Tata Turbo Engine SUV: ரூ.10 லட்சத்துக்கே 3 டர்போ இன்ஜின் கார்கள் - மிடில் கிளாஸை வளைக்க டாடா பயங்கர திட்டம்
Tata Hybrid SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 10 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் 3 டர்போ இன்ஜின் கார் மாடல்களை அறிமுகப்படுத்த டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Tata Hybrid SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டாடா நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள 3 டர்போ இன்ஜின் கார் மாடல்கள் குறித்த விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
டாடாவின் டர்போ இன்ஜின் கார் மாடல்கள்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் காம்பேக்ட் எஸ்யுவிகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேநேரம், அதிக விலை இல்லாத அம்சங்கள் நிறைந்த ஸ்டைலான கார்களையே பயனர்கள் தேடுகின்றனர். இத்தகைய இலக்குள்ள வாடிக்கையாளர்களை தன் பக்கம் இழுப்பதற்கு ஏற்ப, 10 லட்ச ரூபாயில் டாடா நிறுவனம் மூன்று புதிய காம்பேக்ட் எஸ்யுவிக்களை களமிறக்க திட்டமிட்டுள்ளது. இதில் ஒன்று முற்றிலும் புதிய கார் மாடலாகவும், மற்ற இரண்டு ஏற்கனவே விற்பனையில் உள்ள டாப் ஸ்பெக் எடிஷன்களாக இருக்கும். அவற்றின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
1. டாடா ஸ்கார்லெட்
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முற்றிலும் புதிய கார் மாடலாக ஸ்கார்லெட் கார் மாடல் உருவாகி வருகிறது. நிறுவனத்தின் புகழ்பெற்ற பழைய கார் மாடலான சியாராவை அடிப்படையாக கொண்டு, புதிய கார் தயார் செய்யப்பட்டு வருகிறது. இது ரெட்ரோ தோற்றத்துடன் சமகால வாடிக்கையாளர்களையும் ஈர்க்கும் வகையிலான கலவையில் தயாராகிறது. இதில் 1.2 லிட்டர் டர்போ சார்ஜ்ட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களை பெறக்கூடும். நகர்ப்புறங்களில் எளிமையாக கையாள்வதற்கு ஏற்ற சக்தி மற்றும் செயல்திறன் கொண்ட கார்களை விரும்பும், இளைஞர்களை கவரும் வகையில் ஸ்கார்லெட்டை டாடா நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.9 லட்சத்திற்கும் குறைவாகவே நிர்ணயிக்கப்படக்கூடும். புதியதாகவும், சமகாலத்திற்கு ஏற்றதாகவும் மலிவு விலையில் காரை எதிர்பார்ப்பவர்களுக்கு ஸ்கார்லெட் நல்ல தேர்வாக இருக்கும். அடுத்த ஆண்டின் இரண்டா,ம் பாதியில் இந்த கார் சந்தைப்படுத்தபடலாம்.
2. புதிய தலைமுறை டாடா நெக்ஸான்
கருடன் எனும் கோட்நேமை கொண்டு உருவாக்கி வரும் புதிய தலைமுறை நெக்ஸான் கார் மாடலை விரைவில் சந்தைப்படுத்த டாடா திட்டமிட்டுள்ளது. புதிய X1 பிளாட்ஃபார்மை அடிப்படையாக கொண்டு இந்த கார் உருவாக்கப்பட்டு வருகிறது. இது பல ப்ரீமியம் அம்சங்களை தன்னகத்தே கொண்டு, போட்டியாளர்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்த உள்ளது. அதன்படி பனோரமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, ஆல் - டிஜிட்டல் டிஸ்பிளே மற்றும் லெவல் 2 ADAS ஆகிய அம்சங்கள் இடம்பெற உள்ளன. இதில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட உள்ளன. பல அப்க்ரேட்களை வழங்கிய பிறகும் கூட, இதன் விலையை ரூ.9.50 லட்சம் என்ற பட்ஜெட்டிற்குள் நிர்ணயிக்க டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனால், சப்-4 மீ எஸ்யுவி பிரிவில் பெரும் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2027ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டுவரப்படலாம்.
3. டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட்
இந்திய சந்தையில் அதிகளவில் விற்பனையாகும் அளவில் சிறிய எஸ்யுவிக்களில் டாடா பஞ்சும் ஒன்றாகும். அதனை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாகவே அதற்கு தற்போது ஃபேஸ்லிஃப்ட் அப்க்ரேட் வழங்கப்படுகிறது. புதிய மாடலானது மேம்படுத்தப்பட்ட வெளிப்புற டிசைன், பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்க்ரீன், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல் மற்றும் சிறந்த தரத்துடன் கூடிய கேபின் ஆகிய அம்சங்களை பெற உள்ளது. அதேநேரம் இன்ஜின் ஆப்ஷனில் மாற்றமின்றி 1.2 லிட்டர் நேட்சுரல் ஆஸ்பிரேடட் பெட்ரோல் மோட்டார் அப்படியே தொடர உள்ளது. அதேநேரம், கூடுதல் செயல்திறன் மற்றும் எரிபொருள் செயல்திறனுக்காக மேம்படுத்தப்படலாம். இருப்பினும், இதன் ஆரம்பவிலை சுமார் ரூ.6 லட்சமாகவே நிர்ணயிக்கப்பட உள்ளது. டாப் எண்டின் விலை ரூ.7.5 லட்சம் வரை நீட்டிக்கப்படலாம். ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்த கார் விற்பனைக்கு வரலாம்.
டர்போ இன்ஜினின் பலன் என்ன?
டர்போசார்ஜ் செய்யப்பட்ட இன்ஜின்கள் மூலம் பல நன்மைகளை பெறமுடியும். குறிப்பாக மேம்படுத்தப்பட்ட செயல்திறன் மற்றும் மேம்படுத்தப்பட்ட எரிபொருள் திறன் கிடைக்கும். அதனால், அதிகரித்த சக்தி மற்றும் முறுக்குவிசை உருவாக்கப்படும். கூடுதலாக, டர்போசார்ஜர்கள் எரிபொருள் சிக்கனத்தை மேம்படுத்தி உமிழ்வைக் குறைக்கலாம். எரிபொருளுக்கான செலவு குறைந்து செயல்திறன் மிக்க வாகனமாக மாற்றுவதில், டர்போ இன்ஜின்கள் முக்கிய வகிக்கின்றன.





















