மேலும் அறிய

Hyundai Hybrid: புதுசா 3 ஹைப்ரிட் மாடல நாங்க இறக்குறோம் - ரெண்டு 7 சீட்டரும் இருக்கு - ஹுண்டாயின் அதிரடி திட்டம்

Hyundai Hybrid Cars: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அடுத்தடுத்து 3 ஹைப்ரிட் கார் மாடல்களை களமிறக்க ஹுண்டாய் திட்டமிட்டுள்ளது.

Hyundai Hybrid Cars: இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கு இரண்டு 7 சீட்டர் ஹைப்ரிட் கார் மாடல்களை ஹுண்டாய் தயார்படுத்தி வருகிறதாம்.

ஹுண்டாயின் 3 ஹைப்ரிட் கார் மாடல்கள்:

இந்திய கார் சந்தையில் போட்டித்தன்மை அதிகரித்து வரும் நிலையில், தனது போர்ட்ஃபோலியோவில் அடுத்த 5 ஆண்டுகளில் புதியதாக 26 கார் மாடல்களை இணைக்க ஹுண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய பட்டியலில் பல புதிய தலைமுறை கார் மாடல்களை கொண்டிருப்பதோடு, முற்றிலும் புதிய எஸ்யுவிக்கள், ஆஃப் ரோட் எஸ்யுவி மற்றும் எம்பிவி ஆகிய மாடல்கள் பலதரப்பட்ட பவர்ட்ரெயின் விருப்பங்களில் இடம்பெற உள்ளது. உள்நாட்டில் அதிகரித்து வரும் ஹைப்ரிட் கார்களுக்கான தேவையை உணர்ந்து, அந்த பிரிவிலும் இந்த தென்கொரிய நிறுவனம் கவனம் செலுத்த உள்ளது. அதன்படி, ப்ராண்ட் சார்பில் உள்நாட்டில் களமிறக்கப்பட உள்ள முதல் ஹைப்ரிட் கார் மாடலாக, 2027ம் ஆண்டு புதிய தலைமுறை க்ரேட்டா சந்தைப்படுத்தப்பட உள்ளது.

இதைதொடர்ந்து, இரண்டு புதிய 7 சீட்டர் எஸ்யுவிக்களையும் ஹுண்டாய் திட்டமிட்டுள்ளது. அதில் ஹுண்டாய் Ni1i மற்றும் ஹுண்டாய் பாலிசேட் மாடல்களும் அடங்கும். இந்த கார் மாடல்கள் எப்போது சந்தைப்படுத்தப்படும்? அதில் இடம்பெற உள்ள பவர்ட்ரெயின் ஆப்ஷன்கள் என்ன? என்பது போன்ற முக்கிய விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ஹுண்டாய் Ni1i எப்படி இருக்கு? எப்போது வரும்?

ஹுண்டாயின் ப்ராடக்ட் லைன் - அப்பில் புதிய Ni1i கார் மாடலானது நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவில், அல்கசார் மாடலுக்கு மேலேயும், டக்சன் மாடலுக்கும் கீழேயும் நிலைநிறுத்தப்பட உள்ளது. போட்டிக்கான மாடல்கள் என எடுத்துக்கொண்டால் உள்ளூரில் ஹுண்டாயின் புதிய Ni1i 7 சீட்டரானது, மஹிந்த்ராவின் XUV 7X0, எம்ஜி ஹெக்டர் ப்ளஸ், டாடா சஃபாரி மற்றும் விரைவில் சந்தைப்படுத்தப்பட உள்ள கியா சொரெண்டோ, ரெனால்ட் போரியல், 7 சீட்டர் மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா ஹைரைடர் ஆகிய மாடல்கள் உள்ளன.

தற்போதைய சூழலில் இந்த கார் மாடல் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. இருப்பினும் இந்த காரானது சீன சந்தையில் உள்ள டக்சன் LWB மாடலை அடிப்படையாக கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த காரானது உள்ளூர் சந்தையில் 1.5 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட்  பெட்ரோல் இன்ஜினை ஹைப்ரிட் எடிஷனில் பெற உள்ளது. முன்னதாக, புதிய தலைமுறை க்ரேட்டா காரில் இந்த ஹைப்ரிட் இன்ஜினை அறிமுகப்படுத்த ஹுண்டாய் திட்டமிட்டுள்ளது.

Hyundai Hybrid: புதுசா 3 ஹைப்ரிட் மாடல நாங்க இறக்குறோம் - ரெண்டு 7 சீட்டரும் இருக்கு - ஹுண்டாயின் அதிரடி திட்டம்

ஹுண்டாய் பாலிசேட்

ஹுண்டாய் பாலிசேட் கார் மாடலானது சர்வதேச சந்தையில் 7 மற்றும் 8 சீட்டர் கான்ஃபிகரேஷனில் கிடைக்கிறது. இந்த காரானது ப்ராண்டின் அடுத்த தலைமுறை 2.5 லிட்டர் டர்போ பெட்ரோல் ஹைப்ரிட் பவர்ட்ரெயினின் அறிமுகப்பத்திற்கு வழிவகுக்க உள்ளது. இந்த இயந்திரமானது லிட்டருக்கு 14.1 கிலோ மிட்டர் மைலேஜையும், டேங்கை முழுமையாக நிரப்பினால் ஆயிரத்து 15 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும் எனவும் கூறப்படுகிறது. 

இந்த ஹைப்ரிட் எடிஷனானது 334hp, 460Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ளது. 6 ஸ்பீட் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷனுடன், ஃப்ரண்ட் வீல் ட்ரைவ் மற்றும் ஆல் வீல் ட்ரைவ் ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. பாலிசேட் மாடலில் ஈகோ, ஸ்போர்ட், மை ட்ரைவ் ஆகிய மூன்று ட்ரைவிங் மோட்கள் கிடைக்கின்றன. இதுபோக,மட், ஸ்நோ மற்றும் சாண்ட் ஆகிய மூன்று ட்ரெயின் மோட்களும் உள்ளன. ஹுண்டாயின் ஃப்ளாக்‌ஷீப் மாடலாக பாலிசேட்டின் விலையானது 50 லட்சம் ரூபாய் வரையில் நிர்ணயிக்கப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
TVS Bike Price Hike: டிவிஎஸ் பைக் வாங்க போறீங்களா?.. சத்தம் இல்லாமல் உயர்ந்த விலை.. எவ்வளவு?
TVS Bike Price Hike: டிவிஎஸ் பைக் வாங்க போறீங்களா?.. சத்தம் இல்லாமல் உயர்ந்த விலை.. எவ்வளவு?
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Embed widget