Skoda Kushaq Facelift: முரட்டு லூக்கில் ஸ்கோடா குஷாக்.. எல்லாமே இருக்கு.. பனோரமிக் சன்ரூஃப் முதல் மசாஜ் சீட்ஸ் வரை!
New Skoda Kushaq Facelift: ஸ்கோடா குஷாக் அதிரடியான இயந்திர மாற்றங்களுடன் அறிமுகமாகியுள்ளது. இந்த புதிய மாடலின் சிறப்பம்சங்களை என்ன என்பதை முழுமையாக பார்ப்போம்.

ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) ஃபேஸ்லிஃப்ட் மாடல் தற்போது புதிய தோற்றம், மேம்படுத்தப்பட்ட உட்புறம் மற்றும் அதிரடியான இயந்திர மாற்றங்களுடன் அறிமுகமாகியுள்ளது. இந்த புதிய மாடலின் சிறப்பம்சங்களை என்ன என்பதை முழுமையாக பார்ப்போம்.
பிரீமியம் தோற்றம் மற்றும் வெளிப்புற மாற்றங்கள்
புதிய குஷாக் ஃபேஸ்லிஃப்ட் மாடல் முன்பை விட மிகவும் பிரீமியமான தோற்றத்தைக் கொண்டுள்ளது. இதில் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஹெட்லேம்ப்கள், கிரில் மற்றும் முழுமையான எல்இடி (LED) விளக்குகள் இடம்பெற்றுள்ளன. காரின் பின் பகுதியில் ஒளிரும் 'Skoda' லோகோ மற்றும் இணைக்கப்பட்ட டெயில்-லேம்ப் (Connected tail-lamps) அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், சீக்வென்ஷியல் இண்டிகேட்டர்கள் மற்றும் 17 இன்ச் அலாய் வீல்கள் காரின் அழகைக் கூட்டுகின்றன.

அதிநவீன உட்புற வசதிகள்
காரின் உள்ளே 26.03 செமீ டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் 25.6 செமீ இன்ஃபோடெயின்மென்ட் டச்ஸ்கிரீன் என இரண்டு பெரிய திரைகள் உள்ளன. முதல் முறையாக இதில் பனோரமிக் சன்ரூஃப் வசதி டாப்-எண்ட் மாடல்களில் சேர்க்கப்பட்டுள்ளது. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் கூகுள் மூலம் இயங்கும் AI உதவியாளர் (AI companion) வசதியும் உள்ளது.

கார்களில் முதல்முறை: மசாஜ் இருக்கைகள்
குஷாக் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் குறிப்பிடத்தக்க ஒரு அம்சம், பின் இருக்கைகளில் வழங்கப்பட்டுள்ள மசாஜ் வசதி (Rear seat massager) ஆகும். இந்த வசதி இந்த ரக கார்களில் இதுவே முதல் முறையாகும். இது தவிர, காற்றோட்ட வசதியுடன் கூடிய முன்பக்க மின்சார இருக்கைகள் (Ventilated electric seats), லெதரெட் இருக்கைகள் மற்றும் பேஜ் (Beige) நிற உட்புற வடிவமைப்பு ஆகியவை பயணத்தை சொகுசாக்குகின்றன.

இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ்
இந்த மாடலில் மிகப்பெரிய மாற்றமாக 1.0 TSi இன்ஜினில் இருந்த 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸிற்குப் பதிலாக, புதிய 8-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது காரின் செயல்திறன் மற்றும் மைலேஜை மேம்படுத்த உதவுகிறது. 1.5 TSi இன்ஜின் மாடலில் வழக்கம் போல DSG ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தொடர்கிறது.

பாதுகாப்பு வசதிகள்
பாதுகாப்பு வசதிகளை பொறுத்தவரை, 6 ஏர்பேக்குகள் மற்றும் ஆக்டிவ் & பேசிவ் பாதுகாப்பு அம்சங்கள் (Active and Passive safety) இதில் தரமாக வழங்கப்பட்டுள்ளன.

மேலும், முன்பக்க பார்க்கிங் சென்சார்கள், ஆம்ப்ளிஃபையர் மற்றும் சப்-வூஃபர் உள்ளிட்ட கூடுதல் வசதிகளும் இதில் இடம் பெற்றுள்ளன.






















