மேலும் அறிய

EV With 500 Km Range: மீடியம் பட்ஜெட்டில் 500+KM ரேஞ்ச் - வசதிகள், அம்சங்களுக்கு குறையில்லாத மின்சார கார்கள் - டாப் 5

EV With 500 Km Range: இந்திய மின்சார கார் சந்தையில் 500 கிலோ மீட்டர் ரேஞ்ச் (மைலேஜ்) வழங்கக்கூடிய, பட்ஜெட் கார் மாடல்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

EV With 500 Km Range: இந்திய மின்சார வாகன சந்தையில் 500 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும், வெகுஜன கார் மாடல்களின் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

மின்சார கார் மாடல்கள்

எரிபொருட்களின் நிலையற்ற விலை சூழலுக்கு மத்தியில், இந்தியர்கள் பலரும் மின்சார கார்களை நோக்கி தங்களது கவனத்தை திருப்ப தொடங்கியுள்ளனர். ஆனால், அந்த பிரிவில் கார்களின் விலை சிலருக்கு அதிகமாக தோன்றலாம். அப்படி கருதுபவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால்? நடுத்தர பட்ஜெட்டில் 500 கிலோ மீட்டருக்கும் அதிகமான ரேஞ்ச் அளிக்கக் கூடிய பல கார் மடல்களும் இந்திய சந்தையில் கிடைக்கிறது. இவை தினசரி நகர்ப்புற பயணங்களுக்கு மட்டுமின்றி, நெடுஞ்சாலை பயணங்களுக்கும் உரிய திட்டமிடலுடன் அவ்வப்போது பயன்படுத்த முடியும். இதில் டாடாவின் கர்வ் மாடல் தொடங்கி மஹிந்த்ராவின் BE 6e உள்ளிட்ட மாடல்களும் அடங்கும்.

500+ கி.மீ., ரேஞ்ச் அளிக்கும் மின்சார கார்கள்:

1. மஹிந்த்ராவின் BE 6e

பணத்திற்கு நிகரான மதிப்பு, கரடுமுரடான தோற்றம் மற்றும் வலுவான ரேஞ்சை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு Mahindra BE 6e கார் மாடல் நல்ல தேர்வாக இருக்கும். 18 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயில் தொடங்கி 28லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் வரை இந்த காரின் விலை நீள்கிறது. 59KWh மற்றும் 79KWh என இரண்டு பேட்டரி ஆப்ஷன்களை கொண்டு, 557 முதல் 683 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிப்பதாக நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 5 சீட்டரானது 20 நிமிடங்களில் 80 சதவிகிதம் வரை சார்ஜிங் நிலையை அடையக்கூடும். உரிய முறையில் திட்டமிட்டால் தாராளமான இதனை, நகர்ப்புறங்களில் மட்டுமின்றி சில தேசிய நெடுஞ்சாலை பயணங்களுக்கும் பயன்படுத்தலாம்.

EV With 500 Km Range: மீடியம் பட்ஜெட்டில் 500+KM ரேஞ்ச் - வசதிகள், அம்சங்களுக்கு குறையில்லாத மின்சார கார்கள் - டாப் 5

2. டாடா கர்வ் மின்சார எடிஷன்

டாடா கர்வின் மின்சார எடிஷனின் விலை வரம்பானது 17 லட்சத்து 49 ஆயிரம் ரூபாயில் தொடங்கி, 22 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் வரை நீள்கிறது. 45KWh மற்றும் 55KWh என இரண்டு பேட்டரி ஆப்ஷன்களை கொண்டு, 430 கிலோ மீட்டர் தொடங்கி 585 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிப்பதாக தயாரிப்பு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 10 முதல் 80 சதவிகித சார்ஜிங் நிலையை 40 நிமிடங்களில் எட்டும் என கூறப்படுகிறது. பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ள இந்த காரானது, 20 தொழில்நுட்ப அம்சங்களை உள்ளடக்கிய லெவல் 2 ADAS தொழில்நுட்பத்தையும் பெற்றுள்ளது.

EV With 500 Km Range: மீடியம் பட்ஜெட்டில் 500+KM ரேஞ்ச் - வசதிகள், அம்சங்களுக்கு குறையில்லாத மின்சார கார்கள் - டாப் 5

3. மஹிந்த்ரா XEV 9e

மஹிந்த்ராவின் மற்றொரு போர்ன் எலெக்ட்ரிக் வாகனமான XEV 9e கார் மாடலின் விலை, 21 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயில் தொடங்கி 31 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. 59KWh மற்றும் 79KWh என இரண்டு பேட்டரி ஆப்ஷன்களை கொண்டு, 542 கிலோ மீட்டர் தொடங்கி 656 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிப்பதாக தயாரிப்பு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் எனும் வேகத்தை 6.8 விநாடிகளில் எட்டும் திறனை கொண்டுள்ளது. பயணிக்கும் இலக்கை கருத்தில் கொண்டு நெடுஞ்சாலை பயணங்களுக்கும் இந்த காரை தாராளமாக பயன்படுத்தலாம். 7 ஏர்பேக்குகள் உள்ளிட்ட அம்சங்களை கொண்டு, பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.

4. டாடா ஹாரியர் மின்சார கார்

ஆல் வீல் ட்ரைவ் அம்சம் கொண்ட நாட்டின் முதல் மின்சார எஸ்யுவி ஆன டாடா ஹாரியரின் விலை, 21 லட்சத்து 49 ஆயிரத்தில் தொடங்கி 30 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் வரை நீள்கிறது. 65KWh மற்றும் 75KWh என இரண்டு பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கும் இந்த காரானது, அதிகபட்சமாக 622 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிப்பதாக தயாரிப்பு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் எனும் வேகத்தை 6.3 விநாடிகளிலேயே எட்டுகிறது. 7 ஏர்பேக்குகள் உள்ளிட்ட அம்சங்களை கொண்டு, பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.

5. BYD ஆட்டோ 3

நடுத்தர விலையில் 500 கிலோ மீட்டருக்கும் அதிகமான மைலேஜ் வழங்கக் கூடிய காராக, BYD நிறுவனத்தின் ஆட்டோ 3 மாடல் உள்ளது. இரண்டு பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கும் நிலையில், பெரிய 60.48KWh பேட்டரி பேக்கை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 521 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிக்குமாம். பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் எனும் வேகத்தை 7.3 விநாடிகளில் எட்டுமாம். காரின் விலையானது 24.99 லட்சத்தில் தொடங்கி 33 லட்சத்து 99 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
TVS Bike Price Hike: டிவிஎஸ் பைக் வாங்க போறீங்களா?.. சத்தம் இல்லாமல் உயர்ந்த விலை.. எவ்வளவு?
TVS Bike Price Hike: டிவிஎஸ் பைக் வாங்க போறீங்களா?.. சத்தம் இல்லாமல் உயர்ந்த விலை.. எவ்வளவு?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை

Embed widget