மேலும் அறிய

Budget Hatchbacks: ஹேட்ச்பேக்-னாலே நாங்க தான்.. சிட்டியில் ஆதிக்கம் - குறைஞ்ச விலை, நிறைஞ்ச மைலேஜ் மாடல்கள்

Budget Hatchbacks: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கிடைக்கும் டாப் 5 எண்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் கார் மாடல்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Budget Hatchbacks: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கிடைக்கும் டாப் 5 எண்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் கார் மாடல்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் கார்கள்..

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, ஹேட்ச்பேக் கார்கள் இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் முதுகெலும்பாக இருந்து வருகின்றன. எஸ்யுவி கார்கள் பிரபலமடைய தொடங்குவதற்கு முன்பும், செடான் கார்கள் அறிமுகமாவதற்கு முன்பும், ஹேட்ச்பேக் கார்கள் நடைமுறைக்கு ஏற்ற குடும்பக் கார்களாகக கொண்டாடப்பட்டன. எஸ்யுவி கார்களின் மோகம் அதிகரித்து இருந்தாலும்,நாட்டில் அதிகம் விற்பனையாகும் கார் வகைகளில் ஹேட்ச்பேக் தொடர்கிறது. பார்க்கிங் சிக்கல் நிறைந்த நகரங்களிலும், முக்கிய நாட்களில் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஒன்று அல்லது இரண்டு மணிநேரத்தை எளிதாக வீணடிக்கக் கூடிய இடங்களிலும் இவை மிகவும் நடைமுறைக்கு ஏற்றவையாக இருக்கின்றன. அந்த வகையில் தினசரி அலுவலகப் பயணங்களுக்கு ஏற்ற 5 ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் கார்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

சிட்டிக்கு ஏற்ற ஹேட்ச்பேக்

1. மாருதி சுசூகி ஆல்டோ 

மாருதி சுசூகி ஆல்டோ சுமார் 30 ஆண்டுகளாக இந்திய சந்தையில் உள்ளது. இந்த ஹேட்ச்பேக் ப்ராண்டின் போர்ட்ஃபோலியோவில் உள்ள மிகப்பழமையான மாடல்களில் ஒன்றாகும். ஆல்டோவில் K10C 3 சிலிண்டர் நேட்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 65.71 bhp மற்றும் 89 Nm ஆற்றலை உற்பத்தி செய்கிறது. 5 ஸ்பீட் மேனுவல் மற்றும் AGS ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. இதன் சிறிய அளவு காரணமாக நகரப் பயன்பாட்டிற்கு மிகவும் பொருத்தமான காராக விளங்குகிறது. ரூ.3.69 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற தொடக்க விலையை கொண்டுள்ள இந்த காரானது, அதிகபட்சமாக சிஎன்ஜி எடிஷனில் கிலோவிற்கு சுமார் 34 கிலோ மீட்டர் தூரம் வரை மைலேஜ் அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2. ரெனால்ட் க்விட்

ரெனால்ட் க்விட் சமீபத்தில் சில சிறிய அப்க்ரேட்களை பெற்றது. அதனுடன் மாடலின் வேரியன்ட் வரிசையையும் குறைத்து, இரண்டே வேரியன்ட்களாக மாற்றியுள்ளது. ரெனால்ட் க்விட், 68.06 bhp சக்தியையும் 92.5 Nm டார்க்கையும் உற்பத்தி செய்யும் 1.0லி 3-சிலிண்டர் நேட்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது 5 ஸ்பீட் மேனுவல் அல்லது 5 ஸ்பீட் AMT டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. ரூ. 4.53 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற தொடக்க விலையை கொண்டுள்ள ரெனால்ட் க்விட்டானது, அதிகபட்சமாக சுமார் 22 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது.

3. ஹுண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ்

ஹுண்டாய் நிறுவனத்தின் விரிவான தயாரிப்பு வரிசையில் க்ராண்ட் ஐ10 நியோஸ், எண்ட்ரி லெவல் கார் மாடலாகும். இது 81 bhp மற்றும் 113.8 Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் 1.2L நேட்சுரலி ஆஸ்பிரேட்டட் 4 சிலிண்டர் கப்பா பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. 5 ஸ்பீட் மேனுவல் அல்லது 5 ஸ்பீட் AMT டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. ரூ.5.59 லட்சம் என்ற தொடக்க விலையை கொண்டுள்ள இந்த காரானது, அதிகபட்சமாக சிஎன்ஜி எடிஷனில் 27 கிலோ மீட்டர் தூரம் வரை மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது.


Budget Hatchbacks: ஹேட்ச்பேக்-னாலே நாங்க தான்.. சிட்டியில் ஆதிக்கம் - குறைஞ்ச விலை, நிறைஞ்ச மைலேஜ் மாடல்கள்

4. டாடா டியாகோ

டாடா நிறுவனத்தின் ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் காரான டியாகோ, ஆண்டின் தொடக்கத்தில்  ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்டை பெற்றது. இதில் 86 bhp மற்றும் 113 Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் 1.2L 3-சிலிண்டர் நேட்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் இடம்பெற்றுள்ளது. அதில்5 ஸ்பீட் மேனுவல்  மற்றும் பேடில் ஷிஃப்டர்களுடன் கூடிய AMT ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. இந்த செக்மென்ட்டிலேயே அதிக அம்சங்கள் நிறைந்த கார் என்று டாடா டியாகோவை குறிப்பிடலாம். இதன் சிறிய தோற்றம் நகரப் போக்குவரத்தில் எளிதாக பயணிக்க அனுமதிக்கின்றன.  ரூ. 4.69 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) என்ற தொடக்க விலையை கொண்டுள்ள டாடா டியாகோவின் சிஎன்ஜி எடிஷன் அதிகபட்சமாக 28 கிலோ மீட்டர் மைலேஜ் அளிப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:Off Road SUV: ஆஃப் ரோட் கிங், 4 ஸ்டார் ரேட்டிங், கெத்தான ரக்கட் லுக் - GenZ-க்கு ரூ.7,900 போதும், முழு EMI விவரங்கள்

5. சிட்ரோயன் C3X 

ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் பிரிவைப் பொறுத்தவரை, சிட்ரோயன் C3X குறைத்து மதிப்பிடப்பட்ட காராகும். இந்த ஹேட்ச்பேக்கிற்கு ரேலி பந்தயப் பாரம்பரியம் உள்ளது. 80.46 bhp மற்றும் 115 Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் 1.2L 3 சிலிண்டர் நேட்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 108.5 bhp மற்றும் 190 Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் 1.2L 3 சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என C3X இரண்டு வெவ்வேறு இன்ஜின் ஆப்ஷன்களை கொண்டுள்ளது இதில், முதலாவது 5 ஸ்பீட்மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் 6 ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. ரூ. 4.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற தொடக்க விலையை கொண்டுள்ள, சிட்ரோயன் C3X-ன் சிஎன்ஜி வேரியண்ட் அதிகபட்சமாக 28 கிலோ மீட்டர் தூரம் வரை மைலேஜ் அளிக்கிறதாம்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Honda E Scooters: ஒரே சார்ஜில் இத்தனை கி.மீட்டர் மைலேஜா? பட்ஜெட் விலையில் மாஸான ஹோண்டா இ ஸ்கூட்டர்கள் - என்னென்ன?
Honda E Scooters: ஒரே சார்ஜில் இத்தனை கி.மீட்டர் மைலேஜா? பட்ஜெட் விலையில் மாஸான ஹோண்டா இ ஸ்கூட்டர்கள் - என்னென்ன?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget