மேலும் அறிய

Hyundai Venue vs Kia Syros இரண்டில் பெஸ்ட் கார் எது? விலை, மைலேஜ், தரம் கம்பேரிசன்!

Hyundai Venue மற்றும் Kia Syros கார்களுக்கு இடையேயான விலை, தரம், மைலேஜ் ஆகியவற்றை வைத்து இந்த இரண்டில் எது சிறந்த கார்? என்று ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்று ஹுண்டாய். அதேபோல, கியா நிறுவனமும் இந்தியாவில் முன்னணி கார் நிறுவனமாக திகழ்கிறது. இந்த இரு நிறுவனங்களும் பல்வேறு கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தி வருகிறது. 

இந்த நிலையில், ஹுண்டாய் நிறுவனத்தின் வெற்றிகரமான கார் Hyundai Venue ஆகும். அதேபோல, கியா நிறுவனத்தின் வெற்றிகரமான கார்களில் ஒன்று  Kia Syros ஆகும். இந்த இரண்டு காரில் எந்த கார் வாங்கலாம்? எந்த கார் சிறந்த கார்? என்பதை கீழே விரிவாக காணலாம். இதன் தரம், மைலேஜ், விலை ஒப்பீடு செய்து காணலாம்.

விலை:

Hyundai Venue காரின் தொடக்க விலை ரூபாய் 9.47 லட்சம் ஆகும். இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 19.56 லட்சம் ஆகும். 

Kia Syros காரின் தொடக்க விலை ரூபாய் 10.22 லட்சம் ஆகும். இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 19.65 லட்சம் ஆகும். 

எஞ்ஜின்:

Hyundai Venue காரில் 1197 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 4 சிலிண்டர்கள் இன்லைன், 4 வால்வ்ஸ் உள்ளது. காப்பா 1.2 லிட்டர் MPi எஞ்ஜின் ரகம் ஆகும். பெட்ரோலில் ஓடும் ஆற்றல் கொண்டது. 82 பிஎச்பி குதிரை ஆற்றல் கொண்டது. 6 ஆயிரம் ஆர்பிஎம் திறன் கொண்டது. 114.7 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. BS6 ரகம் ஆகும். 

Kia Syros காரில் 998 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 3 சிலிண்டர் இன்லைன் உள்ளது. ஸ்மார்ட்ஸ்ட்ரீம் G1.0T-GDi எஞ்ஜின் ரகம் ஆகும். டர்போசார்ஜ்ட் வசதி கொண்டது. 118 பிஎச்பி குதிரை ஆற்றல் கொண்டது. 6 ஆயிரம் ஆர்பிஎம் திறன் கொண்டது. 172 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. BS6 ரகம் ஆகும்.

கியர்கள்:

Hyundai Venue மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் வசதி கொண்டது. மேனுவலில் 5 கியர்கள் கொண்டது. 

Kia Syros மேனுவலில் 6 கியர்கள் கொண்டது. 

மைலேஜ்:

Hyundai Venue கார் லிட்டருக்கு 18.5 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது. Idle  ஸ்டார்ட்/ ஸ்டாப் வசதி இதில் இல்லை. 

Kia Syros கார் லிட்டருக்கு 18.2 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது. Idle  ஸ்டார்ட்/ ஸ்டாப் வசதி இதில் உண்டு. 

இருக்கை, பெட்ரோல் டேங்க் வசதி:

Hyundai Venue காரில் 2 வரிசைகளாக 5 இருக்கைகள் உள்ளது. 5 கதவுகள் உள்ளது. 375 லிட்டர் டிக்கி வசதி கொண்டது. 45 லிட்டர் பெட்ரோல் டேங்க் வசதி கொண்டது. 

Kia Syros காரில் 2 வரிசைகளாக 5 இருக்கைகள் உள்ளது. 5 கதவுகள் உள்ளது. 390 லிட்டர் டிக்கி வசதி உள்ளது. 45 லிட்டர் பெட்ரோல் டேங்க் வசதி உள்ளது. 

பாதுகாப்பு:

Hyundai Venue காரில் என்சிஏபி தர பரிசோதனை மேற்கொள்ளவில்லை. 6 ஏர்பேக்குகள் உள்ளது. ஓட்டுனர், முன் இருக்கை பயணி, 2 கர்டைன், ஓட்டுனர் பக்கம், முன் இருக்கை பயணி  பக்கவாட்டில் இவை உள்ளது. 80 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல்  சென்றால் 1 பீப் சத்தம் வரும். 120 கிலோமீ்ட்டர் வேகத்திற்கு மேல் சென்றால் தொடர்ந்து பீப் சத்தம் வரும். ரிவர்ஸ் கேமரா இல்லை.

Kia Syros கார் Bharat NCAP தர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த காரில் 6 ஏர்பேக்குகள் உள்ளது. ஓட்டுனர், முன்பக்க பயணி, 2 கர்டைன், ஓட்டுனர் பக்கவாடு, முன்பக்க பயணி பக்கவாட்டில் இந்த ஏர்பேக்குகள் உள்ளது. 80 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல்  சென்றால் 1 பீப் சத்தம் வரும். 120 கிலோமீ்ட்டர் வேகத்திற்கு மேல் சென்றால் தொடர்ந்து பீப் சத்தம் வரும். ரிவர்ஸ் கேமரா உள்ளது.

கேபின்:

Hyundai Venue காரில் 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே உள்ளது. 4 ஸ்பீக்கர்கள் உள்ளது. ப்ளூடூத் கனெக்ஷன் மூலமாக செல்போன் அழைப்பு பேசலாம். குரல் கட்டளை வசதி உள்ளது. ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி உள்ளது.

Kia Syros காரில் 12.3 இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே உள்ளது. 4 ஸ்பீக்கர்கள் உள்ளது. ப்ளூடூத் கனெக்ஷன் மூலமாக செல்போன் அழைப்பு பேசலாம். குரல் கட்டளை வசதி இல்லை. ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி உள்ளது.

வண்ணங்கள்: 

Hyundai Venue கார் மொத்தம் 8 வண்ணங்களில் உள்ளது. 

Kia Syros கார் மொத்தம் 8 வண்ணங்களில் உள்ளது.

இந்த தரவுகளை ஒப்பிட்டு உங்கள் பட்ஜெட்டிற்கு ஏதுவான காரை வாங்கலாம்.

தலைப்பு செய்திகள்

Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Hero First Electric Bike: இப்போ வாங்கடா போட்டிக்கு.! தாறுமாறான EV பைக்கை களமிறக்கும் ஹீரோ மோட்டோகார்ப்; அறிமுகம் எப்போ.?
இப்போ வாங்கடா போட்டிக்கு.! தாறுமாறான EV பைக்கை களமிறக்கும் ஹீரோ மோட்டோகார்ப்; அறிமுகம் எப்போ.?
Maruti Fronx on Discount: செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
Alto K10 Price: நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget