மேலும் அறிய

ROYAL ENFIELD: பைக் ரைடர் மேனியா நிகழ்ச்சியில், அறிமுகமானது ராயல் என்ஃபீல்ட் சூப்பர் மீட்டியார் 650

ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் சூப்பர் மீடியர் 650 (Super Meteor 650) பைக் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பயனாளர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து இருந்த  ராயல் என்ஃபீல்ட் சூப்பர் மீடியர் 650 மாடல் வாகனம், அண்மையில் இத்தாலியில் நடைபெற்ற EICMA 2022 கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. அதைதொடர்ந்து, நேற்று (நவ.18) கோவாவில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் சார்பில் தொடங்கிய, 3 நாட்கள் நடைபெறும் 2022 ரைடர் மேனியா நிகழ்ச்சி மூலம் சூப்பர் மீடியர் 650 ரக வாகனம் இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த புதிய வாகனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் எனவும், ரைடர் மேனியா நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மட்டும் தற்போது,  சூப்பர் மீடியர் 650 வாகனத்திற்கு முன்பதிவு செய்யலாம் எனவும் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கான கட்டணமாக ரூ.10,000 வசூலிக்கப்படுகிறது.

 

சூப்பர் மீட்டியார் 650 வடிவமைப்பு

ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் 650cc இன்ஜினின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மூன்றாம் தலைமுறை வாகனம்தான் சூப்பர் மீட்டியார் 650. இதன் சேசிஸ் போன்றவற்றில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், USD போர்க், முழுமையாக எல்இடி முகப்பு விளக்கு, டிரிப்பர் நேவிகேஷன் உள்ளிட்ட அம்சங்களை கொண்ட முதல் ராயல் என்ஃபீல்ட் வாகனம் எனும் பெருமையையும் இது பெற்றுள்ளது. தொடக்கத்தில் செலஸ்டியல் ரெட் மற்றும் செலஸ்டியல் ப்ளூ எனும் இரண்டு நிறங்களில் சூப்பர் மீடியர் 650 பைக் விற்பனைக்கு வர உள்ளது. 241 கிலோ எடை கொண்டதன் மூலம், அதிக எடைகொண்ட ராயல் என்பீல்ட் வாகனம் இதுதான் என கருதப்படுகிறது.

சூப்பர் மீட்டியார் 650 சிறப்பம்சங்கள்:

இதில் உள்ள 648cc பாரலல்லெல் டிவின் இன்ஜின் காரணமாக, 47 குதிரைத்திறனும், 52 Nm இழுவிசை சக்தியையும் சூப்பர் மீடியர் 650 பைக் பெற்றுள்ளது. ஒரே நேரத்தில் 15.7 லிட்டர் எரிபொருளை நிரப்ப முடியும் எனவும், லிட்டருக்கு 25 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் இதன் விலை ரூ.3.5 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
Honda Amaze Price Features: மாருதி டிசையரா, ஹோண்டா அமேஸா-ன்னு குழப்பத்துல இருக்கீங்களா.? இத படிச்சுட்டு தெளிவா முடிவெடுங்க
மாருதி டிசையரா, ஹோண்டா அமேஸா-ன்னு குழப்பத்துல இருக்கீங்களா.? இத படிச்சுட்டு தெளிவா முடிவெடுங்க
Mahindra Scorpio N Pickup: டொயோட்டா ஹிலக்ஸுக்கு நெருக்கடி கொடுக்குமா மஹிந்திரா ஸ்கார்பியோ என் பிக்கப்.? ஆக. 14 லாஞ்ச்
டொயோட்டா ஹிலக்ஸுக்கு நெருக்கடி கொடுக்குமா மஹிந்திரா ஸ்கார்பியோ என் பிக்கப்.? ஆக. 14 லாஞ்ச்
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget