நான் தான் இருக்கேன்ல... தார் மாடலுக்கே டஃப் கொடுக்கும் 4 மாடல்கள்

Published by: குலசேகரன் முனிரத்தினம்

இந்திய சந்தையில் ஆஃப் ரோடர் என்றாலே மஹிந்த்ராவின் தார் கார் மாடல் தான் பெரும்பாலானோரின் முதன்மையான பரிசீலனையாக உள்ளது

தார் கார் மாடலின் விலையானது ரூ.9.99 லட்சத்தில் தொடங்கி ரூ.17.19 லட்சம் வரை நீள்கிறது

2.0 லிட்டர் mஸ்டாலியன் டர்போ பெட்ரோல், 2.2 லிட்டர் mஹாவ்க் டர்போ டீசல் மற்றும் சிறிய mஹாவ்க் டீசல் ஆகிய இன்ஜின் ஆப்ஷன்கள் கிடைக்கின்றன

உள்ளூர் சந்தையில் தார் மாடலுக்கு மாற்றாக விற்பனை செய்யப்படும் கார் மாடல்கள் பற்றி தெரியுமா?

ஜிம்னி விலை ரூ.12.31 - ரூ.14.45 லட்சம் வரை நீள்கிறது. இதில் 1.5 லிட்டர் K15B பெட்ரோல் இன்ஜின் ஆனது ஆட்டோமேடிக் மற்றும் மேனுவல் வேரியண்ட்களில் கிடைக்கிறது

ஃபோர்ஸ் கூர்கா மாடலானது 3 மற்றும் 5 சீட்டர் எடிஷனில், ரூ.15.95 - ரூ.17.27 லட்சம் வரை நீள்கிறது. FM 2.6 CR CD காமன் ரெயில் டீசல் இன்ஜினை கொண்டுள்ளது

தார் ராக்ஸின் விலையானது ரூ.12.39 - ரூ.22.25 லட்சம் வரை நீள்கிறது. 2.0 லிட்டர் எம்ஸ்டாலியன் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் 3எம்ஹாவ்க் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களை கொண்டுள்ளது

ஸ்கார்பியோ என் கார் மாடலின் விலை ரூ.13.49 - ரூ.24.34 லட்சம் வரை நீள்கிறது. இதில் 2.0 லிட்டர் எம்ஸ்டாலியன் டர்போ - பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் இன்ஜின் இடம்பெற்றுள்ளது.