Hyundai New Cars: இனிமே நாங்கதான்.. Bayon முதல் Verna facelift வரை.. அறிமுகமாகும் ஹுண்டாய் கார்கள்!
ஹுண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள 4 புதிய கார்களின் பட்டியலை கீழே காணலாம்.

இந்தியாவின் மிகவும் பிரபலமான கார் நிறுவனங்களில் ஒன்று ஹுண்டாய். உலகளவில் புகழ்பெற்ற நிறுவனமாக திகழும் இவர்களின் இந்திய சந்தை என்பது தவிர்க்க முடியாத சந்தை ஆகும். இந்திய வாடிக்கையாளர்களுக்காகவே பல்வேறு பிரத்யேக கார்களை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறது.
இந்தாண்டு ஹுண்டாய் நிறுவனம் 4 புதிய கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அது என்னென்ன கார்கள் என்பதை கீழே காணலாம்.
1. Hyundai Bayon
2. Hyundai Exter Facelift
3. Hyundai New Creta
4. Hyundai Verna facelift
இந்த நான்கு கார்களை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளனர்.
1.Hyundai Bayon:
நடப்பாண்டின் பிற்பகுதியில் அல்லது கடைசியில் இந்த Hyundai Bayon கார் அறிமுகமாக உள்ளது. காம்பேக்ட் எஸ்யூவி ரகமாக இந்த கார் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்ட காராக அறிமுகமாக உள்ளது. 1197 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட உள்ளது. பெட்ரோலில் ஓடும் வகையில் இந்த கார் உருவாக்கப்படுகிறது. இதன் விலை ரூபாய் 7 லட்சம் முதல் ரூபாய் 15 லட்சம் வரை இருக்கும் என்று கருதப்படுகிறது. ப்ரான்க்ஸ், டெய்சர், சிட்ரோன் சி3, கிகர், மெக்னைட் காருக்கு போட்டியாக இந்த Hyundai Bayon கார் இருக்கும் என்று கருதப்படுகிறது.
2. Hyundai Exter Facelift:
ஹுண்டாயின் Hyundai Exter காரின் அப்டேட் வெர்சனாக இந்த Hyundai Exter Facelift கார் உருவாகிறது. இந்த கார் நடப்பாண்டின் இடைப்பகுதியில் அறிமுகமாக உள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 6 லட்சமாகவும், அதிகபட்சமாக ரூபாய் 10 லட்சமாகவும் இருக்கும் என்று கருதப்படுகிறது. 1197 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட உள்ளது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜியில் ஓடும் வகையில் உருவாக்கப்பட உள்ளது. எஸ்யூவி ரக காரான Citroen C3, Maruti Suzuki Ignis மற்றும் Tata Punch ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
3.Hyundai New Creta:
ஹுண்டாய் அறிமுகப்படுத்த உள்ள Hyundai New Creta கார் 2027ம் ஆண்டு அறிமுகமாக உள்ளது. எஸ்யூவி ரக காரான இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 11.30 லட்சம் ஆகும். இந்த கார் அதிகபட்சமாக ரூபாய் 20.50 லட்சம் ஆகும். இந்த காரின் விலை ரூபாய் 1497 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட உள்ளது. பெட்ரோலில் ஓடும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்படுகிறது.
4.Hyundai Verna facelift:
ஹுண்டாய் நிறுவனத்தின் வெற்றிகரமான கார்களில் ஒன்று Hyundai Verna. இந்த காரின் அப்டேட் வெர்சனாக அறிமுகமாக உள்ளது Hyundai Verna facelift. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 11 லட்சம். இந்த காரின் அதிகபட்ச விலை ரூபாய் 18 லட்சம் ஆகும். 1497 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட உள்ளது. செடான் ரகத்தில் இந்த கார் அறிமுகமாக உள்ளது. பெட்ரோலில் இந்த கார் ஓடும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. ஜுன் மாதம் இந்த கார் அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்






















