மேலும் அறிய

Hyundai Venue: ரூ.11 லட்சம்லா ரொம்ப ஓவர்..! ரூ.8 லட்சத்துக்கே 5 ஸ்டார் ரேட்டிங் - செல்டோஸை அலறவிட்ட வென்யு

Hyundai Venue: ஹுண்டாயின் புதிய மேம்படுத்தப்பட்ட எஸ்யுவி ஆன வென்யு கார் மாடல், பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளது.

Hyundai Venue: பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ள ஹுண்டாயின் புதிய வென்யுவின் விலை, ரூ.7.90 லட்சத்தில் தொடங்குகிறது. 

பாதுகாப்பில் மிரட்டிய ஹுண்டாய் வென்யு..

ஹுண்டாயின் மிகவும் பிரபலமான காம்பேக்ட் எஸ்யுவி ஆன வென்யு, பாரத் புதிய கார் மதிப்பீடு (NCAP) திட்டத்தில், பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளது. இந்த பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட ப்ராண்டின் முதல் காரானா டஸ்கன் (தற்போது விற்பனையில் இல்லை) மாடலை தொடர்ந்து, இரண்டாவது கார் என்ற பெருமையை புதிய வென்யு பெற்றுள்ளது. இது பெரியவர்களுக்கான பாதுகாப்பு பிரிவில் ஒட்டுமொத்த 32 புள்ளிகளில் 31.15 புள்ளிகளை ஈட்டியுள்ளது. அதேநேரம் குழந்தைகளுக்கான பாதுகாப்பு பிரிவில் ஒட்டுமொத்த 49 புள்ளிகளில் 44.46 புள்ளிகளை பெற்று கவனத்தை ஈர்த்துள்ளது.

வென்யு - பெரியவர்களுக்கான பாதுகாப்பு பரிசோதனை

விபத்தின் போது முன்பக்க தாக்கத்திலிருந்து பயணிகளை காப்பதற்கான 16 புள்ளிகளில் 15.15 புள்ளிகளை ஈட்டியுள்ளது. அதாவது ஓட்டுனரின் தலை, கழுத்து, இடுப்பு, தொடை மற்றும் பாதங்களுக்கு நல்ல பாதுகாப்பை வழங்குகிறது. மார்பகம் மற்றும் மூட்டு பகுதிகளுக்கு போதுமான அளவிலான பாதுகாப்பை உறுதி செய்கிறது. சக பயணிகளுகு கால் மீட்டிற்கு மட்டும் போதுமான அளவிற்கும், மற்ற பாகங்களுக்கு நல்ல பாதுகாப்பினையும் வென்யு உறுதி செய்துள்ளது.  அதேநேரம்,பக்கவாட்டு தாக்கத்திலிருந்து பயணிகளை காப்பதற்கான பரிசோதனையில் 16 புள்ளிகளில் 16 புள்ளிகளையும் பெற்றுள்ளது. நகர்ந்தபடியே சென்று வாகனம் மோதும்போதும்,காரின் அனைத்து பகுதிகளுக்கும் நல்ல பாதுகாப்பை வென்யு கொண்டுள்ளது. இதன் மூலம் முழு மதிப்பெண்களை ஈட்டியுள்ளது.

Hyundai Venue: ரூ.11 லட்சம்லா ரொம்ப ஓவர்..! ரூ.8 லட்சத்துக்கே 5 ஸ்டார் ரேட்டிங் - செல்டோஸை அலறவிட்ட வென்யு

வென்யு - குழந்தைகளுக்கான பாதுகாப்பு பரிசோதனை

18 மாத குழந்தைக்கான மாதிரியை கொண்டு இந்த பிரிவிற்கான சோதனை நடத்தப்பட்டது. அதில் முன் பக்க க்ராஷ் டெஸ்டில் எட்டுக்கு 7.46 புள்ளிகளையும், பக்கவாட்டு க்ராஷ் டெஸ்டில் நான்கிற்கு நான்கு புள்ளிகளையும் பெற்றது. 3 வயது குழந்தையின் மாதிரியை கொண்டு பரிசோதித்தபோது முன்பக்க மற்றும் பக்கவாட்டு சோதனைகள் இரண்டிலுமே முழு புள்ளிகளை ஈட்டி 13 புள்ளிகளை பெற்றது. CRS எனப்படும் குழந்தைகளுக்கான பூஸ்டர் இருக்கை சோதனையும் வென்யுவிற்கு எளிதாகவே இருந்தது. வாகன மதிப்பீட்டு பிரிவில் மட்டும் வென்யு 4 புள்ளிகளை இழந்துள்ளது.

Hyundai Venue: ரூ.11 லட்சம்லா ரொம்ப ஓவர்..! ரூ.8 லட்சத்துக்கே 5 ஸ்டார் ரேட்டிங் - செல்டோஸை அலறவிட்ட வென்யு

ஹுண்டாய் வென்யு பாதுகாப்பு அம்சங்கள் 

பாரத் புதிய கார் மதிப்பீட்டு சோதனையில் வென்யுவின் HX2 டீசல் MT மற்றும் HX10 டீசல் AT ஆகிய கார் மாடல்கள் உட்படுத்தப்பட்டன. ஆனாலும், இந்த காம்பேக்ட் எஸ்யுவியின் அனைத்து வேரியண்ட்களுக்கும் பாதுகாப்பிற்கான 5 ஸ்டார் ரேட்டிங் பொருந்தும். இதில் ஸ்போர்டி என் லைன் வேரியண்டும் அடங்கும். இந்த காரில் நிலையான பாதுகாப்பு அம்சங்களாக 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், அனைத்து சீட் பெல்ட்களிலும் ரிமைண்டர்களுடன் கூடிய 3 பாயிண்ட்ஸ் சீட்பெல்ட், ரியர் பார்கிங் சென்சார்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஐசோஃபிக்ஸ் இருக்கைகள் ஆகிய்அவை வழங்கப்படுகின்றன. மேலும் டாப் வேரியண்ட்களால் லெவல் 2 ADAS, ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலெக்ட்ரானிக் பார்கிங் ப்ரேக் மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற பல அம்சங்களை கொண்டுள்ளன.

Hyundai Venue: ரூ.11 லட்சம்லா ரொம்ப ஓவர்..! ரூ.8 லட்சத்துக்கே 5 ஸ்டார் ரேட்டிங் - செல்டோஸை அலறவிட்ட வென்யு

வென்யு - போட்டியாளர்களின் ரேட்டிங்

பெரியவர்களுக்கான பாதுகாப்பு பரிசோதனையில் வென்யு பெற்றுள்ள 31.15 புள்ளிகள் என்பது, பாரத் பாதுகாப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட எந்தவொரு காம்பேக்ட் எஸ்யுவியை காட்டிலும் அதிகமாகும். அதன்படி, டாடா நெக்ஸான் 29.41 புள்ளிகளையும், ஸ்கோடா கைலாக் 30.88 புள்ளிகளையும், மஹிந்த்ராவின் XUV 3XO 29.36 புள்ளிகளையும், கியா சைரோஸ் 30.21 புள்ளிகளையும் ஈட்டியுள்ளது. குழந்தைகளுக்கான பாதுகாப்பு பிரிவிலும் மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து போட்டியாளர்களையும் வென்யு பின்னுக்கு தள்ளியுள்ளது. கைலாக் மட்டுமே 45 புள்ளிகளை பெற்று முதலிடம் பெற்றுள்ளது.

கார் மாடல் பெரியவர்களுக்கான பாதுகாப்பு புள்ளிகள் குழந்தைகளுக்கான பாதுகாப்பு புள்ளிகள்
ஹுண்டாய் வென்யு 31.15/32 44.46/49
டாடா நெக்ஸான் 29.41/32 43.83/49
ஸ்கோடா கைலாக் 30.88/32 45/49
மஹிந்த்ரா XUV 3XO 29.36/32 43/49
கியா சைரோஸ் 30.21/32 44.42/49

வென்யு - விலை விவரங்கள்

ஹுண்டாய் வென்யு கார் மாடலானது ரூ.7.90 லட்சத்தில் தொடங்கி ரூ.13.88 லட்சம் வரையிலான விலை வரம்பை கொண்டுள்ளது. பெட்ரோல், டர்போ பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் உடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் 25 வேரியண்ட்களில் வென்யு விற்பனை செய்யப்படுகிறது.  அண்மையில் மேம்படுத்தி அறிமுகப்படுத்தப்பட்ட கியாவின் மிட்-சைஸ் எஸ்யுவி ஆன செல்டோஸ் மாடலும் பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளது. ஆனால் இதன் விலை வரம்பு ரூ.10.99 லட்சத்தில் தொடங்கி ரூ.19.99 லட்சம் வரை நீள்கிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
TVS Bike Price Hike: டிவிஎஸ் பைக் வாங்க போறீங்களா?.. சத்தம் இல்லாமல் உயர்ந்த விலை.. எவ்வளவு?
TVS Bike Price Hike: டிவிஎஸ் பைக் வாங்க போறீங்களா?.. சத்தம் இல்லாமல் உயர்ந்த விலை.. எவ்வளவு?
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget