மேலும் அறிய

Hero VIDA VX2 Plus: புதுசா 4.4KWh பெரிய பேட்டரி, 187KM ரேஞ்ச் - ஹீரோவின் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - விலை, விவரங்கள்

Hero VIDA VX2 Plus Electric Scooter: ஹீரோ விடா விஎக்ஸ்2 ப்ளஸ் மின்சார ஸ்கூட்டரில், 4.4KWh என்ற 187 கிலோ மீட்டர் ரேஞ்சுடன் கூடிய புதிய மற்றும் பெரிய பேட்டரி ஆப்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது.

Hero VIDA VX2 Plus Electric Scooter: ஹீரோ விடா விஎக்ஸ்2 ப்ளஸ் மின்சார ஸ்கூட்டரில், 4.4KWh பேட்டரியை கொண்ட எடிஷனின் விலை ரூ.1.44 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹீரோ விடா VX2 ப்ளஸ்  - புதிய 4.4KWh வேரியண்ட்

விடா விஎக்ஸ்2 ப்ளஸ் மின்சார ஸ்கூட்டரில் 4.4KWh பேட்டரியுடன் கூடிய புதிய எடிஷனை அறிமுகப்படுத்தி, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது மின்சார வாகனத்தின் போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்தியுள்ளது. VX2 ஸ்கூட்டர்களின் புதிய ஃப்ளாக்‌ஷீப் வேரியண்டாக நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டரானது, பெரிய அகற்றக்கூடிய பேட்டரி பேக்கை கொண்டுள்ளது. இது ஏற்கனவே உள்ள 3.4KWh பேட்டரி பேக் ஆப்ஷனை காட்டிலும் கூடுதல் ரேஞ்ச் மற்றும் செயல்திறனை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  விடா விஎக்ஸ்2 ப்ளஸ் 4.4KWh வேரியண்டின் விலையானது ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 990 ரூபாயாக (எக்ஸ் - ஷோரூம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், ஜுலை மாத இறுதியில் இருந்து விநியோகம் தொடங்க உள்ளது.

ஹீரோ விடா VX2 ப்ளஸ் 4.4KWh - முக்கிய விவரங்கள்

அம்சங்கள் விடா விஎக்ஸ்2 ப்ளஸ் 4.4KWh வேரியண்ட்
எக்ஸ் - ஷோரூம் விலை ரூ.1,43,990
பேட்டரி 4.4KWh
பேட்டரி கான்ஃபிகரேஷன் இரண்டு அகற்றக்கூடிய 2.2KWh பேட்டரிகள்
சான்றளிக்கப்பட்ட ரேஞ்ச் 187கி.மீ.,
நிஜ உலக எதிர்பார்ப்பு ரேஞ்ச் 140கி.மீ.,
அதிகப்படியான மோட்டார் அவுட்புட் 6KW
அதிகப்படியான டார்க் 26Nm
அதிகப்படியான வேகம் மணிக்கு 90கி.மீ.,
0-40KM/h ஆக்சிலரேஷன் 3.1 விநாடிகள்
ரைடிங் மோட்கள் எகோ, ரைட், ஸ்போர்ட்
இருக்கைக்கு கீழே ஸ்டோரேஜ் 27.2 லிட்டர்
வாகனத்தின் மொத்த எடை 120 கிலோ
டிஸ்பிளே 4.3 இன்ச் டிஎஃப்டி
ப்ரேக்கிங் முன்புறம் டிஸ்க், பின்புறம் சிபிஎஸ் உடன் கூடிய ட்ரம்
டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் நேரம் 65 நிமிடங்களில் பூஜ்ஜியத்திலிருந்து 80% 

ஹீரோ விடா VX2 ப்ளஸ் - 3 பேட்டரி ஆப்ஷன்கள்

இந்திய சந்தையில் விடா விஎக்ஸ்2 ப்ளஸ் மின்சார ஸ்கூட்டர்களானது தற்போது 3 பேட்டரி வேரியண்ட்களில் கிடைக்கிறது. அவை முறையே 2.2KWh, 3.4KWh மற்றும் 4.4KWh ஆகும். இவற்றின் சான்றளிக்கப்பட்ட ரேஞ்ச் 93 கிலோ மீட்டரில் தொடங்கி 187 கிலோ மீட்டர் தூரம் வரை நீள்கிறது. அதிகபட்சம் வேகம் மணிக்கு 70 கிலோ மீட்டரில் தொடங்கி 90 கிலோ மீட்டர் வரை நீள்கிறது.

இதையும் படியுங்கள்: Tata Tiago: பட்ஜெட்டில் பாதுகாப்பான EV கார் - 285KM ரேஞ்ச், 4 ஸ்டார் ரேட்டிங் - ரூ.4500 போதும், EMI விவரங்கள்

ஹீரோ விடா VX2 ப்ளஸ் - அம்சங்கள், வசதிகள்

இந்த ஸ்கூட்டரில் முழுமையான LED விளக்குகள்,  ஸ்டெப் பை ஸ்டெப் நேவிகேஷன், ஸ்மார்ட்போன் கனெக்ட். ஓவர் தி ஏர் அப்டேட்கள்,  ரிவர்ஸ் மற்றும் பார்க் மோட்கள், ரிஜெனரேட்டிவ் ப்ரேக்கிங்,  இருவழி த்ராட்டில் ஃபங்க்சனாலிட்டி,  ஒருங்கிணைந்த ப்ரேக்கிங் சிஸ்டம்,  முன் டிஸ்க் மற்றும் பின் டிரம் பிரேக்குகள், 12 இன்ச் அலாய் வீல்கள்,  இருக்கைக்கு அடியில் 27.2 லிட்டர் சேமிப்பு இடம், 4.8-லிட்டர் முன்புற சேமிப்புப் பகுதி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.  மேலும் மேட் க்லாலோ லைம், நெக்சஸ் ப்ளூ, மேட் இன்ஸ்பைர்ட் ஒய்ட், பெர்ல் ரெட், பெர்ல் ப்ளாக், ஆடம் ஆரஞ்சு மற்றும் மெடாலிக் மேட் கன் மெடல் க்ரே ஆகிய 7 வண்ண விருப்பங்களில் ஒன்றை பயனர்கள் தேர்வு செய்துகொள்ளலாம்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Hyundai Cars: அடிமேல் அடி வாங்கிய ஹூண்டாய் கார்கள்.. ரூ.480 கோடி நஷ்டம்.. என்ன காரணம்?
Hyundai Cars: அடிமேல் அடி வாங்கிய ஹூண்டாய் கார்கள்.. ரூ.480 கோடி நஷ்டம்.. என்ன காரணம்?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Upcoming Powerful SUVs: SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
Thoppu venkatachalam : மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
Embed widget