Carens Clavis EV: 490KM ரேஞ்ச் கொடுக்கும் மின்சார காருக்கு ரூ.1.8 லட்சம் தள்ளுபடி - விலை, அம்சங்கள், வசதிகள்
Carens Clavis EV: கியா நிறுவனத்தின் காரென்ஸ் க்ளாவிஸ் மின்சார கார் மாடலுக்கு, ஜுலை மாதத்தில் ரூ.1.8 லட்சம் மதிப்பிலான தள்ளுபடி மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Carens Clavis EV: கியா நிறுவனத்தின் EV6 மற்றும் EV9 கார்கள தவித்து மற்ற அனைத்து மாடல்களுக்கும். ஜுலை மாதத்தில் தள்ளுபடி மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கியா நிறுவனத்தின் ஜுலை மாத சலுகைகள்:
கியா நிறுவனம் தனது போர்ட்ஃபோலியோவில் உள்ள பெரும்பாலான மாடல்களுக்கு, ஜுலை மாதத்தில் சலுகை மற்றும் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் பணத்தள்ளுபடி, கார்ப்ரேட் சலுகைகள், ஸ்க்ரேப்பேஜ் அல்லது எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் ஆகியவை அடங்கும். மாடல் மற்றும் தேர்வு செய்யும் வேரியண்டின் அடிப்படையில் அதிகபட்சமாக ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வரை பணபலனை பெற முடியுமாம்.
காரென்ஸ் க்ளாவிஸ் EV - ரூ.1.8 லட்சம் பலன்
கியா அறிவித்த ஜுலை மாதத்திற்கான சலுகையில், ப்ராண்டின் காரென்ஸ் க்ளாவிஸ் அதிகபட்சமாக ரூ.1.8 லட்சம் வரையிலான சலுகை மற்றும் தள்ளுபடியை பெறுகிறது. 2026ம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட மாடல்கள் மீது பணத்தள்ளுபடி மற்றும் லாயல்டி போனஸ் ஆக ரூ.20 ஆயிரம் வரை பெற முடியும். கார்ப்ரேட் டிஸ்கவுண்ட் ஆக ரூ.15 ஆயிரம் வரையிலும், எக்ஸ்சேஞ்ச் அல்லது ஸ்க்ரேப்பேஜ் போனஸ் ஆக ரூ.20 ஆயிரம் ரூபாய் வரையிலும் பயனர்கள் சேமிக்கலாம். அதேநேரம், கடந்த 2025ம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட மாடல்கள் மீது 80 ஆயிரம் ரூபாய் வரையிலான பணத்தள்ளுபடியும், லாயல்டி போனஸ் ஆக ரூ.20 ஆயிரமும், எக்ஸ்சேஞ்ச் அல்லது ஸ்க்ரேப்பேஜ் போனஸ் ஆக ரூ.75 ஆயிரம் ரூபாய் வரையிலும் பயனர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
காரென்ஸ் க்ளாவிஸ் EV - விலை, போட்டியாளர்கள்
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கிடைக்கும் மிகவும் மலிவு விலை மின்சார எம்பிவி ஆன, காரென்ஸ் களாவிஸின் விலை ரூ.18 லட்சத்தில் தொடங்கி 25 லட்சம் ரூபாய் (எக்ஸ் - ஷோரூம்) வரை நீள்கிறது. 6 சீட்டர், 7 சீட்டர், இரண்டு வகையிலான சீட்டர் கான்ஃபிகரேஷனில் என மொத்தம் 17 வேரியண்ட்களில் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது. உள்ளூர் சந்தையில் இந்த காரானது BYD eMax 7 மற்றும் மஹிந்த்ரா XEV 9S ஆகிய மாடல்களுடன் போட்டியிடுகிறது.
காரென்ஸ் க்ளாவிஸ் EV - 490 ரேஞ்ச்
காரென்ஸ் க்ளாவிஸ் மின்சார காரானது 42KWh மற்றும் 51.4KWh என இரண்டு பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால்404 கிலோ மீட்டர் தொடங்கி 490 கிலோ மீட்டர் வரையில் ரேஞ்ச் அளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நிஜ உலக பயன்பாட்டில் 320 கிலோ மீட்டர் தொடங்கி 380 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிப்பதாக பயனர்கள் தெரிவிக்கின்றனர். பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 8.4 விநாடிகளில் எட்டும் என கூறப்படுகிறது.
காரென்ஸ் க்ளாவிஸ் EV - அம்சங்கள், வசதிகள்
விலைக்கு நிகரான அம்சங்கள் மற்றும் வசதிகள் காரென்ஸ் க்ளாவிஸ் மின்சார எடிஷன் பெற்றுள்ளது. அதன்படி 12.25 இன்ச் அல்லது 12.3 இன்ச் எச்டி டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் அதே அளவிலான டிஜிட்டல் ட்ரைவர் க்ளஸ்டர் இடம்பெறுகிறது. வெண்டிலேடட் முன் இருக்கைகள், 4 வே பவர் அட்ஜெஸ்டபள் ஓட்டுனர் இருக்கை, 64 வண்ணங்களிலான ஆம்பியண்ட் லைட்டிங், 8 ஸ்பீக்கர் போஸ் ப்ரீமியம் சவுண்ட் சிஸ்டம், இன்டெக்ரேடட் மேனுவல் சன்ப்ளைண்ட்ஸ், பில்ட் இன் ப்யூரிஃபையர் ஆகியவை உள்ளன.

பாதுகாப்பான பயணங்களுக்காக 6 ஏர் பேக்குகள், ஆல் வீல் டிஸ்க் ப்ரேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், வெஹைகிள் ஸ்டெபிலிட்டி மேனேஜ்மெண்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், மிகவு ம் துல்லியமான 360 டிகிரி கேமரா, முன் மற்றும் பின்புற பார்கிங் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோக ஸ்டாப் & கோ அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட் க்ரூஸ் கன்ட்ரோல், ஃபார்வர்ட் கொலிசன் அவாய்டன்ஸ் அசிஸ்ட் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் போன்ற 20 அட்டானமஸ் அம்சங்களை உள்ளடக்கிய லெவல் 2 ADAS வசதி ஆகியவை காரென்ஸ் க்ளாவிஸ் மின்சார எடிஷனில் வழங்கப்பட்டுள்ளன.
ட்ரெண்டிங் செய்திகள்






















