மேலும் அறிய

February car launche: பிப்ரவரி மாதம் அறிமுகமாக உள்ள புதிய கார்கள் எவை? உங்களுக்கான கார் என்ன?

February car launche: பிப்ரவரி மாதத்திலும் மாருதி சுசுகி உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள், தங்களது புதிய கார்களை இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

February car launche: பிப்ரவரி மாதத்தில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகமாக உள்ள, புதிய கார்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்திய ஆட்டோமொபைல் சந்தை:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கடந்த மாதமும், வழக்கம்போல பல நிறுவனங்களின் புதிய மாடல் கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதில், கியா சோனெட் ஃபேஸ்லிப்ட், ஹுண்டாய் கிரேட்டா ஃபேஸ்லிப்ட், டாடா பஞ்ச் மின்சார எடிஷன், லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் எவோக் ஃபேஸ்லிப்ட், மெர்சிடஸ் பென்ஸ் ஜிஎல்எ ஃபேஸ்லிப்ட், மெர்சிடஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் ஃபேஸ்லிப்ட், போர்ஷே மேகன், மெர்சிடஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ 53 ஃபேஸ்லிப்ட் உள்ளிட்டவை அறிமுகப்படுத்தப்பட்டன. இந்நிலையில், பிப்ரவரி மாதத்திலும் அடுத்தடுத்து பல புதிய மாடல் கார்கள் அறிமுகப்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பில் உள்ள கார்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்படுள்ளன.

Hyundai Creta N Line:

ஹூண்டாய் கிரேட்டா என் லைன் எடிஷன் விரைவில் அறிமுகமாகும் என்பது,  மும்பையில் நடைபெற்ற விளம்பர படப்பிடிப்பின் மூலம் உறுதியாகியுள்ளது. கிரேட்டா என் லைன் கடந்த மாத தொடக்கத்தில் விற்பனைக்கு வந்த ஃபேஸ்லிப்ட் எடிஷனை அடிப்படையாகக் கொண்டுள்ளது. நுட்பமான வெளிப்புற மாற்றங்களை பெற்றுள்ள இது ஸ்போர்ட்டியர் டச்சை கொண்டுள்ளது. இந்தியாவில், கிரேட்டா என் லைன் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் 158 BHP மற்றும் 253 Nm ஆற்றலை உருவாக்குகிறது. 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்பீடு DCT உடன் வழங்கப்படலாம்.

Mahindra XUV300 facelift:

மஹிந்திரா XUV300 ஃபேஸ்லிஃப்ட்டின் வெளிப்புறத்தில் சில மாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. SUV ஆனது C-வடிவ LED பகல்நேர ரன்னிங் விளக்குகளை முன்பக்கமாகவும், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பின்புற முனையில் LED லைட் பட்டியுடன் கூடிய ஸ்டைலிங்கையும் கொண்டுள்ளது. 2024 XUV300 அதே 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் விருப்பங்களுடன்,  மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களை கொண்டுள்ளது. 

டொயோட்டா டெய்ஸர்:

டொயோட்டாவின் மாருதி ஃப்ரான்க்ஸின் பதிப்பு 2024 முதல் காலாண்டில் வெளியிடப்பட உள்ளது. கார் தயாரிப்பாளர் இந்தியாவில் டெய்ஸர் பெயரை டிரேய் செய்துள்ளது. இந்த பெயர் ஃப்ரான்க்ஸ்  காருக்கு ஒதுக்கப்படலாம். கிரில், விளக்குகள், உலோகக்கலவைகள் மற்றும் பம்ப்பர்களுக்கு மட்டுமே சில மாற்றங்கள் இருக்கக் கூடும். Fronx இன் 1.2-லிட்டர் பெட்ரோல் மற்றும் 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் விருப்பங்கள் வழங்கப்படலாம். 

டியாகோ & டிகோர் சிஎன்ஜி ஏஎம்டி:

டாடா மோட்டார்ஸ், ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்ட இந்தியாவின் முதல் சிஎன்ஜி-இயங்கும் கார்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. Tiago மற்றும் Tigor CNG விரைவில் AMT விருப்பத்துடன் வழங்கப்படும்.  டீலர்ஷிப்கள் டோக்கன் தொகையான ரூ.21,000க்கான முன்பதிவுகளை ஏற்கத் தொடங்கியுள்ளன. Tiago iCNG AMT XTA, XZA+ மற்றும் XZA NRG டிரிம்களில் கிடைக்கும், Tigor iCNG AMT XZA மற்றும் XZA+ டிரிம்களில் விற்பனைக்கு வருகிறது. 

நியூ-ஜென் மாருதி ஸ்விஃப்ட்:

கடந்தாண்டு நடைபெற்ற ஜப்பான் மொபிலிட்டி ஷோவில் காட்சிப்படுத்தப்பட்ட கான்செப்டை சார்ந்து, புதிய தலைமுறை ஸ்விஃப்ட் உருவாக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் உள்ள ஹன்சல்பூர் ஆலையில் இந்த கார் உற்பத்தி செய்யப்படுகிறது. புதிய ஸ்விஃப்ட் வரும் மாதங்களில் விற்பனைக்கு வரலாம். அதே நேரத்தில் இந்த மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம். 

2024 ஸ்கோடா ஆக்டேவியா குளோபல் வெளியீடு:

புதிய 2024 ஸ்கோடா ஆக்டேவியா அதன் உலகளாவிய அறிமுகத்தை மிக விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதன் வெளிப்பாட்டிற்கு முன்னதாக, ஸ்கோடா வரவிருக்கும் மாடலின் சிறிய கிளிம்ப்ஸை பகிர்ந்துள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

திமுகவின் நீட் நாடகம் முடிவுக்கு வந்து விட்டது - வானதி சீனிவாசன்
திமுகவின் நீட் நாடகம் முடிவுக்கு வந்து விட்டது - வானதி சீனிவாசன்
தென் மாவட்டங்களில் வெளுக்கும் கனமழை: 16 மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!
தென் மாவட்டங்களில் வெளுக்கும் கனமழை: 16 மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!
Stalin on NEET: நீட் தேர்வு விவகாரம்.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு...
நீட் தேர்வு விவகாரம்.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு...
TNSTC Ticket Booking: கிராம மக்களே கவனியுங்க.. அரசுப் பேருந்து டிக்கெட்ட இனி ஈசியா புக் பண்ணலாம்... எங்க தெரியுமா.?
கிராம மக்களே கவனியுங்க.. அரசுப் பேருந்து டிக்கெட்ட இனி ஈசியா புக் பண்ணலாம்... எங்க தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Murugan Temple Theft CCTV | மருதமலை கோவிலில் திருட்டு!சாமியார் வேடத்தில் வந்த திருடன்TVK Leader Vijay Next Plan: நல்ல நேரம் குறிச்சாச்சு.. Operation 234! ஆட்டத்தை தொடங்கும் விஜய்!CV Shanmugam: அமித்ஷா - சி.வி.சண்முகம் சந்திப்பு.. வக்பு சட்டத்துக்கு ஆதரவா? அதிர்ச்சியில் எடப்பாடிஓசி டிக்கெட் கேட்ட கிரிக்கெட் சங்கம் காவ்யா மாறனுக்கு மிரட்டல்! HOME GROUND-ஐ மாற்றும் SRH?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுகவின் நீட் நாடகம் முடிவுக்கு வந்து விட்டது - வானதி சீனிவாசன்
திமுகவின் நீட் நாடகம் முடிவுக்கு வந்து விட்டது - வானதி சீனிவாசன்
தென் மாவட்டங்களில் வெளுக்கும் கனமழை: 16 மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!
தென் மாவட்டங்களில் வெளுக்கும் கனமழை: 16 மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!
Stalin on NEET: நீட் தேர்வு விவகாரம்.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு...
நீட் தேர்வு விவகாரம்.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு...
TNSTC Ticket Booking: கிராம மக்களே கவனியுங்க.. அரசுப் பேருந்து டிக்கெட்ட இனி ஈசியா புக் பண்ணலாம்... எங்க தெரியுமா.?
கிராம மக்களே கவனியுங்க.. அரசுப் பேருந்து டிக்கெட்ட இனி ஈசியா புக் பண்ணலாம்... எங்க தெரியுமா.?
JEE Mains நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள்! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு விபரம் இதோ
JEE Mains நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள்! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு விபரம் இதோ
Karthigai Deepam: முதலிரவுக்கு ஓகே சொல்வாளா ரேவதி? பரம்பரைக் கட்டில் தயார் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: முதலிரவுக்கு ஓகே சொல்வாளா ரேவதி? பரம்பரைக் கட்டில் தயார் - கார்த்திகை தீபத்தில் இன்று
100 days challenge: 100 நாள் சவால்; மாணவர்களுக்கு தொடங்கிய  திறன் மதிப்பீடு; ஏன்? எதற்கு?
100 days challenge: 100 நாள் சவால்; மாணவர்களுக்கு தொடங்கிய  திறன் மதிப்பீடு; ஏன்? எதற்கு?
South Korea President Ousted: பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய அதிபர்.. யார் நீக்கியது.. எதற்காக தெரியுமா.?
பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய அதிபர்.. யார் நீக்கியது.. எதற்காக தெரியுமா.?
Embed widget