மேலும் அறிய

ரூ.10 லட்சத்தில் பாதுகாப்பான 5 ஸ்டார் பட்ஜெட் கார்கள்: டாடா நெக்ஸான், பன்ச் இ.வி., மாருதி டிசையரா?

பாதுகாப்பான பயணத்தை விரும்பும் நடுத்தரக் குடும்பங்களுக்கு, ரூ.10 லட்சத்திற்குள் தொடக்க விலையைக் கொண்ட எந்த மூன்று கார்கள் சிறந்தவை?

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கார் வாங்குபவர்கள் தற்போது மைலேஜை விட பாதுகாப்பிற்கே அதிக முன்னுரிமை அளிக்கின்றனர்.

இந்த நிலையில்10 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்குள் குளோபல் மற்றும் பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்களில் முழுமையான 5 ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீடு பெற்ற சிறந்த கார்களின் வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களின் விவரங்கள் இதோ:

டாடா நெக்ஸான் (Tata Nexon)

காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் மிகவும் பிரபலமான டாடா நெக்ஸான், குளோபல் என்சிஏபி சோதனையில் 5 ஸ்டார் மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இதன் வெளிப்புற கட்டமைப்பு விபத்தின்போது ஏற்படும் பெரிய தாக்கத்தை தாங்கும் வகையில் உறுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ்,எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ரோல் ஓவர் மிட்டிகேஷன் மற்றும் ஐசோஃபிக்ஸ், சைல்டு சீட் மவுண்ட்கள் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் ஸ்டாண்டர்டாக இடம்பெற்றுள்ளன.

டாடா பஞ்ச் இவி (Tata Punch EV)

மைக்ரோ எஸ்யூவி வடிவமைப்பைக் கொண்ட இந்த எலக்ட்ரிக் கார், பாரத் என்சிஏபி சோதனையில் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது. டாடாவின் பிரத்யேகமான ஆக்டி.இவி பிளாட்ஃபார்ம் கட்டமைப்பில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இது காருக்கும், பேட்டரிக்கும் கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

இந்த எலக்ட்ரிக் கார் சிறந்த பேட்டரி பேக் மற்றும் சிறப்பான டிரைவிங் ரேஞ்ச் உடன் வருகிறது. பாதுகாப்பிற்காக 6 ஏர்பேக்குகள், 4 சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக், 360 டிகிரி கேமரா மற்றும் பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

மாருதி சுசுகி டிசையர் (Maruti Suzuki Dzire)


மாருதி நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமான புதிய தலைமுறை டிசையர் செடான் கார், குளோபல் என்சிஏபி சோதனையில் 5 ஸ்டார் பெற்று சாதனை படைத்துள்ளது. இதன் வெளிப்புற டிசைன் மற்றும் கட்டமைப்பு முந்தைய மாடலை விட வலுவாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

பாதசாரிகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பிற்காக முன்பக்க வடிவமைப்பு பிரத்யேகமாக மாற்றப்பட்டுள்ளது. இதில் 6 ஏர்பேக்குகள், ஹில் ஹோல்டு அசிஸ்ட், அனைத்து பயணிகளுக்கும் 3 பாயிண்ட் சீட் பெல்ட் ரிமைண்டர் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் ஆகிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

டாடா ஆல்ட்ரோஸ் (Tata Altroz)

டாடா ஆல்ட்ரோஸ் இந்தியாவின் மலிவு விலை கார்களில் ஒன்று என்றாலும் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்றது. எக்ஸ் ஷோரூம் விலை ரூ.6.30 லட்சத்தில் தொடங்குகிறது. 

பாதுகாப்பான பயணத்தை விரும்பும் நடுத்தரக் குடும்பங்களுக்கு, ரூ.10 லட்சத்திற்குள் தொடக்க விலையைக் கொண்ட இந்த மூன்று கார்களும் சிறந்த தேர்வாக அமையும் என்று நம்பப்படுகிறது.

 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Hero First Electric Bike: இப்போ வாங்கடா போட்டிக்கு.! தாறுமாறான EV பைக்கை களமிறக்கும் ஹீரோ மோட்டோகார்ப்; அறிமுகம் எப்போ.?
இப்போ வாங்கடா போட்டிக்கு.! தாறுமாறான EV பைக்கை களமிறக்கும் ஹீரோ மோட்டோகார்ப்; அறிமுகம் எப்போ.?
Maruti Fronx on Discount: செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
Alto K10 Price: நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget