ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி.. Comet முதல் Gloster வரை.. ஆஃபர்களை அள்ளித்தந்த MG
MG Offers: எம்ஜி நிறுவனம் தனது கோமட், ஆஸ்டர், ஹெக்டர், க்ளோஸ்டர் ஆகிய கார்களுக்கு சலுகைகள் அறிவித்துள்ளது.

இந்தியாவில் டாடா, ஹுண்டாய், மஹிந்திரா ஆகிய முன்னணி கார் நிறுவனங்களுக்கு கடும் சவால் அளிக்கும் வகையில் உருவெடுத்து வருகிறது எம்ஜி கார் நிறுவனம். சுதந்திர தினம், ஓணம், விநாயகர் சதுர்த்தி என பல பண்டிகைகளை கொண்ட இந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களது விழாக்கால சலுகைகளை அறிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில் தற்போது எம்ஜி நிறுவனமும் தங்களது கார்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது. சொகுசு கார்கள் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக எம்ஜி திகழ்கிறது. அவர்கள் எந்தெந்த காருக்கு எவ்வளவு தள்ளுபடி அளித்துள்ளனர்? என்பதை கீழே காணலாம்.
எந்த காருக்கு எவ்ளோ ஆஃபர்?
எம்.ஜி. நிறுவனம் தனது Comet, Astor, Hector, ZS மற்றும் Gloster ஆகிய கார்களுக்கு இந்த சலுகையை அறிவித்துள்ளது.
1. Comet EV (2024 – Excite FC & Exclusive FC) - ரூபாய் 56 ஆயிரம்
2. Comet EV (2024 – Excite & Exclusive) - ரூபாய் 28 ஆயிரம்
3. Comet EV (2025 – Excite FC, Exclusive FC & Blackstorm) - ரூ. 56 ஆயிரம்
4. Comet EV (2025 – Excite & Exclusive) - ரூ.28 ஆயிரம்
5. Astor Petrol MT (Sprint) - ரூ. 35 ஆயிரம்
6. Hector Petrol - ரூ. 40 ஆயிரம்
7. Hector Diesel - ரூ. 40 ஆயிரம்
8. ZS EV (Executive) - ரூ.1.34 லட்சம்
9.ZS EV (Other Variants) - ரூ. 40 ஆயிரம்
10. Gloster - ரூ. 4 லட்சம்
1. Comet EV:
எம்ஜி நிறுவனத்தின் மிகவும் பிரத்யேக படைப்பு இந்த Comet. மின்சார காரான இந்த காருக்கு ரொக்கமாக ரூ. 28 ஆயிரம் தள்ளுபடி அளித்துள்ளனர். லாயல்டி தொகையாக ரூ.20 ஆயிரமும், கார்ப்பரேட் சலுகையாக ரூ.8 ஆயிரமும் என மொத்தம் ரூபாய் 56 ஆயிரம் சலுகை அளித்துள்ளனர். இது 2024 – Excite FC & Exclusive FC கார்களுக்கு மட்டுமே பொருந்தும்.
2. Comet EV:
2024 – Excite & Exclusive Comet EV கார்களுக்கு ரூபாய் 28 ஆயிரம் மட்டுமே சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதுவும் லாயல்டி ரூபாய் 20 ஆயிரம், கார்ப்பரேட் சலுகை 8 ஆயிரமாக வழங்கப்பட்டுள்ளது.
3. Comet EV 2025:
2025 Comet EV Excite FC, Exclusive FC & Blackstorm கார்களுக்கு ரொக்கத் தள்ளுபடியாக ரூ.28 ஆயிரமும், லாயல்டி ரூபாய் 20 ஆயிரம், கார்ப்பரேட் சலுகை 8 ஆயிரம் என மொத்தம் ரூபாய் 56 ஆயிரம் சலுகை அறிவித்துள்ளனர்.
4. Comet EV 2025:
Comet EV 2025ம் ஆண்டு Excite & Exclusive மாடல்களுக்கு லாயல்டி தொகையாக ரூபாய் 20 ஆயிரமும், கார்ப்பரேட் சலுகையாக ரூபாய் 8 ஆயிரமும் என மொத்தம் ரூபாய் 28 ஆயிரம் சலுகையாக வழங்கப்பட்டுள்ளது.
5. Astor:
பெட்ரோலில் ஓடும் Astor MT (Sprint) காருக்கு லாயல்டி தொகை ரூபாய் 20 ஆயிரம், கார்ப்பரேட் தொகை ரூபாய் 20 ஆயிரம் என மொத்தம் ரூபாய் 40 ஆயிரம் தள்ளுபடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
6. Hector:
இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசலில் ஓடுகிறது. இரண்டிலும் 5, 6 மற்றும் 7 இருக்கைககள் கொண்ட காராக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த இரண்டு வகையிலும் மேலே கூறிய இருக்கைகள் கொண்ட Hector காருக்கு ரூபாய் 40 ஆயிரம் தள்ளுபடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. லாயல்டி 20 ஆயிரமும், கார்ப்பரேட் சலுகை 20 ஆயிரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் இரண்டு காருக்கும் இந்த சலுகை பொருந்தும்.
7. ZS EV:
மின்சார காரான இந்த ZS EV Executive காருக்கு மொத்தமாக ரூபாய் 1 லட்சத்து 34 ஆயிரம் சலுகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரொக்கமாக ரூபாய் 94 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது. லாயல்டி 20 ஆயிரமும், கார்ப்பரேட் சலுகை 20 ஆயிரமும் என மொத்தமாக 1.34 லட்சம் ரூபாய் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
8. ZS EV (Other Variants):
மின்சார காரான ZS EV காரில் எக்ஸ்க்யூட்டிவ் கார் அல்லாத மற்ற வேரியண்ட்களுக்கு ரூபாய் 40 ஆயிரம் மட்டுமே சலுகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. லாயல்டி ரூபாய் 40 ஆயிரமும், கார்ப்பரேட் சலுகை ரூபாய் 40 ஆயிரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
9. Gloster:
எம்ஜி நிறுவனத்தின் Gloster காருக்கு மட்டும் ரூபாய் 3.50 லட்சம் ரொக்கமாகவே தள்ளுபடி செய்துள்ளனர். எக்சேஞ்ச் ஆஃபர் ரூபாய் 50 ஆயிரமாக அறிவித்துள்ளனர். மொத்தம் ரூபாய் 4 லட்சம் தள்ளுபடியாக அறிவித்துள்ளனர்.
கோமட் மின்சார காரின் விலை ரூபாய் 7.50 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. ஆஸ்டர் காரின் தொடக்க விலை ரூ. 11 லட்சம் ஆகும். கிளோஸ்டர் காரின் தொடக்க விலை ரூ.52 லட்சம் ஆகும். ஹெக்டர் காரின் தொடக்க விலை ரூ.18 லட்சம் ஆகும். ஆனால், இந்த கார்களில் விலைக்கு ஏற்ப பாதுகாப்பு அம்சங்களும், தரங்களும் இருக்கும்.





















