Electric Compact sedan: நாட்டின் ஒரே ஒரு மின்சார காம்பேக்ட் செடான் - விலை, ரேஞ்ச், அம்சங்கள், வசதிகள் - கார் வொர்த்தா?
Electric Compact sedan: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கிடைக்கும் ஒரே ஒரு மின்சார காம்பேக்ட் செடான் ஆன, டாடா டைகோர் (TATA Tigor) கார் மாடல் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Electric Compact sedan: மின்சார காம்பேக்ட் செடான் ஆன, டாடா டைகோர் (TATA Tigor) கார் மாடல் குறித்த விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்தியாவின் ஒரே மின்சார காம்பேக்ட் செடான்
இந்திய ஆட்டோமொபைல் சந்தை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், ஒரு சில பிரிவுகள் இன்றளவும் பெரிய வளர்ச்சி காணாமலேயே உள்ளன. அதில் ஒன்று மின்சார காம்பேக்ட் செடான் ஆகும். உள்நாட்டு எஸ்யுவி பிரிவு மாதா மாதம் புதுப்புது மாடல்களை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது வரையில் மின்சார காம்பேக்ட் செடான் பிரிவில் இந்தியாவில் ஒரே ஒரு கார் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அது டாடா நிறுவனத்தின் டைகோர் மாடலாகும். காம்பேக்ட் செக்மெண்டில் உள்ள மாற்ற வாகனங்கள் அனைத்துமே பெரும்பாலும் ஹேட்ச்பேக் மற்றும் எஸ்யுவி பிரிவுகளை சேர்ந்ததாகும்.
டாடா டைகோர் மின்சார கார்
டாடா ப்ராண்டின் டைகோர் மார் மாடலானது 5 சீட்டர் செடான் ஆகும். கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல்முறையாக சந்தைப்படுத்தப்பட்ட இந்த கார், 2022ம் ஆண்டு வெகுஜன சந்தைக்கு கொண்டு வரப்பட்டது. இது மலிவு விலையில் நடைமுறைக்கு உகந்ததாக காணப்படுகிறது. நகர்ப்புற மற்றும் நெடுஞ்சாலைகளில் ஓட்டுவதற்கு சிறந்த தேர்வாக உள்ளது. பாதுகாப்பு பரிசோதனையிலும் 4 ஸ்டார் ரேட்டிங்கை பெற்று கவனத்தை ஈர்த்துள்ளது.
டாடா டைகோர் - வசதிகள், அம்சங்கள்
- ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்ட் ஆட்டோ அம்சத்துடன் கூடிய 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம்
- ஆட்டோமேடிக் க்ளைமேட் கன்ட்ரோல்
- ஸ்டார்ட்/ஸ்டாப்பிற்காக புஷ் பட்டன்
- பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இரண்டு முன்புற ஏர்பேக்குகள்
- EBD உடன் கூடிய ABS
- ரிவர்ஸ் பார்கிங் கேமரா மற்றும் சென்சார்கள்
- சீட் பெல்ட் ரிமைண்டர்
- டயர் ப்ரெஷர் மானிட்டரிங் சிஸ்டம்
- க்ரூஷ் கன்ட்ரோல்
- கூல்ட் க்ளோவ் பாக்ஸ்
- எலெக்ட்ரிக் டெயில்கேட் ரிலீஸ்
- ஆட்டோமேடிக் ஹெட்லேம்ப்ஸ்
- உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை
- ரெயின் சென்சிங் வைப்பர்ஸ்
- 316 லிட்டர் பூட் ஸ்பேஸை கொண்டுள்ளது
- செமி டிஜிட்டல் ட்ரைவர்ஸ் டிஸ்பிளே
டாடா டைகோர் EV - பேட்டரி ஆப்ஷன்கள், விலை
டாடா டைகோர் கார் மாடலானது 26KWh என்ற ஒரே ஒரு பேட்டரி பேக் ஆப்ஷனை கொண்டுள்ளது. 74 bhp மற்றும்170 Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் திறனை கொண்ட, இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 315 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 4 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் இந்த காரின் விலை (எக்ஸ்-ஷோரும்), ரூ.12.49 லட்சத்தில் தொடங்கி ரூ.13.75 லட்சம் வரை நீள்கிறது.
டாடா டைகோர் விலைக்கு வொர்த்தா?
- வீட்டிலேயே சார்ஜ் செய்தால் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு ரூபாய்க்கும் குறைவானே செலவாகிறது
- இந்த செக்மெண்டில் பாதுகாப்பில் 4 ஸ்டார் ரேட்டிங்கை பெற்று இருப்பது மலிவு விலையில் பயனருக்கு கிடைக்கும் ஜாக்பாட் ஆகும்
- உடனடி டார்க் மற்றும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் காரணமாக, நகர்ப்புற போக்குவரத்து நெரிசலை சமாளிக்க சிறந்த தேர்வாக பார்க்கப்படுகிறது
- பேட்டரி பேக்கிற்கு 8 வருடம் அல்லது 1.6 லட்சம் கிலோ மீட்டர் வரையில் டாடா நிறுவனம் வாரண்டி அளிக்கிறது
மேற்குறிப்பிட்ட அம்சங்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டால் நாட்டில் ஒரே ஒரு மின்சார காம்பேக்ட் செடான் ஆன டாடா டைகோர், பணத்திற்கு நிகரான மதிப்பை கொண்டிருப்பதை காணமுடிகிறது. தினசரி நகர்ப்புற மற்றும் குறுகிய அமைதியான பயணங்களில் நல்ல அனுபவத்தை அளிக்கும்.






















