். இந்த பைக்குகளின் விலை மற்றும் மைலேஜை ஆராய்ந்து, உங்களுக்கான சிறந்த பைக்கை தேர்ந்தெடுங்கள்.

TVS Sport

இந்த பட்டியலில் முதல் இடம் பிடிக்கும் பைக் டிவிஎஸ் ஸ்போர்ட். சென்னையில் டிவிஎஸ் ஸ்போர்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை 63,300 ரூபாயில் தொடங்குகிறது. இந்த பைக் 109.7 சிசி, ஒற்றை சிலிண்டர், 4-ஸ்ட்ரோக் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 6,350 ஆர்பிஎம்மில் 6.03 கிலோவாட் பவரையும், 4,500 ஆர்பிஎம்மில் 8.7 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இந்த டிவிஎஸ் பைக் மணிக்கு 90 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.  நிறுவனத்தின் கூற்றுப்படி, டிவிஎஸ் ஸ்போர்ட் லிட்டருக்கு 80 கிமீ எரிபொருள் சிக்கனத்தைக் கொண்டுள்ளது.

Hero HF Deluxe

இரண்டாவது பைக் ஹீரோ HF டீலக்ஸ். இது ஒரு மலிவு விலை பைக். சென்னையில் இதன் எக்ஸ்-ஷோரூம் விலை 60,631 ரூபாயில் தொடங்குகிறது. இந்த பைக் 97.2 சிசி, ஒற்றை சிலிண்டர், 4-ஸ்ட்ரோக் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 5.9 kW சக்தியையும் 8.05 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இந்த மோட்டார் சைக்கிள் மேம்பட்ட திட்டமிடப்பட்ட எரிபொருள் இன்ஜெக்ஷன் அமைப்பைக் கொண்டுள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த ஹீரோ பைக், ஒரு லிட்டருக்கு 75 கிமீ மைலேஜை வழங்குகிறது..

Honda Shine

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடிக்கும் பைக், ஹோண்டா ஷைன் 100 ஆகும். இதன் ஆரம்ப விலை 65,243 ரூபாயாகும் (எக்ஸ்-ஷோரூம்). இந்த பைக் 4-ஸ்ட்ரோக் SI எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது, 7,500 rpm-ல் 5.43 kW ஆற்றலையும், 5,000 rpm-ல் 8.05 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 65 கிலோ மீட்டர் எரிபொருள் சிக்கனத்தை(மைலேஜ்) வழங்குகிறது.

TVS Radeon

இந்த பட்டியலில் நான்காவது பைக் டிவிஎஸ் ரேடியான் ஆகும். இது 109.7 சிசி, 4-ஸ்ட்ரோக் பிஎஸ்-VI எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த எஞ்சின் 7,350 ஆர்பிஎம்மில் 6.03 கிலோவாட் பவரையும், 4,500 ஆர்பிஎம்மில் 8.7 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இந்த மோட்டார் சைக்கிள் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 63 கிலோமீட்டர் தூரம் செல்லும் என்று நிறுவனம் கூறுகிறது. டிவிஎஸ் ரேடியானின் எக்ஸ்-ஷோரூம் விலை 68,000 ரூயாயில் தொடங்குகிறது.

இந்த பட்டியலில் உள்ள பைக்குகள் அனைத்துமே 70,000 ரூபாய்க்கும் கீழ் உள்ள பைக்குகள் தான். அதே போல், 60 கிலோ மீட்டருக்கும் மேல் மைலேஜை வழங்குகின்றன. அதனால், இந்த பைக்குகளில் ஒன்று, உங்கள் அன்றாட பயனங்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு இந்த பட்டியலில் இருந்து ஒரு பைக்கை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

தலைப்பு செய்திகள்

அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
TVS Bike Price Hike: டிவிஎஸ் பைக் வாங்க போறீங்களா?.. சத்தம் இல்லாமல் உயர்ந்த விலை.. எவ்வளவு?
TVS Bike Price Hike: டிவிஎஸ் பைக் வாங்க போறீங்களா?.. சத்தம் இல்லாமல் உயர்ந்த விலை.. எவ்வளவு?
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
Embed widget