ரூ.14 ஆயிரம் வரை குறைப்பு.. Splendour Plus முதல் Passion Plus வரை.. இன்ப அதிர்ச்சி தந்த ஹீரோ!
ஹீரோ நிறுவனம் தனது Splendour Plus, Passion Plus உள்பட 6 பைக்குகளின் விலையை குறைத்துள்ளது.

ஜிஎஸ்டி வரி மாற்றத்தின் காரணமாக இந்தியாவில் ஏராளமான பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆட்டோமொபைல் சந்தையில் ஜிஎஸ்டி வரி மாற்றம் காரணமாக விலை பன்மடங்கு குறைந்துள்ளது.
ஜிஎஸ்டி வரி குறைப்பால் முன்னணி பைக் நிறுவனமான ஹீரோ தனது இரு சக்கர வாகனங்களின் விலையை குறைத்துள்ளது. எந்தெந்த பைக்குகளின் விலை எவ்வளவு குறைந்துள்ளது? என்பதை கீழே காணலாம்.
1.HF Deluxe - ரூ.5 ஆயிரத்து 800
2. Passion Plus - ரூ.6 ஆயிரத்து 400
3. Splendour Plus - ரூ.6 ஆயிரத்து 800
4. Destini 125 - ரூ.7 ஆயிரத்து 400
5. Glamour x - ரூ.7 ஆயிரத்து 800
6. X pulse 210 - ரூ.14 ஆயிரத்து 500
ஹீரோ நிறுவனம் தனது முன்னணி பைக்குகளின் விலையை குறைத்திருப்பது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
1. HF Deluxe:

ஹீரோ நிறுவனத்தின் இந்த HF Deluxe பைக்கின் ஆன் ரோட் விலை ரூபாய் 75 ஆயிரத்து 345 ஆகும். தற்போது இந்த பைக்கிற்கு ரூபாய் 5 ஆயிரத்து 800 வரை ஜிஎஸ்டி வரி மாற்றத்தால் விலை குறைப்பு செய்துள்ளனர். இந்த பைக்கில் HF Deluxe HF 100, HF Deluxe Kick Alloy, HF Deluxe Self Alloy மற்றும் HF Deluxe All Black வேரியண்ட்கள் உள்ளது. 97.2 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது. லிட்டருக்கு 65 கி.மீட்டர் வரை மைலேஜ் தரும். 4 கியர்களை கொண்டது.
2. Passion Plus:
ஹீரோ நிறுவனத்தின் வெற்றிகரமான படைப்புகளில் ஒன்று Passion Plus ஆகும். இந்த பைக்கும் 97.2 சிசி திறன் கொண்டது. 60 கி.மீட்டர் வரை மைலேஜ் தரும் இந்த Passion Plus-ன் விலை ரூபாய் 99 ஆயிரம் ஆகும். தற்போது இதன் விலை ரூபாய் 6 ஆயிரத்து 400 வரை குறைகிறது. வேகம், பிக்கப், மைலேஜ் காரணமாக பலராலும் விரும்பப்படுகிறது.

3. Splendour Plus:
ஹீரோ நிறுவனத்தின் வெற்றிகரமான தயாரிப்பு இந்த Splendour Plus ஆகும். இதன் விலை ரூபாய் 95 ஆயிரத்து 987 ஆகும். இதன் விலை ரூபாய் 6 ஆயிரத்து 800 வரை குறைத்துள்ளனர். SPLENDOR+ DRUM BRAKE, SPLENDOR+ I3S மற்றும் SPLENDOR+ SPECIAL EDITIONS வேரியண்ட்கள் இதில் உள்ளது. மொத்தம் 7 வண்ணங்களில் இது உள்ளது. இந்த பைக்கும் 97.2 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது.

4. Destini 125:
ஹீரோ நிறுவனத்தின் ஸ்கூட்டி இந்த Destini 125 ஆகும். இந்த ஸ்கூட்டரின் தொடக்க விலை ரூபாய் ரூபாய் 85 ஆயிரத்து 951 ( எக்ஸ் ஷோரூம்). இந்த ஸ்கூட்டருக்கு தற்போது ரூபாய் 7 ஆயிரத்து 400 வரை குறைக்கப்பட்டுள்ளது. இதனால், 80 ஆயிரத்திற்கும் குறைவாக இந்த Destini 125 விற்பனை செய்யப்பட உள்ளது. DESTINI 125 VX, DESTINI 125 ZX மற்றும் DESTINI 125 ZX+ ஆகிய வேரியண்ட்கள் உள்ளது.

5. Glamour x:
ஸ்போர்ட்ஸ் ரகத்தின் காட்சி தரும் இந்த Glamour x பைக்கின் தொடக்க விலை ரூபாய் 90 ஆயிரம் ஆகும். தற்போது இந்த பைக்கிற்கு ரூபாய் 7 ஆயிரத்து 800 வரை குறைத்துள்ளனர். 65 கி.மீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. இதில் பானிக் ப்ரேக் அலர்ட் வசதி உள்ளது. 125 சிசி திறன் கொண்டது இந்த பைக் ஆகும். டிஸ்க் மற்றும் ட்ரம் வேரியண்டில் இந்த பைக் உள்ளது.
6. X pulse 210:

ஹீரோ நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் ரக பைக் இந்த X pulse 210 ஆகும். 210 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் கொண்டது இந்த பைக். இதன் தொடக்க விலை ரூபாய் 2.15 லட்சம் ஆகும். இந்த பைக் ரூபாய் 14 ஆயிரத்து 500 குறைக்கப்பட்டுள்ளது. 6 கியர்களை கொண்டது. சாதாரண சாலைகளிலும், மலைப்பகுதிகளிலும் ஓட்டும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. Xpulse 210 Base மற்றும் Xpulse 210 Top வேரியண்ட்களை கொண்டது. 170 கிலோ எடை கொண்டது இந்த பைக் ஆகும்.




















