Nissan Magnite Facelift Vs Rival Compact SUVs: காம்பேக்ட் எஸ்யுவிக்களின் மோதல் - புதிய மேக்னைட் Vs ஃப்ரான்க்ஸ் Vs பஞ்ச்
Magnite Facelift Vs Tata Punch Vs Maruti Fronx: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நிசான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் உடன் மோதும், காம்பேக்ட் எஸ்யுவிக்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
Magnite Facelift Vs Tata Punch Vs Maruti Fronx: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நிசான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் உடன் மாருதி ஃப்ரான்க்ஸ் மற்றும் டாடா பஞ்ச் ஆகியவை போட்டியிடுகின்றன.
புதிய மேக்னைட் Vs ஃப்ரான்க்ஸ் Vs பஞ்ச்
மலிவு விலை SUV பிரிவு கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. தற்போது அவை ஹேட்ச்பேக்கிற்கு மிகவும் கவர்ச்சிகரமான மாற்றாக உள்ளன. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில், Fronx உடன் இணைந்து Punch மிகவும் பிரபலமான விருப்பங்களில் ஒன்றாக உள்ளது. ஆனால் புதிய Nissan Magnite இந்த பிரிவில் ஆதிக்கம் செலுத்த விரும்புகிறது. 5.99 லட்சம் என்ற விலையில் விற்பனை செய்யப்படும், மேக்னைட் மிகவும் மலிவு விலை ஆப்ஷன்களில் ஒன்றாகும். எனவே, புதிய நிஸானை மற்ற இரண்டு காம்பேக்ட் எஸ்யுவிக்களுடன் ஒப்பிட்டு எது சிறந்தது என்பதை அறியலாம்.
புதிய மேக்னைட் Vs ஃப்ரான்க்ஸ் Vs பஞ்ச் - எது பெரியது?
நிசான் மேக்னைட்டின் நீளம் 3994 மிமீ, அகலம் 1758 மிமீ மற்றும் வீல்பேஸ் 2500 மிமீ. பஞ்ச் காரின் நீளம் 3827 மிமீ, அகலம் 1742 மிமீ மற்றும் வீல்பேஸ் 2445 மிமீ. அதேநேரம், ஃபிராங்க்ஸ் 3995 மிமீ நீளம், 1765 மிமீ அகலம் மற்றும் 2520 மிமீ நீளமான வீல்பேஸைக் கொண்டுள்ளது. மேக்னைட் அதிகபட்சமாக 205 மிமீ என்ற அளவிலான கிரவுண்ட் கிளியரன்ஸை கொண்டுள்ளது. அதேநேரம், ஃபிராங்க்ஸுக்கு 190 மிமீ மற்றும் பஞ்ச் 187 மிமீ அளவிலான கிரவுண்ட் கிளியரன்ஸை மட்டுமே கொண்டுள்ளது. பூட் ஸ்பேஸைப் பார்த்தால், மேக்னைட் 336 லிட்டர் பூட் திறனைக் கொண்டுள்ளது. அதே சமயம் ஃப்ரான்க்ஸ் 308 லிட்டர் பூட் மற்றும் பஞ்ச் 366 லிட்டர் பூட் ஸ்பேஸை மட்டுமே கொண்டுள்ளது.
எந்த கார் அதிக சக்தி கொண்டது?
மேக்னைட்டில் 72bhp 1.0 லிட்டர் பெட்ரோல் நேட்சுரல் ஆஸ்பிரேடட் மற்றும் 100bhp 1.0 லிட்டர் டர்போ இன்ஜின் ஆபஷன் உள்ளது. இது CVT மற்றும் மேனுவலுடன் வருகிறது. 1.0 நேட்சுரல் ஆஸ்பிரேடட் ஆப்ஷனுக்கு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் விருப்பமும் உள்ளது. இது லிட்டருக்கு 17-20 கிமீ மைலேஜ் வழங்குகிறது. பஞ்சில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 87bhp உடன் ஆட்டோமேடிக் அல்லது மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் கிடைக்கிறது, அதே நேரத்தில் CNG விருப்பமும் உள்ளது. பஞ்சின் மைலேஜ் லிட்டருக்கு 19-20 கிமீ ஆகும். ஃபிராங்க்ஸில் 89bhp 1.2 லிட்டர் மற்றும் 100bhp 1.0 லிட்டர் டர்போ இன்ஜின்உள்ளது. 1.2 லிட்டர் ஃபிராங்க்ஸில் AMT விருப்பம் உள்ளது. அதே சமயம் 1.0 டர்போவில் CVT விருப்பம் உள்ளது. ஃபிராங்க்ஸின் மைலேஜ் லிட்டருக்கு 20-23 கிமீ ஆகும்.
எந்த காரில் அதிக அம்சங்கள் உள்ளன?
ஃப்ரான்க்ஸ் ஆனது 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, கனெக்டட் கார் தொழில்நுட்பம், வயர்லெஸ் சார்ஜிங், காலநிலை கட்டுப்பாடு போன்ற அம்சங்களைப் பெறுகிறது. மேக்னைட் ஆனது 360 டிகிரி கேமரா, க்ளைமேட் கண்ட்ரோல், ஆட்டோ டிம்மிங் IRVM, ரிமோட் ஸ்டார்ட் கீஃபோப், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 6 ஏர்பேக்குகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதேநேரம், ரியர் வியூ கேமரா, வயர்லெஸ் சார்ஜிங், காலநிலை கட்டுப்பாடு, 6 ஏர்பேக்குகள் போன்றவற்றைக் கொண்டிருக்கும் போது, பஞ்ச் கூடுதலாக சன்ரூஃப் மற்றும் மிகப்பெரிய தொடுதிரையைப் பெறுகிறது.
பணத்திற்கு அதிக மதிப்புள்ள கார் எது?
ஃப்ராங்க்ஸ் விலை ரூ.7.5 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது, டாப்-எண்ட் ரூ 13 லட்சமாக உள்ளது. பஞ்ச் விலை வரம்பு ரூ.6.13 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செல்கிறது. மேக்னைட் விலை ரூ.5.99 லட்சத்தில் இருந்து டாப்-எண்ட் வேரியண்ட் விலை ரூ.11.5 லட்சமாக உள்ளது.