மேலும் அறிய

Thar 5 Door Features: சோதனை ஓட்டத்தில் ஒரு க்ளிக்! வெளியான தார் 5 டோர் கார் புகைப்படம் - அம்சங்கள் இவ்வளவா?

Mahindra Thar 5 Door Features: மஹிந்திரா நிறுவனத்தின் தார் 5 டோர் எடிஷன் காரின் சோதனை ஓட்டத்தின் போது எடுக்கப்பட்ட, புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Mahindra Thar 5 door: மஹிந்திரா நிறுவனத்தின் தார் 5 டோர் எடிஷன் சோதனை ஓட்டத்தின் போது எடுக்கப்பட்ட, புகைப்படங்கள் மூலம், காரில் உள்ள பல அம்சங்கள் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. 

மஹிந்திரா 5 டோர் தார் எடிஷன்:

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் மஹிந்திரா தார் 5-டோர் இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வர உள்ளது. இதற்கு சூட்டுவதற்காக அர்மாடா உள்ளிட்ட 7 பெயர்களை அந்நிறுவனம் டிரேட்மார்க் செய்துள்ளது. இந்த புதிய எஸ்யூவி இரண்டு கூடுதல் கதவுகளுடன் கூடிய ஸ்டேண்டர்ட் தார் வாகனமாக மட்டுமின்றி, பல புதிய அப்டேட்களை உள்ளடக்கியதாக இருக்கும் என பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், புதிய 5 டோர் எடிஷன் தார் மாடல் காரின், சோதனை ஓட்டத்தின் போது எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அதன்படி, இந்த காரில் இடம்பெறக் கூடிய பல அம்சங்கள் தற்போது உறுதியாகியுள்ளது.

Mahindra Thar 5-door: exterior highlights:

சோதனை ஓட்டத்தின் போது சிக்கிய புகைப்படங்களின்படி, தார் 5-டோர் எடிஷனின் வெளிப்புறத்தில்,ஒரு புதிய கிரில் மற்றும் பம்பர் வடிவமைப்புடன், மேம்படுத்தப்பட்ட மூடுபனி விளக்குகள் கிடைக்கும். டாப் வேரியண்ட்களில் ஹெட்லேம்ப்கள், முன் ஃபெண்டர்களில் பக்கவாட்டு இண்டிகேட்டர்கள் மற்றும் மூடுபனி விளக்குகள் உட்பட அனைத்தும் எல்இடி விளக்குகளாக கிடைக்கும். தார் 3-டோர்லிருந்து வித்தியசமாக, 5 டோரில் டெயில்-லேம்ப்களும் எல்இடி விளக்குகளாக இருக்கும். தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட பின்புற கதவு கைப்பிடிகள் மற்றும் பின்புறத்தில் கண்ணாடியின் வடிவமானது தார் EV கான்செப்ட்டை போன்று உள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு சக்கரங்கள் மற்றும் டயர்களை தேர்வு செய்வதிலும் பல ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. டாப் வேர்யண்ட்களில் 19-இன்ச் டயமண்ட்-கட் அலாய்கள் கிடைக்கும்.  சில மிட்-ஸ்பெக் வகைகளில் எளிமையான தோற்றமுடைய அலாய் வீல்களை தேர்வு செய்ய முடியும். எண்ட்ரி லெவல் டிரிம்களுக்கு எஃகு சக்கரங்கள் கிடைக்கும். மேலும், தார் 5-டோர் பின்புற வைப்பர் அமைப்பு மற்றும் ரிமோட் ஃப்யூல்-ஃபில்லிங் கேப் ஓப்பனிங் ஆப்ஷனையும் கொண்டிருக்கும். - இவை இரண்டும் தார் 3-டோர் எடிஷனில் இல்லாத நிலையிஒ, தார் மாடலுக்கான அம்சங்களில் வரவேற்கத்தக்கதாக உள்ளது. 

Mahindra Thar 5-door: Interior highlights:

தார்-3 டோர் எடிஷனுடன் ஒப்பிடும்போது புதிய 5 டோர் எடிஷனில் சில வேறுபாடுகள் மற்றும் துணை நிரல்கள் உள்ளன. முதலாவதாக, வேரியண்ட்களை பொறுத்து சிங்கிள் டோன் மற்றும் டியூயல்-டோன் விருப்பங்களைக் கொண்டிருக்கும். புதிய தார் 5-டோர் டேஷ்போர்டு வடிவமைப்பு, குறிப்பாக சென்டர் கன்சோலுக்கு, பெரிய இன்ஃபோடெயின்மென்ட் திரைக்கு இடமளிக்கும் வகையில் சிறிது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.  தார் 5-டோர் ஒவ்வொன்றும் 10.25-இன்ச் அளவுள்ள இரண்டு முழு டிஜிட்டல் திரைகளைப் பெறுகிறது.  ஒன்று இன்ஃபோடெயின்மென்ட்டுக்காகவும் மற்றொன்று கருவிப் பணிகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இன்ஃபோடெயின்மென்ட் திரையானது வரவிருக்கும் XUV300 ஃபேஸ்லிஃப்ட்டில் உள்ளதைப் போன்றே இருக்கிறது , அதே நேரத்தில் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் நாம் ஏற்கனவே XUV700-இல் பார்த்தது போல் தெரிகிறது .  தார் 5-டோரில் உள்ள கூடுதல் அம்சங்களாக புஷ் பட்டன் ஸ்டார்ட், முன் மற்றும் பின்புற சென்டர் ஆர்ம்ரெஸ்ட்கள், லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரி, ஒரு சன்ரூஃப் மற்றும் பின்புற ஏசி வென்ட்கள் ஆகியவை உள்ளன. தார் 5 டோர் எடிஷன் 3-டோர் தார் போன்ற 5 இருக்கை மாடலாக தொடர்கிறது.  தார் 5-டோர் மூன்றாவது வரிசை இருக்கைகளைப் பெறுவது பற்றிய செய்தி எதுவும் இல்லை.

Mahindra Thar 5-door: safety features:

தார் 3-டோர் எடிஷனில் இரட்டை முன் ஏர்பேக்குகள் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக்குகள் உள்ளன. ஆனால்,  மஹிந்திரா தார் 5-டோர் எடிஷன் ஆனது ஆறு ஏர்பேக்குகளுடன் பின்புற சக்கரங்களில் டிஸ்க் பிரேக்குகளையும் கொண்டுள்ளது. முன்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் டேஷ்கேம் ஆகியவற்றைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ADAS அல்லது 360-டிகிரி கேமரா அமைப்பு பற்றிய தகவல் எதுவும் இல்லை.

Mahindra Thar 5-door: suspension, powertrains:

தார் 5-டோர் ஸ்கார்பியோ N- ல் இருந்ததை போன்ற ஏணி சட்டகம் மாதிரியான சேஸ்ஸில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  அதாவது தார் 5 டோரின் வீல்பேஸ் ஸ்கார்பியோ N இன் வீல்பேஸ் போலவே இருக்கும். சஸ்பென்ஷன் செட்டப்பும் அதே போல் உள்ளது. தார் 5-டோரிலும் அதிர்வெண் சார்ந்த டேம்பர்களைப் பெறலாம். ஸ்கார்பியோ N மாடலில் இருக்கும் ஒரே மாதிரியான ஆற்றல் வெளிப்பாடை கொண்ட 2.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.2-லிட்டர் டர்போ-டீசல் இன்ஜின் ஆப்ஷன்களை தார் 5-டோர் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில், மஹிந்திரா தார் 5-டோரில் 4WD மற்றும் 2WD விருப்பங்கள் அறிமுகப்படுத்தப்படலாம்.

Mahindra Thar 5-door: launch timeline, expected pricing:

தார் 5 டோர் வெளியீடு என்பது 2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நடைபெறும் என்றும், பிப்ரவரியில் விற்பனைக்கு வரும் புதுப்பிக்கப்பட்ட XUV300 க்குப் பிறகு மஹிந்திராவின் அடுத்த பெரிய வெளியீடு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.  தார் 5-டோரின் ஆரம்ப விலை ரூ. 15 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Inga Naan Thaan Kingu Review: காமெடி ஜொலிக்கிறதா? சோதிக்கிறதா?  - சந்தானத்தின் “இங்க நான் தான் கிங்கு” விமர்சனம் இதோ!
காமெடி ஜொலிக்கிறதா? சோதிக்கிறதா?  - சந்தானத்தின் “இங்க நான் தான் கிங்கு” விமர்சனம் இதோ!
Breaking News LIVE: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
TN Rain: குடையுடன் போங்க! அடுத்த 3 மணி நேரம்.. 9 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம்?
TN Rain: குடையுடன் போங்க! அடுத்த 3 மணி நேரம்.. 9 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம்?
Vaikasi: கல்யாணம் பண்ணப் போறீங்களா! வைகாசியில் எத்தனை முகூர்த்த நாட்கள்? முழு விவரம்
Vaikasi: கல்யாணம் பண்ணப் போறீங்களா! வைகாசியில் எத்தனை முகூர்த்த நாட்கள்? முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

GV Prakash Saindhavi Divorce  : ’’கடந்த 24 வருசமா.. ஏத்துக்க முடியல..’’ மனம் திறந்த சைந்தவிSavukku Shankar : மீண்டும் பெண் போலீஸ் பாதுகாப்புசைலன்டாக மாறிய சவுக்கு!தமிழக காவல்துறை சம்பவம் 2.0Radhika Sarathkumar complaint on Sivaji Krishnamurthy : சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா புகார்!Mamata banerjee : ”கூட்டணியை விட்டு ஓடுனீங்களே! இப்போ எதுக்கு வர்றீங்க மம்தா?” விளாசும் ஆதிர் ரஞ்சன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Inga Naan Thaan Kingu Review: காமெடி ஜொலிக்கிறதா? சோதிக்கிறதா?  - சந்தானத்தின் “இங்க நான் தான் கிங்கு” விமர்சனம் இதோ!
காமெடி ஜொலிக்கிறதா? சோதிக்கிறதா?  - சந்தானத்தின் “இங்க நான் தான் கிங்கு” விமர்சனம் இதோ!
Breaking News LIVE: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
TN Rain: குடையுடன் போங்க! அடுத்த 3 மணி நேரம்.. 9 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம்?
TN Rain: குடையுடன் போங்க! அடுத்த 3 மணி நேரம்.. 9 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம்?
Vaikasi: கல்யாணம் பண்ணப் போறீங்களா! வைகாசியில் எத்தனை முகூர்த்த நாட்கள்? முழு விவரம்
Vaikasi: கல்யாணம் பண்ணப் போறீங்களா! வைகாசியில் எத்தனை முகூர்த்த நாட்கள்? முழு விவரம்
குடிபோதையில் நடந்த தகராறு: நண்பனை கொலை செய்து விட்டு நாடகமாடியவர் கைது! சிக்கியது எப்படி?
குடிபோதையில் நடந்த தகராறு: நண்பனை கொலை செய்து விட்டு நாடகமாடியவர் கைது! சிக்கியது எப்படி?
சென்னை விமானநிலையத்தில் கொத்தாக மாட்டிய கும்பல்! சிக்கிய போதை பொருள்! ரூ.22 கோடி மதிப்பாம்!
சென்னை விமானநிலையத்தில் கொத்தாக மாட்டிய கும்பல்! சிக்கிய போதை பொருள்! ரூ.22 கோடி மதிப்பாம்!
மோடிக்கு வயசாயிடுச்சி; அதனால் அவர் அப்படி பேசலாம்! - சபாநாயகர் அப்பாவு
மோடிக்கு வயசாயிடுச்சி; அதனால் அவர் அப்படி பேசலாம்! - சபாநாயகர் அப்பாவு
சிறுவர்களை மிரட்டி பாலியல் சீண்டல்: போலீஸ் பிடிக்க சென்றபோது தப்பிக்க முயற்சித்த வாலிபருக்கு கால்முறிவு!
சிறுவர்களை மிரட்டி பாலியல் சீண்டல்: போலீஸ் பிடிக்க சென்றபோது தப்பிக்க முயற்சித்த வாலிபருக்கு கால்முறிவு!
Embed widget