Kia Seltos: மேனுவல் கியர்பாக்ஸ் உடன் களமிறங்கிய கியா செல்டோஸ் டீசல் எடிஷன் - விலை இத்தனை லட்சங்களா?
Kia Seltos: கியா நிறுவனத்தின் செல்டோஸ் டீசல் இன்ஜின் எடிஷன் காரானது, மேனுவல் கியர்பாக்ஸுடன் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Kia Seltos: கியா நிறுவனத்தின் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட செல்டோஸ் டீசல் இன்ஜின் எடிஷன், காரின் விலை இந்திய சந்தையில் 12 லட்ச ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கியா செல்டோஸ் டீசல் இன்ஜின் எடிஷன்:
கியா இந்தியா நிறுவனம் மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட செல்டோஸ் டீசல் எடிஷன் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. சிக்ஸ் ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட இந்த மாடல் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட செல்டோஸ் வரிசையுடன் இணைகிறது. இதன் விலை இந்திய சந்தையில், 12 லட்ச ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய டீசல்-மேனுவல் விருப்பத்துடன், செல்டோஸ் தேர்ந்தெடுக்கப்படும் இன்ஜினைப் பொறுத்து, மேனுவல், ஐஎம்டி, டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக், சிவிடி ஆட்டோமேட்டிக் (ஐவிடி) மற்றும் டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் விருப்பங்களுடன் தற்போது விற்பனை செய்யப்படுகிறது.
மீண்டும் வரும் மேனுவல் எடிஷன்:
இண்டக்ரேடட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் (iMT) பொருத்தப்பட்ட SUV-க்களின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில், Kia India கடந்த ஆண்டு இந்திய சந்தையில் இருந்து செல்டோஸ் டீசல்-மேனுவல் டிரான்ஸ்மிஷனை மெதுவாக நீக்கியது. ஆனால், iMT மாடல்களின் விற்பனை மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட மாடல்களுக்கு இணையாக இல்லை. அதேநேரம், இந்திய சந்தையில் செல்டோஸின் கடும் போட்டியாளராக உள்ள, கிரேட்டா ஃபேஸ்லிஃப்ட் மூலம் மேம்படுத்தப்பட்டு டீசல்-மேனுவல் மாறுபாட்டைப் பெறுகிறது. இந்த சூழலில் வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து ஈர்க்கும் பொருட்டு மேனுவல் எடிஷனை மீண்டும் கியா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதேநேரம், ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கிரேட்டா டீசல்-ஐஎம்டி விருப்பத்தை பெறாது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்ஜின் விவரங்கள் & அம்சங்கள்:
செல்டோஸ் டீசல்-மேனுவல் எடிஷனானது அதே 116 ஹெச்பி, 1.5 லிட்டர் இன்ஜினுடன் வருகிறது. இதே இன்ஜின் தான் கியா மற்றும் ஹூண்டாயின் கிரேட்டா உள்ளிட்ட பல தயாரிப்புகளில் இடம்பெற்றுள்ளது. உபகரணங்களின் அளவைப் பொறுத்தவரை, செல்டோஸ் டீசல்- மேனுவல் எடிஷன் ஆனது, அதன் ஆட்டோமேடிக் எடிஷனில் உள்ள அதே அம்சங்களை பெற்றுள்ளது. பனோரமிக் சன்ரூஃப், ADAS பண்டில், ஆறு ஏர்பேக்குகள், 360-டிகிரி கேமராக்கள், டூயல்-ஜோன் காலநிலை கட்டுப்பாடு, ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, இரண்டு 10.25-இன்ச் திரைகள் மற்றும் போஸ்-டியூன் செய்யப்பட்ட 8-ஸ்பீக்கர் மியூசிக் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக கருதப்படுகிறது.
டெலிவரி எப்போது?
செல்டோஸ் டீசல்-மேனுவல் எடிஷன் ஆனது HTE, HTK, HTK+, HTX மற்றும் HTX+ ஆகிய டிரிம்களில் கிடைக்கிறது. டாப் எண்ட் வேரியண்டின் விலை ரூ. 18.28 லட்சமாகும். இந்த விலையானது டாப்-ஸ்பெக் க்ரெட்டா டீசல்-மேனுவல் எடிஷனை விட சற்றே குறைவாகும். செல்டோஸ் ஜிடி லைன் மற்றும் எக்ஸ்-லைன் வகைகளில் இந்த பவர்டிரெய்ன் விருப்பத்தை கியா அறிமுகப்படுத்தவில்லை. ஃபேஸ்லிஃப்ட் செல்டோஸை கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகப்படுத்தியதில் இருந்து, இதுவரை 65,000 யூனிட்களுக்கு மேல் விற்பனை செய்துள்ளதாகவும் கியா நிறுவனம் அறிவித்துள்ளது. செல்டோஸ் டீசல்-மேனுவல் எடிஷனுக்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கான டெலிவரி அடுத்த மாதம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.