Royal Enfield Shotgun:"போர் கண்ட சிங்கம்.." ராயல் என்ஃபீல்ட் ஷாட்கன் 650 விரைவில் சந்தைக்கு வருகிறது.. வைரலாகும் புகைப்படங்கள்
ஷாட்கன் பைக்கின் ஸ்பை போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது
ராயல் என்ஃபீல்ட் ஷாட்கன் 650:
"போர் கண்ட சிங்கம்.." இந்த பாடலை கேட்டதும் பைக் ஆர்வலர்களுக்கு சட்டென்று நினைவுக்கு வருவது ராயல் என்ஃபீல்ட் தான். உண்மையில் இரண்டாம் உலகப்போர் சமயத்தில், ராணுவ வீரர்கள் பயன்பாட்டுக்கான பைக்குகளை தயாரிக்க ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம்தான் ராயல் என்ஃபீல்ட். அந்த ராயல் என்ஃபீல்ட் இப்போ இன்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகியவை தயாரிக்கப்படும் பிளாட்ஃபார்மில் 3 புதிய க்ரூஸர் பைக்குகளை உருவாக்கி வருகிறது. சூப்பர் மீட்டியார், தண்டர்பேர்ட் X650 மற்றும் ஷாட்கன். இதில் ஷாட்கன் பைக்கின் ஸ்பை போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
கான்செப்ட் முதல் ரோட் டெஸ்ட் வரை:
EICMA Show-வில் ராயல் என்ஃபீல்ட் காட்சிக்கு வைத்திருந்த பைக்கை காட்டிலும், தற்போது டெஸ்ட் செய்யப்பட்டு வரும் ஷாட்கன் பைக்கின் அலாய் வீல்கள் இரண்டு வண்ணங்களில் தனித்துவமான வடிவமைப்பில் இருக்கிறது. ஸ்பை போட்டோக்களில் டெஸ்ட் பைக்கின் டிசைன் முழுமை பெற்று காணப்படுவதால் இது கூடிய விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம். தயாரிப்பில் இருக்கும் மூன்றும் க்ரூஸர் பைக்குகளாக இருந்தாலும், டிசைன் கோட்பாட்டில் வேறுபடுத்திக் காட்டுகிறது ராயல் என்ஃபீல்ட். முன்பே கூறியது போல கடந்த ஆண்டு EICMA நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட SG650 கான்செப்ட் தான் இந்த புதிய ஷாட்கன்.
டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள்:
முன்பக்கத்தில் அப்சைட் டவுன் (USD) ஃபோர்க்குகள் ராயல் என்ஃபீல்ட் பைக்குகளுக்கு புதுசு. தனித்தனியான ஸ்ப்ளிட் சீட்டுகளுடன் வழக்கமான மட்கார்டுகளுடன் கம்பீரமாக இருக்கிறது ஷாட்கன். மீட்டியார் 350-ல் இருப்பதை போன்ற ஸ்பீடோமீட்டர் கன்சோலில் நேவிகேஷன் வசதியும் உள்ளது. ரியர் வியூவ் மிரர்கள் ஹேண்டில்பார் நுனியில் இணைக்கப்பட்டுள்ளன. ராயல் என்ஃபீல்டின் ட்ரேட் மார்க் டிசைனில் இருக்கும் பெரிய பெட்ரோல் டேங்க்குக்கு கீழே இரண்டு பக்கமும் ஃபாக் லேம்ப் மற்றும் ஒரு கிராஷ் கார்டு ஸ்டாண்டர்டாக வருகிறது. 6-ஸ்பீட் கியர்பாக்ஸ் 650cc ஆயில்-கூல்டு பேரலல்-ட்வின் இன்ஜினுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 47 hp பவரையும் 52 nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. ராயல் என்ஃபீல்டின் ஹண்டர் 350 அடுத்த மாதம் 4 ஆம் தேதி அறிமுகப்படுத்தவுள்ள நிலையில், இந்த ஷாட்கன் பைக் எப்போது வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. ராயல் என்ஃபீல்ட் பைக்குகளில் ஹன்டர் 350 விலை குறைவான பைக்காக இருக்கலாம் என்று தெரிகிறது, இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 1.3 முதல் 1.4 லட்சம் வரை, இது தற்போதைய ராயல் என்ஃபீல்டு புல்லட்டை விட 10,000/- ரூபாய் குறைவு.