மேலும் அறிய

MG Plug in Hybrid: 7 சீட்டர் ப்ளக்-இன் ஹைப்ரிட் கார்.. 125Km ரேஞ்ச், 1,100Km மைலேஜ் - லோ பட்ஜெட்டில் MG அதிரடி

MG Plug in Hybrid SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மஹிந்த்ராவின் XUV 7XO காருக்கு போட்டியாக, புதிய ப்ளக்-இன் ஹைப்ரிட் கார் மாடலை அறிமுகப்படுத்த எம்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

MG Plug in Hybrid SUV: எம்ஜி நிறுவனத்தின் புதிய ப்ளக்-இன் ஹைப்ரிட் கார் மாடல் தொடர்பான விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

எம்ஜி ப்ளக்-இன் ஹைப்ரிட் எஸ்யுவி:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ப்ளக்-இன் ஹைப்ரிட் பிரிவில், தனது பயணத்தை தொடங்க ஜேஎஸ்டபள்யு எம்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த பிரிவில் இதுநாள் வரையில் பிரீமியம் கார் உற்பத்தி நிறுவனங்களான பிஎம்டபள்யு, லெக்சஸ், போர்ஷே உள்ளிட்டவையே ஆதிக்கம் செலுத்தி வந்தன. இந்நிலையில் வெளியாக உள்ள புதிய எஸ்யுவி கார் மாடல் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் பெரிய அளவில் வெளியாகவில்லை. ஆனாலும், உள்நாட்டு சந்தையில் மஹிந்த்ராவின் XUV 7XO கார் மாடலுக்கு போட்டியாக நிலைநிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், மஹிந்த்ராவின் XEV 9S காருடன் போட்டியிடும் விதமாக, புதிய காரானது முழுமையான மின்சார எடிஷனிலும் சந்தைப்படுத்தப்பட உள்ளது.

இந்திய சந்தைக்கான சீன மாடல்

520 என கோட்நேமை கொண்டுள்ள எம்ஜி நிறுவனத்தின் புதிய எஸ்யுவி ஆனது,  Wuling Starlight 560 என்ற பெயரில் சீனாவில் விற்பனையில் உள்ள மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு வருகிறது. இது வரும் அக்டோபர் மாதம் சந்தைப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீன மாடலை அடிப்படையாக கொண்டு விற்பனைக்கு வரவுள்ள புதிய ப்ளக்-இன் ஹைப்ரிட் எஸ்யுவின் என்ன எதிபார்க்கலாம் என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.


MG Plug in Hybrid: 7 சீட்டர் ப்ளக்-இன் ஹைப்ரிட் கார்.. 125Km ரேஞ்ச், 1,100Km மைலேஜ் - லோ பட்ஜெட்டில் MG அதிரடி

எம்ஜி ப்ளக்-இன் ஹைப்ரிட் எஸ்யுவி: டிசைன், அளவீடுகள்

அளவீடுகள் அடிப்படையில், Wuling Starlight 560 க்ராஸ்-ஓவர் எஸ்யுவி ஆனது, 4,745 மில்லி மீட்டர் நீளம், 1,850 மில்லி மீட்டர் அகலம் மற்றும் 1,755 - 1,770 மில்லி மீட்டர் வரையிலான உயரத்தை கொண்டுள்ளது. வீல் பேஸ் 2,810 மில்லி மீட்டர் ஆக வடிவமைக்கப்பட்டுள்ளது.  இதே அளவீடுகள் அப்படியே இந்திய சந்தைக்கான மாடலிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அளவீடுகள் அடிப்படையில் மஹிந்த்ராவின் XUV 7XO மாடலுக்கு இணையாக இருக்கும் என கருதப்படுகிறது. சர்வதேச சந்தையில் ஸ்டார்லைன் 560 மாடலானது 5 மற்றும்7 சீட்டர் கான்ஃபிகரேஷனில் விற்பனை செய்யப்படுகிறது. 320 லிட்டர் அளவிற்கு உள்ள பூட்-ஸ்பேஸானது இருக்கைகளை மடிப்பதன் மூலம் ஆயிரத்து 945 லிட்டராக உயர்த்த முடியும்.

எம்ஜி ப்ளக்-இன் ஹைப்ரிட் : பவர்ட்ரெயின் விவரங்கள்

சர்வதேச சந்தையில் ஸ்டார்லைன் 560 காரானது 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5லிட்டர் நேட்சுரல் ஆஸ்பிரேடட் ப்ளக்-இன் ஹைப்ரிட் மற்றும் BEV ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த அம்சங்கள் அப்படியே தொடர உள்ளதாம். இந்திய சந்தைக்கான எடிஷனில் 1.5லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜின் ஆனது, 194bhp திறன் கொண்ட மின்சார மோட்டார், 9.5-20.5KWh திறன் கொண்ட பேட்டரியுடன் இணைக்கப்படுகிறது. முழுமையான மின்சார எடிஷனில் 125 கிலோ மீட்டர் மற்றும் எரிபொருளுடன் சேர்த்தால், ஒட்டுமொத்தமாக ஆயிரத்து 100 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கிறது. ஒவ்வொரு 100 கிலோ மீட்டர் பயணத்திற்கும் இந்த காரானது 5.3 லிட்டர் எரிபொருளை செலவிடும் என கணக்கிடப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் ஸ்டார்லைன் 560 எஸ்யுவி ஆனது, மிகக் குறைந்த விலையில் அணுகக் கூடிய ப்ளக்-இன் ஹைப்ரிட் எஸ்யுவி ஆக உள்ளது. 


MG Plug in Hybrid: 7 சீட்டர் ப்ளக்-இன் ஹைப்ரிட் கார்.. 125Km ரேஞ்ச், 1,100Km மைலேஜ் - லோ பட்ஜெட்டில் MG அதிரடி

எம்ஜி ப்ளக்-இன் ஹைப்ரிட் : 500 கி.மீ., ரேஞ்ச்

சீன சந்தையில் இந்த எஸ்யுவி ஆனது 100KW மோட்டர் உடன்  54.5-56.7KWh கூடிய பேட்டரி ஆப்ஷன்களை கொண்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 500 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என கூறப்படுகிறது. 

எம்ஜி ப்ளக்-இன் ஹைப்ரிட் : முக்கிய அம்சங்கள்

  • 12.8 இன்ச் டச்ஸ்க்ரீன்
  • Ling OS இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம்
  • ஹாய்கார் & கார்லிங்க் சப்போர்ட்
  • டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர்
  • வயர்லெஸ் போன் சார்ஜிங்
  • டூயல் டோன் இண்டீரியர் தீம்
  • ஒன்றுக்கும்மேற்பட்ட கப் ஹோல்டர்ஸ் & சேமிப்பு இடங்கள்
  • ஓவர் தி ஏர் அப்டேட்கள்
  • வழிகாட்டுதலுடன் கூடிய ரிவர்ஸ் கேமரா
  • பார்கிங் சென்சார்கள்
  • டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம்
  • எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல்
  • EBD உடன் கூடிய ABS

எம்ஜி ப்ளக்-இன் ஹைப்ரிட் - விலை விவரங்கள்

எம்ஜி நிறுவனத்தின் புதிய 7 சீட்டர் ப்ளக்-இன் ஹைப்ரிட் எஸ்யுவி விலையானது, 20 லட்சத்தில் தொடங்கி 30 லட்சம் ரூபாய் வரையில் நிர்ணயிக்கப்படலாம். அதேநேரம், முழுமையான மின்சார எடிஷனின் விலையானது 25 லட்சத்தில் தொடங்கி 35 லட்சம் வரை நீளக்கூடும் என கருதப்படுகிறது. 

Frequently Asked Questions

எம்ஜி நிறுவனத்தின் புதிய ப்ளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி எந்த மாடலை அடிப்படையாகக் கொண்டது?

எம்ஜி நிறுவனத்தின் புதிய எஸ்யூவி, சீனாவில் விற்பனையில் உள்ள Wuling Starlight 560 மாடலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது.

புதிய எம்ஜி ப்ளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி-யின் அளவீடுகள் என்ன?

இதன் நீளம் 4,745 மிமீ, அகலம் 1,850 மிமீ, உயரம் 1,755-1,770 மிமீ மற்றும் வீல்பேஸ் 2,810 மிமீ ஆகும்.

இந்திய சந்தையில் இந்த கார் எந்த மாடலுக்கு போட்டியாக இருக்கும்?

இந்த புதிய எஸ்யூவி, இந்திய சந்தையில் மஹிந்திராவின் XUV 7XO மாடலுக்கு போட்டியாக நிலைநிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய எம்ஜி ப்ளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவியின் தோராயமான விலை என்ன?

ஹைப்ரிட் மாடலின் விலை 20 லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் வரையிலும், முழுமையான மின்சார எடிஷனின் விலை 25 லட்சம் முதல் 35 லட்சம் ரூபாய் வரையிலும் இருக்கலாம் என கருதப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

மாதம் 4 லட்சம் கார்கள் அவுட்! - இந்தியர்கள் அதிகம் வாங்கும் அந்த 2 மாடல்கள் எது தெரியுமா?
மாதம் 4 லட்சம் கார்கள் அவுட்! - இந்தியர்கள் அதிகம் வாங்கும் அந்த 2 மாடல்கள் எது தெரியுமா?
மைலேஜ், குறைந்த விலை, சொகுசு... மிடில் கிளாஸ் பட்ஜெட்டுக்கு எந்த SUV கார் பெஸ்ட் சாய்ஸ்?
மைலேஜ், குறைந்த விலை, சொகுசு... மிடில் கிளாஸ் பட்ஜெட்டுக்கு எந்த SUV கார் பெஸ்ட் சாய்ஸ்?
அதிக மைலேஜ் தரும் மிடில் கிளாஸ் ஃபேமிலிக்கான டாப் 5 ஸ்கூட்டர் லிஸ்ட் இதோ! மிஸ் பண்ணிடாதீங்க!
அதிக மைலேஜ் தரும் மிடில் கிளாஸ் ஃபேமிலிக்கான டாப் 5 ஸ்கூட்டர் லிஸ்ட் இதோ! மிஸ் பண்ணிடாதீங்க!
இன்னோவை இடித்து தள்ளிய 7 சீட்டர் பெஸ்ட் செல்லர் MPV; ஜூனில் அமோக விற்பனை- எந்த கார் தெரியுமா?
இன்னோவை இடித்து தள்ளிய 7 சீட்டர் பெஸ்ட் செல்லர் MPV; ஜூனில் அமோக விற்பனை- எந்த கார் தெரியுமா?

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK MLA: காலையிலேயே திமுக எம்.எல்.ஏவை தூக்கிய போலீசார் - கைதுக்கான காரணம் என்ன? தூத்துக்குடியில் பரபரப்பு
காலையிலேயே திமுக எம்.எல்.ஏவை தூக்கிய போலீசார் - கைதுக்கான காரணம் என்ன? தூத்துக்குடியில் பரபரப்பு
Rohit Sharma: லார்ட்ஸில் சதமடித்து சரித்தரம் படைத்த ரோகித் சர்மா..! ஓய்வு குறித்து விளக்கம் சொன்ன கேப்டன் கில்
லார்ட்ஸில் சதமடித்து சரித்தரம் படைத்த ரோகித் சர்மா..! ஓய்வு குறித்து விளக்கம் சொன்ன கேப்டன் கில்
FIFA Argentina Vs Spain: ஸ்பெயின் சாம்பியன்.. கால்பந்து உலகக் கோப்பை - ஒவ்வொரு அணிக்கான பரிசுத்தொகை, யாருக்கு? எவ்வளவு?
ஸ்பெயின் சாம்பியன்.. கால்பந்து உலகக் கோப்பை - ஒவ்வொரு அணிக்கான பரிசுத்தொகை, யாருக்கு? எவ்வளவு?
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Embed widget