Hyundai Venue Price: நெக்ஸான், ப்ரேஸ்ஸாவை அலறவிடும் வென்யு - விலையில் வெடியை வைத்த ஹுண்டாய், முழு லிஸ்ட்
Hyundai Venue and Venue N Line Price List: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹுண்டாய் நிறுவனத்தின் வென்யு மற்றும் அதன் என் - லைன் எடிஷன் காருக்கான முழு விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது.

Hyundai Venue and Venue N Line Price List: ஹுண்டாய் நிறுவனத்தின் வென்யு மற்றும் அதன் என் - லைன் எடிஷனுக்கான விலை வரம்பு ரூ.7.9 லட்சத்தில் தொடங்கி ரூ.15.69 லட்சம் வரை நீள்கிறது.
ஹுண்டாய் வென்யு லாஞ்ச்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, ஹுண்டாயின் சப்-காம்பேக்ட் எஸ்யுவி ஆன இரண்டாவது தலைமுறை வென்யு கார் மாடல் அதிகாரப்பூர்வமாக சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே தொடங்கிய நிலையில், இடைவெளி இன்று என் - லைன் எடிஷனும் ஒரே அடியாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நவம்பர் 15ம் தேதிக்குப் பிறகு இந்த கார்களின் விநியோகம் தொடங்கும் என கூறப்படுகிறது.
புதிய தலைமுறை வென்யு காரானது குறிப்பிடத்தக்க ஸ்டைலிங் அப்டேட்கள், சந்தையின் போட்டித்தன்மைக்கு பதிலடி தரும் வகையில் உட்புற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேநேரம், இன்ஜினில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. உள்நாட்டு சந்தையில் கடும் போட்டி நிலவும் காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் கியா சோனெட், மாருதி சுசூகி ப்ரேஸ்ஸா,டாடா நெக்ஸான், மஹிந்த்ரா XUV 3X0, ஸ்கோடா கைலாக் ஆகியவற்றிடமிருந்து புதிய வென்யு போட்டியை எதிர்கொள்ளும்.
ஹுண்டாய் வென்யு லாஞ்ச்: வேரியண்ட்கள், விலைகள்
ஹுண்டாய் வென்யுவானது திருத்தப்பெட்ட பெயர் பலகைகளுடன் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனில் HX2, HX4, HX5, HX6, HX6T, HX7, HX8 மற்றும் HX10 என 8 ட்ரிம்களில் கிடைக்கிறது. அதேநேரம், டீசல் இன்ஜின் ஆப்ஷன் வெறும் 4 ட்ரிம்களில் மட்டுமே கிடைக்கிறது. இதன் விலை 7.9 லட்சத்தில் தொடங்கி ரூ.15.51 லட்சம் வரை நீள்கிறது. அதேநேரம் என் - லைன் ஸ்போர்ட்டி எடிஷனானது N6 மற்றும் N10 என இரண்டு வேரியண்ட்களில் மட்டுமே கிடைக்கிறது. இதன் விலை ரூ.10.55 லட்சத்தில் தொடங்கி 15.30 லட்சம் வரை நீள்கிறது.
போட்டியாளர்கள் ஷாக்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் டாடா நெக்ஸான் முதன்மையான மாடலாகும்.அதனை காட்டிலும் வென்யுவின் தொடக்க விலை ரூ.50 ஆயிரம் அதிகமாக உள்ளது. ஆனாலும் கூடுதல் அம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் இந்த விலையை ஈடுசெய்கின்றன. அதேநேரம், மற்றொரு போட்டியாளரான ப்ரேஸ்ஸாவை காட்டிலும் வென்யுவின் தொடக்க விலை 37 ஆயிரம் ரூபாய் குறைவாகும். இதன் மூலம் பிரதான போட்டியாளர்களை விலை ரீதியாகவும், அம்சங்கள் ரீதியாகவும் வென்யு தயாராக இருப்பதை உணர முடிகிறது.
ஹுண்டாய் வென்யு - முழு விலை பட்டியல்:
| ட்ரிம்கள் | பெட்ரோல் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் | டர்போ பெட்ரோல் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் | டர்போ பெட்ரோல் DCT | டீசல் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் | டீசல் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் |
| HX2 | ரூ.7.9 லட்சம் | ரூ.8.80 லட்சம் | - | ரூ.9.7 லட்சம் | - |
| HX4 | ரூ.8.80 லட்சம் | - | - | - | - |
| HX5 | ரூ.9.15 லட்சம் | ரூ.9.74 லட்சம் | ரூ.10.67 லட்சம் | ரூ.10.64 லட்சம் | ரூ.11.58 லட்சம் |
| HX6 | ரூ.10.43 லட்சம் | - | ரூ.11.98 லட்சம் | - | - |
| HX6T | ரூ.10.70 லட்சம் | - | - | - | - |
| HX7 | - | - | - | ரூ.12.51 லட்சம் | - |
| HX8 | - | ரூ.11.81 லட்சம் | ரூ.12.85 லட்சம் | - | - |
| HX10 | - | - | ரூ.14.56 லட்சம் | - | ரூ.15.51 லட்சம் |
| N6 | - | ரூ.10.55 லட்சம் | ரூ.11.45 லட்சம் | - | - |
| N10 | - | - | ரூ.15.30 லட்சம் | - | - |
ஹுண்டாய் வென்யு - வடிவமைப்பு
வளைவுகள் நிறைந்த மற்றும் கூர்மையான டிசைனை கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல், வெளியேறும் மாடலை காட்டிலும் 48மிமி உயரம், 30மிமி அகலம் மற்றும் 20மிமீ நீளமான வீல்பேஸ் ஆகியவற்றை கூடுதலாக கொண்டுள்ளது. ஸ்டைலிங்கில் குறிப்பாக முன் மற்றும் பின்புற எல்இடி லைட் பார்ஸ், மஸ்குலர் ஸ்கிட் ப்ளேட்ஸ், புதிய 16 இன்ச் அலாய் வீல்கள், டார்க் க்ரோம் உடன் முடிக்கப்பட்ட லோயர் செட் ஃப்ரண்ட் க்ரில் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 8 வண்ண விருப்பங்கள் இடம்பெற்றுள்ளன.
மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர் மற்றும் அலாய் வீல்கள், N லைன் பேட்ஜ், ரெட் ஆக்செண்ட்ஸ், வித்தியாசமான க்ரில், புதிய டூயல் ரிட்ஜ் ஸ்பாய்லர், டூயல் எக்சாஸ்ட் டிப்ஸ், ஆகியவற்றின் மூலம் என் - லைன் எடிஷன் வேறுபட்டுள்ளது. வீல் ஆர்க் க்ளாடிங்கும் இந்த எடிஷனில் அகற்றப்பட்டுள்ளது.
ஹுண்டாய் வென்யு - அம்சங்கள்
புதிய வென்யுவின் கேபின் முந்தைய எடிஷனை விட கணிசமாக அதிக பிரீமியம் அம்சத்தைக் கொண்டுள்ளது. குறிப்பிடத்தக்க மேம்பாடுகளில் இரண்டு 12.3-இன்ச்டச் ஸ்க்ரீன்கள், அதிக பிஷிகல் கண்ட்ரோல்லர்ஸ், புதிய 3-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், திருத்தப்பட்ட சென்ட்ரல் கன்சோல் அடங்கும். வென்யு N லைன் ஒரு ஸ்போர்ட்டியர் ஸ்டீயரிங் வீல் மற்றும் கியர் நாப், சிவப்பு நிற கான்ட்ராஸ்ட் தையல் கொண்ட முழு-கருப்பு வண்ண தீம் மற்றும் சிவப்பு ஆம்பியண்ட் விளக்குகளைப் பெற்றுள்ளது.
வெண்டிலேடட் முன் இருக்கைகள், லெவல் 2 ADAS, ட்ரைவ் மற்றும் ட்ராக்ஷன் மோட்ஸ், பின்புற ஜன்னல் சன்ஷேடுகள், முன் பார்க்கிங் சென்சார்கள், 2-ஸ்டெப் ரிக்ளைனிங் பின்புற இருக்கைகள், 360-டிகிரி கேமரா, ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் 8-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம் ஆகியவற்றுடன் முந்தைய மாடலை காட்டிலும் கூடுதல் அம்சங்களை பெற்றுள்ளது.





















