Tata EV Car Offers: மின்சார கார்களுக்கு கோடைத் தள்ளுபடி! டாடாவின் எந்த EV காருக்கு எவ்ளோ ஆஃபர்?
Tata EV Car Offers: டாடா நிறுவனம் தனது 5 மின்சார கார்களுக்கு ஏப்ரல் மாத தள்ளுபடியை அறிவித்துள்ளது.

இந்தியாவில் சமீபகாலமாக மின்சார கார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டாடா, மஹிந்திரா என பல முன்னணி நிறுவனங்களும் மின்சார கார்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
டாடா நிறுவனம் தனது மின்சார கார்களுக்கு ஏப்ரல் மாத தள்ளுபடி அறிவித்துள்ளது. எந்தெந்த காருக்கு எவ்வளவு தள்ளுபடி என்பதை கீழே விரிவாக காணலாம்.
1. Tiago EV:
டாடாவின் பட்ஜெட் காரான Tiago காரின் மின்சார வெர்சனே இந்த Tiago EV. இந்த காருக்கு ஏப்ரல் மாத தள்ளுபடியாக ரூபாய் 1.35 லட்சம் அளித்துள்ளனர். இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 8.44 லட்சம். இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 11.82 லட்சம். இந்த கார் 19.2 கிலோவாட் மற்றும் 24 கிலோவாட் பேட்டரியை கொண்டது. இந்த காரில் 4 வேரியண்ட் உள்ளது. 220 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது.
2.Punch EV (Pre-Facelift):
டாடாவின் மிகப்பெரிய வெற்றிகரமான கார் Punch. இதன் மின்சார வெர்சன் இந்த Punch EV (Pre-Facelift). இந்த காருக்கு ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 10.21 லட்சம். இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 13.40 லட்சம் ஆகும். 30 கிலோவாட் மற்றும் 40 கிலோவாட் பேட்டரி கொண்டது இந்த கார். 6 வேரியண்ட் கொண்ட இந்த கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 355 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கும்
3. Nexon EV:
இந்த காருக்கு ரொக்கமாக ரூபாய் 30 ஆயிரமும், எக்சேஞ்ச் தள்ளுபடியாக ரூபாய் 30 ஆயிரம் எனவும் ரூபாய் 60 ஆயிரமும் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. இந்த Nexon EV கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 465 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. ரூபாய் 13.42 லட்சம் முதல் ரூபாய் 18.57 லட்சம் வரை இதன் விலை ஆகும். இதில் மொத்தம் 8 வேரியண்ட் உள்ளது.
4.Curvv EV:
இந்த Curvv EV காருக்கு ரூபாய் 3.45 லட்சம் வரை ஏப்ரல் மாத தள்ளுபடியாக டாடா அறிவித்துள்ளது. இது ஒரு மிட் சைஸ் கூபே எஸ்யூவி கார் ஆகும். இதன் விலை ரூபாய் 18.67 லட்சம் முதல் ரூபாய் 23.54 லட்சம் வரை ஆகும். இதில் 8 வேரியண்ட்கள் உள்ளது. 45 கிலோவாட் மற்றும் 55 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட வேரியண்ட் உள்ளது. 430 கிலோமீட்டர் மற்றும் 502 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது.
5.Harrier EV:
டாடாவின் மற்றொரு பிரபலமான கார் Harrier EV. இந்த காருக்கு ஏப்ரல் மாத தள்ளுபடியாக ரூபாய் 1 லட்சம் அளிக்கப்பட்டுள்ளது. எக்சேஞ்ச் ஆஃபராக ரூபாய் 50 ஆயிரம் அளித்துள்ளனர். எஸ்யூவி காரான இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 22.95 லட்சம். இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 32.24 லட்சம். 65 கிலோவாட் மற்றும் 75 கிலோவாட் பேட்டரி கொண்ட காராக இது உள்ளது. 594 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.
ஒரே சார்ஜில் 320 கி.மீட்டர் மைலேஜ்! அறிமுகமாகியது Ola S1 X இ ஸ்கூட்டர் - விலை என்ன?
ட்ரெண்டிங் செய்திகள்





















