மேலும் அறிய

Tata Tiago: பட்ஜெட்டில் பாதுகாப்பான EV கார் - 285KM ரேஞ்ச், 4 ஸ்டார் ரேட்டிங் - ரூ.4500 போதும், EMI விவரங்கள்

Low Budget Safest EV Car Tata Tiago: இந்திய சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கும் பாதுகாப்பான மின்சார காரை, எளிய மாதாந்திர தவணை முறையில் சொந்தமாக்குவதற்கான நிதி திட்டங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Low Budget Safest EV Car Tata Tiago: இந்திய சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கும் பாதுகாப்பான மின்சார காரான, டாடா டியாகோ குறித்த விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

குறைந்த விலையில் பாதுகாப்பான EV:

இந்தியாவில் எரிபொருட்களின் விலை கொடுக்கும் அச்சம் காரணமாகவே பெரும்பாலானோர், மின்சார வாகனங்களை நோக்கி நகர தொடங்கியுள்ளனர். ஆனால், அங்கும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளில் எந்தமாற்றமும் இல்லை. குறிப்பாக பட்ஜெட்டில் பாதுகாப்பான மின்சார கார் என்பதே பெரும்பாலானோரின் பிரதான தேர்வாக உள்ளது. அப்படி அந்த வரம்பை ஆராய்ந்தால் பலரும் டாடா பஞ்சின் பெயரை குறிப்பிடுவார்கள் என்பதில் மாற்றமில்லை. ஆனால் அதைகாட்டிலும் குறைந்த விலையில், பணத்திற்கு நிகரான மதிப்பை கொண்ட பாதுகாப்பான வேறொரு காரும் உள்ளூர் சந்தையில் உள்ளது. அந்த காரை, எளிய மாதாந்திர தவணை முறையில் சொந்தமாக்குவதற்கான நிதி திட்டங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

டாடா டியாகோ EV - விலை வரம்பு

நாட்டிலேயே குறைந்த விலையில் மிகவும் பாதுகாப்பான ரேட்டிங்கை பெற்ற கார் மாடலாக டாடா டியாகோ வாகனம் உள்ளது. இந்த காரின் விலை வரம்பானது ரூ.6.99 லட்சத்தில் தொடங்கி ரூ.9.99 லட்சம் வரை (எக்ஸ் - ஷோரூம்) நீள்கிறது. பேட்டரியை வாடகை முறையில் பயன்படுத்திக் கொள்ளும் (Baas) முறையில் இந்த காரை வாங்க விரும்பினால், வெறும் ரூ.4.69 (எக்ஸ் - ஷோரூம்) செலவு செய்தாலே போதுமானது. அதேநேரம், பேட்டரிக்கு கிலோ மீட்டருக்கு ரூ.2.6 செலவு செய்ய வேண்டி இருக்கும். ஒருவேளை வாடகை பேட்டரி முறையை நீங்கள் தேர்வு செய்தால், தமிழ்நாட்டில் டியாகோ மின்சார காரின் ஆன் - ரோட் விலை 5.25 லட்சத்தில் தொடங்குகிறது. 

டாடா டியாகோ EV - EMI ரூ.4,500 போதும்

பொதுவாகவே வங்கிக் கடன் உதவியுடன் காரை வாங்க விரும்புபவர்கள், பெருந்தொகையை முன்பணமாக செலுத்துவிட்டு, கணிசமான தொகையை கடனாக பெறுவதே லாபகரமானது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அதன் மூலம் நீண்ட கால கடன்சுமை மற்றும் வட்டி செலவை பெரிய அளவில் குறைக்க முடியும். அதோடு, நல்ல சிபில் ஸ்கோரை வைத்திருப்பதன் மூலம், வங்கிகள் 7.45 வட்டி சதவிகிதத்தில் இருந்து கூட வாகன கடன் வழங்க முன்வருகின்றன. அந்த வகையில் சுமார் ரூ.3 லட்சத்தை முன்பணமாக செலுத்தி டியாகோவின் எண்ட்ரி லெவல் மின்சார எடிஷனை தேர்வு செய்தால், மீதமுள்ள ரூ.2.25 லட்சத்திற்கு மட்டுமே நீங்கள் கடனுதவியை அணுக வேண்டி இருக்கும்.

அந்த வகையில் 8 சதவிகித வட்டியுடன் 5 ஆண்டுகளுக்கு கடனை திருப்பி செலுத்த முடிவு செய்தால், மாதம் நீங்கள் சுமார் 4 ஆயிரத்து 500 ரூபாயை தவணையாக செலுத்த வேண்டி இருக்கும். அசலுடன் கூடுதலாக வட்டியுடன் சுமார் 48 ஆயிரம் ரூபாயை செலுத்தி இருப்பீர்கள். ஒட்டுமொத்தமாக 5 லட்சத்து 73 ஆயிரம் ரூபாயில் இந்த ஆட்டோமேடிக் காரை நீங்கள் சொந்தமாக்கலாம். இதுபோக டாடா வழங்கும் மாதாந்திர சலுகைகளை பயன்படுத்தியும், காருக்கான விலையில் கணிசமான சேமிப்பை மேற்கொள்ள முடியும்.

இதையும் படியுங்கள்: Maruti S Presso: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார் - 25.3KM மைலேஜ் தரும் மைக்ரோ SUV - ரூ.4000 EMI திட்ட விவரங்கள்

டாடா டியாகோ EV - 285KM ரேஞ்ச்

டாடா டியாகோவில் 19.2KWh மற்றும் 24KWh என இரண்டு பேட்டரி ஆப்ஷன்கள் உள்ளன. அதில் சிறிய பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 226 கிலோ மீட்டரும், பெரிய பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 285 கிலோ மீட்டரும் ரேஞ்ச் அளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், நிஜ உலக பயன்பாட்டில் இந்த காரானது 160 கிலோ மீட்டர் தொடங்கி 215 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிப்பதாக பயனர்கள் தெரிவிக்கின்றனர். ஃப்ரண்ட் வீல் ட்ரைவ் செட்-அப்பில் சிட்டி மற்றும் ஸ்போர்ட் என இரண்டு ட்ரைவிங் மோட்களை கொண்டுள்ளன. பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 5.7 விநாடிகளில் எட்டுகிறது. மல்டி மோட் 4 லெவல் ரிஜெனரேட்டிவ் ப்ரேக்கிங் சிஸ்டம் இருப்பதால், காரின் நிஜ உலக ரேஞ்ச் கணிசமாக உயருகிறது.


Tata Tiago: பட்ஜெட்டில் பாதுகாப்பான EV கார் - 285KM ரேஞ்ச், 4 ஸ்டார் ரேட்டிங் - ரூ.4500 போதும், EMI விவரங்கள்

டாடா டியாகோ EV - அம்சங்கள், வசதிகள்

காரின் டாப் வேரியண்ட்களில், வயர்லெஸ் ஆண்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே உடன் கூடிய 10.25 இன்ச்  ஃப்ளோட்டிங் டச்ஸ்க்ரீன் உள்ளது. 4 ஸ்பீக்கர் சிஸ்டம் மற்றும் கனெக்டட் கார் டெக்னாலஜி ஆகியவை அனைத்து வேரியண்ட்கலிலும் இடம்பெற்றுள்ளது. ஒளிரும் டாடா லோகோவுடன் கூடிய 2 ஸ்பொஇஒக் ஸ்டியரிங், முழுமையாக ஆட்டோமேடிக் க்ளைமேட் கன்ட்ரோல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், 65W டைப் சி ஃபாஸ்ட் சார்ஜிங் போர்ட் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. டாப் ட்ரிம்களில் ரியர் ஏசி வெண்ட்கள், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் கூல்ட் க்ளோவ்பாக்ஸ் ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளன. 


Tata Tiago: பட்ஜெட்டில் பாதுகாப்பான EV கார் - 285KM ரேஞ்ச், 4 ஸ்டார் ரேட்டிங் - ரூ.4500 போதும், EMI விவரங்கள்

டாடா டியாகோ EV - 4 ஸ்டார் ரேட்டிங்

சர்வதேச பாதுகாப்பு பரிசோதனையில் 4 ஸ்டார் ரேட்டிங்கை பெற்று, இந்த பட்ஜெட்டில் கிடைக்கும் வேறு எந்தவொரு மின்சார காரை காட்டிலும் மிகவும் சிறந்ததாக தனித்து விளங்குகிறது. இதற்காக அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர் பேக்குகள் நிலையாக வழங்கப்பட்டுள்ளன. இதுபோக EBD உடன் கூடிய ஆண்டி லாக் ப்ரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி ப்ரோக்ராம் மற்றும் டாப் வேரியண்ட்களில் ஹில் ஹோல்ட் கன்ட்ரோல் வசதி உள்ளது. கூடுதலாக இண்டைரக்ட் டயர் ப்ரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ரியர் பார்கிங் சென்சார்கள், ஹை-பீம் அசிஸ்ட் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. மிகவும் உயர்ரக வேரியண்ட்களில் நடைமுறைக்கு உகந்த 360 டிகிரி கேமரா சிஸ்டம் மற்றும் ப்ளைண்ட் வியூ மானிட்டர் ஆகியவையும் உள்ளன.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்
Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
ஒரே சார்ஜில் 90 கி.மீட்டர் மைலேஜ்... Firefox Urban Eco இ சைக்கிளை வாங்கி ஓட்டலாமா? விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 90 கி.மீட்டர் மைலேஜ்... Firefox Urban Eco இ சைக்கிளை வாங்கி ஓட்டலாமா? விலை எவ்ளோ?
Best Mileage Cars Under 7 Lakh: சின்ன பட்ஜெட்டு, பெத்த மைலேஜு.! ரூ.7 லட்சத்தில் கிடைக்கும் சக்திவாய்ந்த சிக்கனமான கார்கள் எவை தெரியுமா.?
சின்ன பட்ஜெட்டு, பெத்த மைலேஜு.! ரூ.7 லட்சத்தில் கிடைக்கும் சக்திவாய்ந்த சிக்கனமான கார்கள் எவை தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
Tiruvannamalai Bypass Project: திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்
Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Embed widget