Skoda Octavia RS: தலையை சுற்ற வைக்கும் விலை - கொடுத்த காசுக்கு ஆக்டேவியா வொர்த்தா? ஸ்கோடாவின் புது கார் எப்படி?
Skoda Octavia RS: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஸ்கோடாவின் புதிய ஆக்டேவியா ஆர்எஸ் கார் மாடல், ரூ.49.99 லட்சத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Skoda Octavia RS: இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கான ஸ்கோடாவின் புதிய ஆக்டேவியா ஆர்எஸ் கார் மாடல், ஏற்கனவே முற்றிலுமாக விற்று தீர்ந்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஸ்கோடா நிறுவனம், ஆக்டேவியா ஆர்எஸ் கார் மாடலின் புதிய எடிஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் விலை ரூ.49.99 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முற்றிலுமாக கட்டமைக்கப்பட்ட வடிவில் வெறும் 100 யூனிட்கள் மட்டுமே இந்தியாவிற்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அவை அனைத்துமே ஏற்கனவே விற்று தீர்ந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கான முன்பதிவு கடந்த 6ம் தேதி தொடங்கியது. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட செயல்திறனுக்கு பெயர்போன இந்த செடானின் பெரிய அளவில் பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.
ஆக்டேவியா ஆர்எஸ் - போட்டியாளர்கள் யார்?
உள்நாட்டில் ரூ.50.91 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படும் ஃபோக்ஸ்வேகனின் கோல்ஃப் ஜிடிஐ காரானது, ஆக்டேவியா ஆர்எஸ் மாடலுக்கு நெருக்கமான போட்டியாளராக கருதப்படுகிறது. முந்தைய தலைமுறை ஆக்டேவியா ஆர்எஸ் 245 மாடலுடன் ஒப்பிடுகையில், புதிய எடிஷனுக்கான விலையானது ரூ.13 லட்சம் அதிகரித்துள்ளது. ஃபார்ம் பேக்டரைப் பொறுத்தவரை, ஆக்டேவியா RS, BMW M340i மற்றும் ஆடி S5 ஸ்போர்ட்பேக்கைப் போன்றது. இருப்பினும் ஜெர்மன் குறிப்பிட்ட இரண்டு ஜெர்மன் நிறுவன கார்களும், ஸ்கோடாவை விட கணிசமாக விலை உயர்ந்தது மற்றும் சக்திவாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்கோடாவின் புதிய ஆக்டேவிய ஆர்எஸ் கார் மாடல் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு இதை க்ளிக் செய்யுங்கள்
ஆக்டேவியா ஆர்எஸ் - இன்ஜின் விவரங்கள்:
ஆக்டேவியா ஆர்எஸ் காரானது ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தரப்பிலிருந்து மிகவும் பிரபலமான, 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினை பயன்படுத்துகிறது. கோல்ஃப் ஜிடிஐ காரிலும் இதே இன்ஜின் தான் இடம்பெற்றுள்ளது. இது முன்புற சக்கரங்களுக்கு ஆற்றலை செலுத்தக்கூடிய, 7 ஸ்பீட் டூயல் க்ளட்ச் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷனை கொண்டு, 265hp மற்றும் 370Nm ஆற்றலை உற்பத்தி செய்கிறது. பூஜ்ஜியத்திலிருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 6.4 விநாடிகளில் எட்டும் என்றும், அதிகபட்சமாக மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்போர்ட்ஸ் எக்சாஸ்ட் சிஸ்டம் நிலையானதாக வழங்கப்படுகிறது. அதேநேரம் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ள ஆக்டேவிய ஆர்எஸ் எடிஷனில், டைனமிக் சேஸிஸ் கண்ட்ரோல் வசதி இல்லை. இந்த அமைப்பானது கையாளுதலை மேம்படுத்துவதற்காக உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக்டேவியா ஆர்எஸ் - உட்புறம், வெளிப்புற அம்சங்கள்
ரேல்லி ஸ்போர்ட் (RS) என்ற இரண்டாவது பெயருக்கு ஏற்ப, ஆக்டேவியா காரில் சிசில்டு பம்பர்கள், பிளாக்-அவுட் ட்ரிம், RS பேட்ஜிங், 19-இன்ச் ஏரோ-ஆப்டிமைஸ் செய்யப்பட்ட அலாய் வீல்கள் மற்றும் ஒரு லிப் ஸ்பாய்லர் ஆகியவற்றைப் பெறுகிறது. கேண்டி ஒயிட், மேஜிக் பிளாக், மாம்பா க்ரீன், ரேஸ் ப்ளூ மற்றும் வெல்வெட் ரெட் ஆகிய வண்ண விருப்பங்களில் இந்த காரானது சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. உட்புறத்தில் ஆக்டேவியா RS சிவப்பு நிற கான்ட்ராஸ்ட் ஸ்ட்ரிட்சிங் முழு கருப்பு வண்ண தீமை கொண்டுள்ளது. ஸ்போர்ட்ஸ் இருக்கைகள் மற்றும் RS-ஸ்பெக் ஃபிளாட்-பாட்டம் கொண்ட மூன்று-ஸ்போக் ஸ்டீயரிங் வீலையும் பெறுவீர்கள்.
ஆக்டேவியா ஆர்எஸ் - வசதிகள், அம்சங்கள்
அம்சங்களைப் பொறுத்தவரை, ஆக்டேவியா RS 13-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டச்ஸ்கிரீன், 10.25-இன்ச் டிஜிட்டல் ட்ரைவர் டிஸ்ப்ளே, 11-ஸ்பீக்கர் கேன்டன் சவுண்ட் சிஸ்டம், 360-டிகிரி கேமரா, மேட்ரிக்ஸ் LED ஹெட்லைட்கள், வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, மசாஜ் செயல்பாட்டுடன் கூடிய சூடான மற்றும் பவர்ட் முன் இருக்கைகள், 3-மண்டல காலநிலை கட்டுப்பாடு, 10 ஏர்பேக்குகள் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கட்டுப்பாடு என பல அம்சங்களை கொண்டுள்ளது.






















