Jawa 350 Motorcycle: ஜாவா 350 மாடல் மோட்டார்சைக்கிள் வாங்க ஆசையா? இதோ உங்களுக்கான புதிய தீம் பைக்..!
Jawa 350 Motorcycle: ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள் நிறுவனம் தனது, ஐகானிக் மாடலான ஜாவா 350 இருசக்கர வாகனத்திற்கு ஒரு தனித்துவமான பெயிண்ட் ஆப்ஷனை வழங்கியுள்ளது.
Jawa 350 Motorcycle: மும்பையில் நடைபெற்ற மஹிந்திரா ப்ளூஸ் நிகழ்ச்சியில், ஏராளமான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது புதிய மாடல் வாகனங்களை காட்சிப்படுத்தின.
ஜாவா 350 மோட்டார்சைக்கிள்:
மும்பையில் நடந்த மஹிந்திரா ப்ளூஸ் நிகழ்ச்சியில், ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள் நிறுவனம், தனது ஐகானிக் மாடலான ஜாவா 350-ஐ ஒரு தனித்துவமான பெயிண்ட் ஆப்ஷனுடன் காட்சிப்படுத்தியுள்ளது. ஜாவா 350 ப்ளூ என்று அழைக்கப்படும் இந்த எடிஷனாது, கிளாசிக் மோட்டார்சைக்கிளுக்கு புதிய தோற்றத்தை அளிக்கிறது. மிஸ்டிக் ஆரஞ்சு, பிளாக் மற்றும் மெரூன் ஆகிய மூன்று வண்ணங்களில் ஜாவா 350 மாடல் தற்போது விற்பனை செய்யப்படுகிறது. வெகுவிரைவிலேயே, நிறுவனத்தின் சில்லறை விற்பனைக் கடைகளில், புதிய நீல நிர வண்ணப்பூச்சைக் கொண்ட வாகனத்தின் விற்பனையும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ. 2.15 லட்சம் என்ற விலையில், ஒரே வேரியண்டாக மட்டுமே ஜாவா 350 விற்பனை செய்யப்படுகிறது. இது ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, ஹார்லி-டேவிட்சன் X440 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
Day 1 at @mahindrablues was a melody of exhilaration! Jawa took center stage, blending the sheer style of our motorcycles with the electrifying beats of blues music. Swipe for a soulful recap!#JawaMotorcycles #MahindraBlues #Jawa350 #YezdiForever #JawaYezdiMotorcycles pic.twitter.com/6BU0G66sEZ
— Jawa Motorcycles (@jawamotorcycles) February 11, 2024
Jawa 350 Blue: What's Special?
புதிதாக வெளியிடப்பட்டுள்ள நீல நிற எடிஷன், எரிபொருள் டேங்கில் டிரிபிள்-டோன் சிகிச்சையை பெற்றுள்ளது. இது பைக்கின் உன்னதமான தோற்றத்தை மேம்படுத்தும் கோல்டன் பின்ஸ்ட்ரிப்களுடன், பக்கவாட்டில் குரோம் அலங்காரங்கள் மற்றும் பைக்கின் நடுவில் நீல நிறத்தை கொண்டுள்ளது. பெயிண்ட் வேலைப்பாடுகளை தவிர, பைக்கின் மெக்கானிக்ஸ் மற்றும் இதர அம்சங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
New Jawa 350: Key Highlights:
கடந்த மாதம் இந்தியாவில் திருத்தப்பட்ட ஜாவா 350 மாடல் அரிமுகப்படுத்தப்பட்டது. சிறிய விலை உயர்வைக் கண்ட இந்த மாடலில், 28.1Nm மற்றும் 22.2bhp ஆற்றலை வெளிப்படுத்தும் புதிய 334cc சிங்கிள்-சிலிண்டர் லிக்விட்-கூல்ட் இன்ஜின் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்க மாற்றங்களில் ஒன்றாகும். இந்த இன்ஜின் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனுடன் ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் அசிஸ்டுடன் வருகிறது. ஹார்ட்வேரை பொறுத்தவரை, மாற்றியமைக்கப்பட்ட ஜாவா 350 ஆனது ஒரு புதிய இரட்டை தொட்டில் சட்டகம் மற்றும் ப்ரீ-லோட் அட்ஜஸ்டபிள் ஷாக் அப்சர்பர்ஸ் (100 மிமீ வீல் டிராவல்) மற்றும் 35 மிமீ டெலெஸ்கோபிக் ஃபோர்க் (135 மிமீ வீல் டிராவல்) ஆகியவற்றை அதன் சஸ்பென்ஷன் கூறுகளாக கொண்டுள்ளது.
டூயல்-சேனல் ஏபிஎஸ் ஸ்டேண்டர்டாக வழங்கப்பட, மோட்டார்சைக்கிளில் முன்புறம் 280மிமீ முன் மற்றும் பின்புறம் 240மிமீ டிஸ்க்குகள் பிரேக்கிங்கிற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. புதிய ஜாவா 350 மாடலில் 18 இன்ச் முன் மற்றும் 17 இன்ச் பின்புற ஸ்போக் சக்கரங்கள், 100 பிரிவு முன் மற்றும் 130 பிரிவு பின்புற டியூப் வகை டயர்களை கொண்டுள்ளன. 194 கிலோ எடையை கொண்டுள்ள புதிய ஜாவா 350, ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 ஐ விட 1 கிலோ எடை குறைவாக உள்ளது. 13.2 லிட்டர் எரிபொருள் டேங்க் கொள்ளளவு, 178 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 802 மிமீ இருக்கை உயரம் பெற்றுள்ளது. இதன் வீல்பேஸ் 1,449 மிமீ ஆகும்.