மேலும் அறிய

Swift CNG: ரூ.9000 பட்ஜெட்டில் 33KM மைலேஜ் ப்ரீமியம் ஹேட்ச்பேக்.. அசத்தலான பாதுகாப்பு, முழு EMI விவரங்கள்

Swift CNG EMI Scheme: இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் ப்ரீமியம் ஹேட்ச்பேக்கான மாருதி ஸ்விஃப்ட் கார் மாடலை, 9 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் சொந்தமாக்குவதற்கான மாதந்திர தவணை விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Swift CNG EMI Scheme: மாருதி சுசூகியின் ஸ்விஃப்ட் கார் மாடல் தனது சிஎன்ஜி எடிஷனில் 32.85 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாருதி சுசூகி ஸ்விஃப்ட் சிஎன்ஜி

எரிபொருட்களின் விலை கொடுத்த அதிர்ச்சிக்கு மத்தியிலும், கார் வாங்க விரும்பும் நடுத்தர மக்களின் ஆசை ஈடேற சிஎன்ஜி ஒரு நல்வாய்ப்பாக உள்ளது. மலிவான எரிபொருள் செலவோடு, அதிகபட்ச மைலேஜையும் வழங்கி பயனர்களின் செலவை குறைக்க வழிவகை செய்கிறது. அப்படி இருந்தும் ஒரே அடியாக முழு தொகையையும் செலுத்தி காரை சொந்தமாக்குவது என்பது பலருக்கு சிக்கலானதாக இருக்கலாம். அதற்கான தீர்வாக தான் நிறுவனங்கள் மாதந்திர தவணை தொகை திட்டத்தை கொண்டுள்ளம. அந்த வகையில் உள்நாட்டின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனத்தால் விற்பனை செய்யப்படும், ப்ரீமியம் ஹேட்ச்பேக்கான ஸ்விஃப்ட் கார் மாடலை எளிய முதலீட்டில் சொந்தமாக்குவது எப்படி? என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

ஸ்விஃப்ட் சிஎன்ஜி - விலை விவரங்கள்:

பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி எடிஷன்களில் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் ஆப்ஷன்களில் ஸ்விஃப்ட் கார் மாடலானது விற்பனை செய்யப்படுகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை 5 லட்சத்து 79 ஆயிரத்தில் தொடங்கி 8 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வரை நீள்கிறது. சென்னையில் இந்த காரின் ஆன் - ரோட் விலை வரம்பானது 7 லட்சத்து 9 ஆயிரம் ரூபாயில் தொடங்கி 10 லட்சத்து 67 ஆயிரம் ரூபாயாக உள்ளது. குறிப்பாக சிஎன்ஜி எடிஷனின் தொடக்க ஆன் - ரோட் விலையானது 9 லட்சத்து 6 ஆயிரம் ரூபாயாகும். இதில் 7 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் எக்ஸ் - ஷோரூம் விலை, சுமார் 96 ஆயிரம் ரூபாய் பதிவு கட்டணம் மற்றும் 24 ஆயிர,ம் ரூபாய் காப்பீட்டு கட்டணம் ஆகியவையும் அடங்கும். 

ஸ்விஃப்ட் சிஎன்ஜி - EMI திட்ட விவரங்கள்

குறிப்பிட்ட அளவிலான முன்தொகையை செலுத்தி ஸ்விஃப்ட் காரை வாங்க நீங்கள் திட்டமிட்டு இருந்தால், அதன் ஆன் - ரோட் விலை அடிப்படையில் வங்கிகள் கடனுதவி வழங்குகின்றன. அந்த வகையில் நீங்கள் 3.06 லட்சம் ரூபாயை முன்பணமாக செலுத்தினால், மீதமுள்ள 6 லட்சம் ரூபாயை வங்கிக் கடன் மூலம் செலுத்தலாம். 7.5 சதவிகிதம் வட்டியில் 7 ஆண்டுகளுக்கு நீங்கள் கடனை திருப்பி செலுத்துவதாக இருந்தால் மாதம் 9 ஆயிரத்து 203 ரூபாயை தவணையாக செலுத்த வேண்டி இருக்கும். வட்டியாக மட்டுமே ஒரு லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் என, ஒட்டுமொத்தமாக 7 லட்சத்து 73 ஆயிரம் ரூபாயை திருப்பி செலுத்துவீர்கள். அதவாது 9 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான காரை, 10 லட்சத்து 79 ஆயிரம் ரூபாயை செலுத்தி சொந்தமாக்குவதகா இருக்கும். ஆனால் அதன் எரிபொருள் செலவு மூலம் கிடைக்கும் சேமிப்பு இந்த செலவை ஈடு செய்யும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

இதையும் படியுங்கள்: Maruti Suzuki: மாருதியின் ஃபேன் ஃபேவரட் மாடல்களின் விலை உயர்வு - எந்த காருக்கு எவ்வளவு? EV, ஹேட்ச்பேக்

ஸ்விஃப்ட் சிஎன்ஜி - மைலேஜ் விவரங்கள்

ஸ்விஃப்டானது 1.2 லிட்டர் Z சீரிஸ் 3 சிலிண்டர் இன்ஜினை பயன்படுத்துகிறது. 5 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் கிடைக்கிறது. சிஎன்ஜி எடிஷன் கிலோவிற்கு 32.85 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிஜ உலக பயன்பாட்டில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் 22 முதல் 27 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக பயனர்கள் தெரிவிக்கின்றனர். அதேநேரம், நெடுஞ்சாலை பகுதிகளில் ஒரு கிலோவிற்கு 31 முதல் 35 கிலோ மீட்டர் வரை மைலேஜ் வழங்குவதாக பயனர்கள் தெரிவிக்கின்றனர்.

ஸ்விஃப்ட் சிஎன்ஜி - வசதிகள், அம்சங்கள்

வேரியண்ட் அடிப்படையில் 7 அல்லது 9 இன்ச் டச்ஸ்க்ரீன்கள், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்ட் ஆட்டோ, ஸ்டியரிங்கில் கட்டமைக்கப்பட்ட ஆடியோ மற்றும் காலிங் வசதியுடன் கூடிய 4 ஸ்பீக்கர் சிஸ்டம், ரியர் ஏசி வெண்ட்களுடன் கூடிய ஆட்டோமேடிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஸ்டார்ட்/ஸ்டாப் புஷ் பட்டன் க்ரூஸ் கன்ட்ரோல், வயர்லெஸ் ஸ்மார்ட்ஃபோன் சார்ஜர், எலெக்ட்ரிக்  டில்ட் ஸ்டியரிங் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பிற்காக அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர் பேக்குகள், EBD உடன் கூடிய ஆண்டி லாக் ப்ரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டு ப்ரோக்ராம், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், ரியர்வியூ பார்கிங் கேமரா உடன் கூடிய ரிவெர்ஸ் பார்கிங் சென்சார்கள், குழந்தைகளுக்கான ஐசோஃபிக்ஸ் இருக்கைகள் ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளன. நான்காவது தலைமுறை ஸ்விஃப்டானது இதுவரை பாதுகாப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Maruti Safest Cars: 5 ஸ்டார் ரேட்டிங் இருக்குற மாருதியோட பாகுபலி கார்கள் எது எதுன்னு தெரியுமா.? இந்தாங்க லிஸ்ட்
5 ஸ்டார் ரேட்டிங் இருக்குற மாருதியோட பாகுபலி கார்கள் எது எதுன்னு தெரியுமா.? இந்தாங்க லிஸ்ட்
Maruti Brezza New Features: அட்டகாசமாக அறிமுகமான புதிய பிரெஸ்ஸாவில் 6 அற்புதமான மாற்றங்கள்; என்னென்னன்னு தெரிஞ்சுக்கோங்க
அட்டகாசமாக அறிமுகமான புதிய பிரெஸ்ஸாவில் 6 அற்புதமான மாற்றங்கள்; என்னென்னன்னு தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் 140 கி.மீட்டர் மைலேஜ்.. இளைஞர்களின் இதயமாகும் Odysse Evoqis இ பைக் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 140 கி.மீட்டர் மைலேஜ்.. இளைஞர்களின் இதயமாகும் Odysse Evoqis இ பைக் - விலை எவ்ளோ?
Nissan Tekton Analysis: நிசான் டெக்டன வாங்கலாமா.? வேண்டாமா.? வாங்குவதற்கு 3 காரணங்கள், தவிர்ப்பதற்கு 3 காரணங்கள் இதோ
நிசான் டெக்டன வாங்கலாமா.? வேண்டாமா.? வாங்குவதற்கு 3 காரணங்கள், தவிர்ப்பதற்கு 3 காரணங்கள் இதோ
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
CM Vijay Karnataka Visit : ’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
US Iran War: “நிறுத்தி இருக்கோம், ஆனா நிறுத்தல“ ஈரான் மீதான தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை முக்கிய அறிக்கை
“நிறுத்தி இருக்கோம், ஆனா நிறுத்தல“ ஈரான் மீதான தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை முக்கிய அறிக்கை
Maruti Safest Cars: 5 ஸ்டார் ரேட்டிங் இருக்குற மாருதியோட பாகுபலி கார்கள் எது எதுன்னு தெரியுமா.? இந்தாங்க லிஸ்ட்
5 ஸ்டார் ரேட்டிங் இருக்குற மாருதியோட பாகுபலி கார்கள் எது எதுன்னு தெரியுமா.? இந்தாங்க லிஸ்ட்
Iran Vs Ukraine: இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?
இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?
ஒரே சார்ஜில் 140 கி.மீட்டர் மைலேஜ்.. இளைஞர்களின் இதயமாகும் Odysse Evoqis இ பைக் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 140 கி.மீட்டர் மைலேஜ்.. இளைஞர்களின் இதயமாகும் Odysse Evoqis இ பைக் - விலை எவ்ளோ?
Embed widget