SIP தொடங்க ஆசையா..! மொதல்ல இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க

Published by: குலசேகரன் முனிரத்தினம்

குழந்தைகளின் படிப்பு திருமணம் வீடு வாங்குதல் அல்லது ஓய்வு போன்ற தெளிவான இலக்கை முதலில் நிர்ணயுங்கள்

நீங்கள் எவ்வளவு காலம் பணத்தை முதலீடு செய்ய முடியும் என்பதை முன்கூட்டியே திட்டமிடுங்கள்.

பெரிய கேபி, நடுத்தர கேபிடல், சிறிய கேபிடல் அல்லது பல கேபிடல் நிதிகளில் எதை தேர்வு செய்வது என்பதைப் பரிசீலியுங்கள்

உங்கள் வயது, வருமானம் மற்றும் பொறுப்புகளைப் பொறுத்து நீங்கள் எவ்வளவு ரிஸ்க் எடுக்க முடியும் என்பதை மதிப்பிடுங்கள்.

சிறு தொகையுடன் கூடிய விரைவில் தொடங்குங்கள்.

சந்தை வீழ்ச்சியடைந்தால் உங்களுக்கு அதிக யூனிட்கள் கிடைக்கும் சந்தை உயர்ந்தால் குறைந்த யூனிட்கள் கிடைக்கும்

குறைந்த எக்ஸ்பென்ஸ் விகிதம் கொண்ட நிதிகளைத் தேர்ந்தெடுப்பது உங்கள் லாபத்தை அதிகரிக்கும்.

நேரடி திட்டத்தில் கமிஷன்கள் இருக்காது என்பதால் நீண்டகால அடிப்படையில் வழக்கமான திட்டத்தை விட 1-1.5% கூடுதல் லாபம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

சந்தையின் ஏற்ற இறக்கங்களைப் பார்த்து பயந்து நடுவில் நிறுத்திவிடாமல், ஒரு குறிப்பிட்ட காலம் வரை தொடர்வது முக்கியம்.

உங்கள் SIP தொகையை 5% அல்லது 10% ஆக உயர்த்திக் கொண்டே இருங்கள். இதன் மூலம் உங்கள் நிதி இலக்குகளை மிக விரைவில் அடையலாம்.