Honda Activa 6G: 60 கி.மீட்டர் மைலேஜ் தருது.. ஹோண்டா ஆக்டிவா 6ஜி விலை என்ன? ஸ்பெஷல் என்ன?
ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரின் விலை, சிறப்பம்சங்கள் என்னென்ன? என்பது குறித்து கீழே காணலாம்.

இந்தியாவில் ஆண்கள், பெண்கள் என அனைவரும் விரும்பும் ஸ்கூட்டி மாடல்களில் ஒன்றாக இருப்பது ஆக்டிவா. ஹோண்டா நிறுவனத்தின் வெற்றிகரமான படைப்புகளில் ஒன்று இந்த ஹோண்டா ஆக்டிவா. தற்போது சந்தைகளில் வெற்றிகரமாக விற்பனை செய்யப்படும் ஸ்கூட்டர்களில் முதன்மை இடத்தில் ஹோண்டா ஆக்டிவா 6ஜி உள்ளது. ஹோண்டா ஆக்டிவா 6ஜியில் என்னென்ன சிறப்பம்சங்கள்? அதன் விலை என்ன? என்பதை கீழே காணலாம்.
ஹோண்டா ஆக்டிவா 6ஜி:
பொதுவாக ஸ்கூட்டி வாங்கலாம் என்று எண்ணம் தோன்றினாலே முதலில் அனைவரது எண்ணத்திற்கும் வருவது ஆக்டிவா. இதன் தோற்றமும், இதன் கட்டமைப்புமே அதற்கு காரணம். ஹோண்டா ஆக்டிவா 6ஜி-யின் தோற்றத்தைப் பொறுத்தமட்டில் அதற்கு முந்தைய ஜெனரேஷன் மாடல்களிலே இதையும் உருவாக்கியுள்ளனர். முகப்பு விளக்குகள், இண்டிகேட்டர் போன்றவை அதற்கு முந்தைய மாடலைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
என்னென்ன மாடல்கள்?
ஹோண்டா ஆக்டிவா 6ஜியில் மொத்தம் 4 வேரியண்டகள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, Honda Activa 6G STD, Honda Activa 6G DLX, Honda Activa 110 மற்றும் Honda Activa 6G H-Smart ஆகிய 4 வேரியண்ட்களில் உள்ளது. இந்த 4 வேரியண்ட்களிலும் 109.51 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த வாகனங்களின் 5.3 லிட்டர் பெட்ரோல் தாங்கும் திறன் கொண்ட டேங்க் உள்ளது. இந்த 4 வேரியண்ட்களும் பெட்ரோலில் ஓடும் திறன் கொண்டது. ப்ரேக்குகள் ட்ரம் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது.
மைலேஜ் எப்படி?
மைலேஜைப் பொறுத்தவரையில் நெடுஞ்சாலையில் 56 கி.மீட்டர் வரை தருகிறது. நகர்ப்புறங்களைப் பொறுத்தவரை 60 கி.மீட்டர் வரை தருகிறது. இதில் 7.99 பிஎஸ் பவர் 8 ஆயிரம் ஆர்பிஎம்-லும், மற்றும் 9.05 என்எம் டார்க் இழுதிறன் உள்ளது. 60 கி.மீட்டர் வேகத்தை 10.31 நொடிகளில் இந்த ஹோண்டா ஆக்டிவா 6ஜி எட்டி விடுகிறது. ஆக்டிவா 5ஜி-யுடன் ஒப்பிடும்போது இந்த வேகம் அதிகம் ஆகும்.
விலை என்ன?
Honda Activa 6G STD - ரூ. 85 ஆயிரத்து 344
Honda Activa 6G DLX - ரூ.95 ஆயிரத்து 864
Honda Activa 110 - ரூ.96 ஆயிரத்து 864
Honda Activa 6G H-Smart - ரூ.98 ஆயிரத்து 865
நகர்ப்புறங்களிலும், நெடுஞ்சாலைகளிலும் ஓட்டிச் செல்வதற்கு ஏற்ற வாகனமாக ஆக்டிவா இருப்பதால் இது பலரின் முதன்மைத் தேர்வாக உள்ளது. இது நீலம், சாம்பல், கருப்பு, வெள்ளை, சிவப்பு போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
ஸ்கூட்டரில் ஆக்டிவாவிற்கு போட்டியாக டிவிஎஸ்-ல் ஜுபிடர், டியோ உள்ளிட்ட பல மாடல்கள் சந்தையில் விற்பனையாகி வருகிறது. ஆனால், தரம், பாதுகாப்பு, நீடித்த உழைப்பு போன்றவற்றிற்காக ஆக்டிவா முதன்மையாக உள்ளது.
மேலும், தற்போது மின்சார ஸ்கூட்டர்களின் விற்பனையும் ஒரு புறம் பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு சவால் அளிக்கும் விதமாக நடந்து வருகிறது. ஓலா, ஏதர், சிம்பிள் ஒன் போன்ற பல நிறுவனங்கள் இ ஸ்கூட்டர் விற்பனையில் அசத்தி வருகின்றனர். ஆனாலும், ஆக்டிவா அந்த நிறுவனங்களுக்கும் சவால் அளிக்கும் விதமாக தொடர்ந்து விற்பனையில் அசத்தி வருகிறது. அடுத்தடுத்த பண்டிகை காலங்களில் ஆக்டிவா-வில் புதிய புதிய மாடல்கள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





















