Citroen Aircross Offer: சிட்ரோயன் ஏர்கிராஸ் வாங்க சரியான நேரம் - ரூ.3.5 லட்சம் வரையிலான சலுகைகள் அறிவிப்பு
Citroen Aircross Offer: சிட்ரோயன் சி சீரிஸ் மாடல்களுக்கு பிப்ரவரி மாதத்தில் அதிகபட்சமாக, ரூ.3.5 லட்சம் வரை தள்ளுபடி மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Citroen Aircross Offer: சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் மாடலுக்கு அதிகபட்சமாக, ரூ.3.5 லட்சம் வரை தள்ளுபடி மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Citroen Aircross Offer:
Citroen India நிறுவனம் பிப்ரவரி மாத இறுதி வரையில் இன்ஜின் அடிப்படையில் செயல்படும் தனது கார் மாடல்களுக்கு , குறிப்பிடத்தக்க சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. முக்கியமாக 2023 மாடல் இருப்புகளை அகற்றுவதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன்படி, C3 ஹேட்ச்பேக், C3 Aircross அல்லது C5 Aircross மாடலை வாங்குவதற்கான திட்டம் உங்களுக்கு இருந்தால், குறைந்தபட்சமாக ஒன்றரை லட்சம் ரூபாய் வரையிலான சேமிப்புடன் விரும்பிய காரை வாங்கலாம். அந்த வகையில் பயனாளர்கள் அதிகபட்சம் எவ்வளவு சேமிக்க முடியும் என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
Citroen C3 Aircross discounts in February 2024:
பிரெஞ்சு பிராண்டின் மிட்-சைஸ் எஸ்யூவி ஆன C3 ஏர்கிராஸ் மாடலுக்கு, ரூ. 1.9 லட்சம் வரையிலான சலுகைகள் கிடைக்கிறது. இதன் விலை ரூ.10 லட்சத்தில் தொடங்கி ரூ.14.27 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலயில், இந்த சலுகைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதேநேரம், இந்த சலுகைகள்வரையறுக்கப்பட்ட MY23 யூனிட் கையிருப்புகளுக்கு மட்டுமே பொருந்தும். ஹூண்டாய் கிரேட்டா , விடபிள்யூ டைகன் மற்றும் ஹோண்டா எலிவேட் போன்றவற்றுக்கு போட்டியாக , ஏழு பேர் அமரும் வகையில் C3 ஏர்கிராஸ் தனது பிரிவில் தனித்துவமாக உள்ளது. சிட்ரோயன் சமீபத்தில் C3 Aircross இன் ஆட்டோமேடிக் எடிஷனை அறிமுகப்படுத்தியது. இது Aisin-ஆதார 6-ஸ்பீட் டார்க் கன்வேர்ட்டரை 110hp, 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் இணைக்கிறது.
Citroen C3 discounts in February 2024:
MY2023 Citroen C3 மாடல் காரை வாங்குபவர்கள், பிப்ரவரி மாதத்தில் ரூ.1.5 லட்சம் வரையிலான நன்மைகள் மற்றும் தள்ளுபடிகளைப் பெறலாம். இந்த ஹேட்ச்பேக் காரானது இரண்டு பவர்டிரெயின் விருப்பங்களுடன் வருகிறது. அதன்படி, ஒன்று 82 ஹெச்பி, 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. மற்றொன்று 110 ஹெச்பி, 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் 6-ஸ்பீடு மேனுவலுடன் இணைக்கப்பட்டுள்ளது. ரூ.6.16 லட்சத்தில் இருந்து ரூ.9.08 லட்சம் வரையிலான விலையை கொண்டுள்ள சி3, மாருதியின் வேகன் ஆர், இக்னிஸ் மற்றும் டாடா பஞ்ச் ஆகியவற்றிற்கு போட்டியாக உள்ளது.
Citroen C5 Aircross discounts in February 2024:
இந்தியாவில் சிட்ரோயனின் முதன்மயான SUV மாடலின் விற்பனை மந்தமாகவே உள்ளது. கடந்த ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், நிறுவனம் மொத்தம் 55 யூனிட்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இதனால்தான் C5 Aircross மீதான மொத்த தள்ளுபடிகள் மற்றும் நன்மைகள் இந்த மாதத்தில் ரூ. 3.5 லட்சமாக உள்ளது . ஜீப் காம்பஸ் மற்றும் ஹூண்டாய் டக்சன் போன்றவற்றுக்கு போட்டியாக இருக்கும் இந்த மாடல் கடந்த ஆண்டு மேம்படுத்தப்பட்டு, தற்போது ரூ.36.91 லட்சத்தில் இருந்து 37.67 லட்சம் வரையிலான விலையை கொண்டுள்ளது. இந்த SUV ஆனது 177hp, 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.