எம்ஜி மெஜஸ்டர் 7 சீட்டர் ஏப்ரல் மாதத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்படும். மே மாத இறுதியில் இதன் விற்பனை தொடங்கும்.
MG Majestor: மெஜஸ்டர் 7 சீட்டர் SUV.. புக்கிங் தொடங்கியாச்சு, விலை என்ன? கார் எப்படி? என்ன எதிர்பார்க்கலாம்?
MG Majestor 7 Seater: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எம்ஜி நிறுவனத்தின் புதிய மெஜஸ்டர் 7 சீட்டர் கார் மாடலுக்கான முன்பதிவு அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.

MG Majestor 7 Seater: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எம்ஜி நிறுவனத்தின் புதிய மெஜஸ்டர் 7 சீட்டரானது, ஏப்ரல் மாதத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது.
எம்ஜி மெஜஸ்டர் புக்கிங் தொடங்கியாச்சு..
இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கான உற்பத்திக்கு தயார் நிலையில் உள்ள, மெஜஸ்டர் கார் மாடலை எம்ஜி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முழு அளவிலான முன்று வரிசை இருக்கை எஸ்யுவி ஆனது, ப்ராண்டின் போர்ட்ஃபோலியோவின் முதன்மையானதாக நிலைநிறுத்தப்பட்டு உள்ளது. முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில் வாடிக்கையாளர்கள், நிறுவனத்தின் விற்பனை நிலையங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தை அணுகி முன்பதிவை மேற்கொள்ளலாம். இதற்காக ரூ.41 ஆயிரம் டோக்கன் தொகை செலுத்த வேண்டி இருக்கும். காரின் விலையானது ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட்டு, மே மாத இறுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எம்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எம்ஜி மெஜஸ்டர் - விலை, போட்டியாளர்கள்
சந்தைப்படுத்தலை கருத்தில் கொண்டால், மெஜஸ்டரின் விலையானது 40 லட்சத்தில் தொடங்கி 45 லட்சம் ரூபாய் வரையில் (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முழு அளவிலான எஸ்யுவி பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வரும் டொயோட்டா ஃபார்ட்சுனர் மற்றும் அதன் லெஜண்டர் வேரியண்டுடன் நேரடியாக போட்டியிட உள்ளது. இதுபோக ஸ்கோடா கோடியாக், ஜீப் மெரிடியன் மற்றும் விரைவில் அறிமுகமாக உள்ள ஃபோக்ஸ்வாகன் டெய்ரன் ஆகியவற்றையும் மெஜஸ்டர் சந்தையில் எதிர்கொள்ள வேண்டி உள்ளது.

எம்ஜி மெஜஸ்டர் - கார் எப்படி?
சர்வதேச சந்தைக்கான க்ளோபல் மேக்சஸ் D90 எனப்படும் பாடி ஆன் ஃப்ரேம் எனப்படும் ப்ளாட்ஃபார்மில் கட்டமைக்கப்பட்டு, எந்தவொரு சாலையிலும் பயணிக்கும் திறனை பெற்றுள்ளது. பல்வேறு கரடு முரடான சாலைகளில் கூட பயணிக்கும் வகையில் டாப் வேரியண்ட்களில் 4 வீல் ட்ரைவ் அம்சத்தை கொண்டுள்ளது. இதற்காக Sharp 4×2, Savvy 4×2 மற்றும் Savvy 4×4 என மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட உள்ளது. வலுவான செயல்திறனை வெளிப்படுத்த 213 bhp மற்றும் 478hp ஆற்றலை உருவாக்கும் வகையில், 2.0 லிட்டர் ட்வின் டர்போ டீசல் இன்ஜின் இடம்பெற்றுள்ளது. இதனுடன் 8 ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் இணைக்கப்பட்டுள்ளது.

எம்ஜி மெஜஸ்டர் - வெளிப்புற அம்சங்கள்
வெளிப்புறத்தில் மெஜஸ்டரானது வலுவானதாகவும், கட்டுமஸ்தான எஸ்யுவி ஆகவும் காட்சியளிக்கிறது. முன்புறத்தில் இடம்பெற்றுள்ள பெரிய க்ரில்லானது செங்குத்தாக நிலைநிறுத்தப்பட்ட எல்இடி பகல் நேரங்களில் ஒளிரும் விளக்குகள் மற்றும் சதுரமான முகப்பு விளக்கு யூனிட்டை பெற்றுள்ளது. பாதுகாப்பிற்கான ஸ்கிட் ப்ளேட்கள், ப்ளாக்ட்-அவுட் ட்ரிம் எலிமெண்ட்கள், கனக்டெட் எல்இடி டெயில் லேம்ப்கள் மற்றும் டூயல் எக்சாச்ட் அவுட்லெட்ஸ் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளன. 19 இன்ச் அலாய் வீல்களின் மீது இந்த எஸ்யுவி நிறுத்தப்பட்டு, 4 வெளிப்புற வண்ணங்களில் கிடைக்கிறது.

எம்ஜி மெஜஸ்டர் - உட்புற வசதிகள், அம்சங்கள்
உட்புறத்தில் மெஜஸ்டரானது 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் என இரண்டு எடிஷன்களில் கிடைக்கிறது. ஸ்மோக்ட் எபோனி தீம் வழங்கப்பட்டுள்ளது. கவனத்தை ஈர்க்கும் வகையில் 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் டிஸ்பிளே, பனோரமிக் சன்ரூஃப், ப்ரீமியம் 12 ஸ்பீக்கர் ஜேபிஎல் ஆடியோ செட்-அப் ஆகியவை இடம்பெற்றுள்ளன. வெண்டிலேடட் மற்றும் மசாஜ் வசதி நிறைந்த முன்புற இருக்கை, 3 ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், 64 வண்ணங்களிலான ஆம்பியண்ட் லைட்டிங் மற்றும் பவர்ட் டெயில் கேட்டும் வழங்கப்பட்டுள்ளது.

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக லெவல் 2 ADAS, மல்டிபிள் ஏர்-பேக்குகள், 360 டிகிரி கேமரா சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜிங் பேட்ஸ் மற்றும் டிஜிட்டல் கீ ஃபங்க்சனாலிட்டி ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. இந்த மூன்று வரிசை இருக்கைகளை கொண்ட எஸ்யுவி ஆனது, மத்திய கிழக்கு நாடுகளில் ரகன் மோனிகர் என்ற பெயரில் விற்பனை செய்யபப்டுவது குறிப்பிடத்தக்கது.
Frequently Asked Questions
எம்ஜி மெஜஸ்டர் 7 சீட்டர் எப்போது விற்பனைக்கு வருகிறது?
எம்ஜி மெஜஸ்டர் 7 சீட்டரை எப்படி முன்பதிவு செய்வது?
எம்ஜி மெஜஸ்டரை நிறுவனத்தின் விற்பனை நிலையங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்ய ரூ.41 ஆயிரம் செலுத்த வேண்டும்.
எம்ஜி மெஜஸ்டர் 7 சீட்டரின் விலை என்னவாக இருக்கும்?
எம்ஜி மெஜஸ்டரின் விலை எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் 40 லட்சம் முதல் 45 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எம்ஜி மெஜஸ்டர் 7 சீட்டரின் முக்கிய போட்டியாளர்கள் யார்?
எம்ஜி மெஜஸ்டர், டொயோட்டா ஃபார்ச்சூனர், ஸ்கோடா கோடியாக், ஜீப் மெரிடியன் மற்றும் ஃபோக்ஸ்வாகன் டெய்ரன் ஆகிய கார்களுடன் போட்டியிடும்.
எம்ஜி மெஜஸ்டர் 7 சீட்டரின் இன்ஜின் விவரங்கள் என்ன?
இதில் 2.0 லிட்டர் ட்வின் டர்போ டீசல் இன்ஜின் உள்ளது. இது 213 bhp மற்றும் 478 Nm ஆற்றலை உருவாக்கும். 8 ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்























