மேலும் அறிய

Budget E-Scooter: ரூ.45,000-க்கும் குறைவான பட்ஜெட்..! டாப் ஸ்பீடில் மிரட்டும் 4 இ-ஸ்கூட்டர்கள், ரேஞ்சிலும் சளைக்காது..

Budget Electric Scooter: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டாப் ஸ்பீடில் மிரட்டி, 45 ஆயிரத்திற்கும் குறைவான பட்ஜெட்டில் கிடைக்கும் மின்சார ஸ்கூட்டர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Budget Electric Scooter: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 45 ஆயிரத்திற்கும் குறைவான பட்ஜெட்டில் கிடைக்கும் மின்சார ஸ்கூட்டர்களின் முக்கிய விவரங்களை இங்கே அறியலாம்.

மின்சார ஸ்கூட்டர் வாங்க ப்ளானா?

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் எரிபொருட்களின் விலை, வாகன ஓட்டிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதையடுத்து, பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களை மக்கள் நாட தொடங்கியுள்ளனர். ஒருவேளை நகர்ப்பகுதியில் தினசரி பயன்பாட்டிற்காக ஒரு மின்சார ஸ்கூட்டரை வாங்க நீங்கள் பரிசீலித்து வருகிறீர்களா? அதிவேகமாக இயங்குவதோடு, நல்ல ரேஞ்சையும் வழங்கும் மின்சார ஸ்கூட்டர்கள் மிகவும் விலை உயர்ந்தவை என்று தயங்குகிறீர்களா? கவலை வேண்டாம் ​​இந்திய சந்தையில் தற்போது ரூ.60,000-க்கும் குறைவான விலையில், நல்ல பயண வரம்பையும் ஈர்க்கக்கூடிய டாப் ஸ்பீடையும் வழங்கும் பல மின்சார ஸ்கூட்டர்கள் கிடைக்கின்றன. இவை நகரங்களில், வேகமாகப் பயணிக்க விரும்புவோருக்கு இவை சிறந்த மாற்று வாய்ப்புகளாகும்.

டாப் ஸ்பீட் மின்சார ஸ்கூட்டர்கள்:

1. ஹீரோ விடா VX2 

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விடா பிராண்ட், பட்ஜெட் மின்சார வாகன பிரிவில் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. பேட்டரியை வாடகைக்கு எடுத்துக்கொள்ளும் திட்டத்தின் மூலம், விடா VX2 ஸ்கூட்டரை வெறும் 44 ஆயிரத்து 999 ரூபாய்க்கே சொந்தமாக்கிக் கொள்ளலாம். இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 92 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும். அதிகபட்சமாக மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த வாகனம் பயணிக்கும். இது இந்தப் பட்டியலில் உள்ள மிகவும் மலிவான அதிவேக மின்சார ஸ்கூட்டர் ஆகும். இதில் 27 தொடங்கி 33 லிட்டர் வரையிலான பூட்-ஸ்பேஸ் உள்ளது.

2. TVS ஆர்பிட்டர் V1

TVS நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர் மாடலான V1, பட்ஜெட்டில் இ-ஸ்கூட்டர் வாங்க விரும்பும் பயனர்களைக் வெகுவாக கவர்கிறது. பேட்டரியை வாடகைக்கு எடுத்துக்கொள்ளும் வகையில், இதனை வெறும் 49 ஆயிரத்து 999 ரூபாய்க்கு சொந்தமாக்கலாம். இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 86 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம். அதிகபட்சமாக மணிக்கு 68 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும்.  இருக்கைக்கு கீழே 34 லிட்டர் வரையிலான பூட்-ஸ்பேஸை கொண்டுள்ளது. TVS பிராண்டின் நம்பகத்தன்மையை விரும்புபவர்களுக்கு இது சரியான தேர்வாகும்.

3. ஜெலியோ கிரேஸி ஐ

குறைந்த பட்ஜெட்டில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க விரும்புவோருக்கு ஜெலியோ கிரேஸி ஐ மற்றொரு நல்ல தேர்வாகும். ரூ. 54,000 என்ற தொடக்க விலையில் கிடைக்கும் இந்த ஸ்கூட்டரானது பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 70 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கும். அதிகபட்சமாக மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும். இருக்கைக்கு கீழே 50 லிட்டர் அளவிற்கான பூட்-ஸ்பேஸ் வழங்கப்படுகிறது. இது தினசரி நகரப் பயணங்களுக்கு ஏற்றது.

இதையும் படியுங்கள்: Renault Duster: புது ஆட்டோமேடிக், 7 சீட்டர், ஹைப்ரிட், மினி எஸ்யுவி - டஸ்டரையே ப்ராண்டாக மாற்றும் ரெனால்ட், எப்படி?

4. பவுன்ஸ் இன்ஃபினிட்டி E1

பட்ஜெட் பிரிவில் உள்ள மற்றொரு பிரபலமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பவுன்ஸ் இன்ஃபினிட்டி E1 ஆகும். இதன் ஆரம்ப விலை ரூ. 55,000 (எக்ஸ்-ஷோரூம்) மட்டுமே ஆகும். இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 70 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம். அதிகபட்சமாக மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும்.இருக்கைக்கு கீழே 12 லிட்டர் பூட் - ஸ்பேஸை வழங்குகிறது. குறைந்த பராமரிப்புச் செலவுள்ள மின்சார வாகனத்தை (EV) விரும்புவோருக்கு இது ஒரு நல்ல தேர்வாகும்.


Budget E-Scooter: ரூ.45,000-க்கும் குறைவான பட்ஜெட்..! டாப் ஸ்பீடில் மிரட்டும் 4 இ-ஸ்கூட்டர்கள், ரேஞ்சிலும் சளைக்காது..

எந்த ஸ்கூட்டர் பொருந்தும்?

மேற்குறிப்பிடப்பட்ட பட்டியலில் ஓலா எஸ்1 எக்ஸ் அதிகபட்ச வேகத்தை வழங்குகிறது. மறுபுறம், விடா விஎக்ஸ்2 கோ மிகவும் மலிவு விலையில் கிடைக்கிறது. அதேநேரம், டிவிஎஸ் ஆர்பிட்டர் நம்பகத்தன்மைக்கு உகந்ததாக உள்ளது. எனவே, உங்கள் தினசரிப் பயணம், பட்ஜெட், தேவைப்படும் தூரம் மற்றும் சேவை வலையமைப்பு போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு சரியான மின்சார ஸ்கூட்டரைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது.

 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Honda E Scooters: ஒரே சார்ஜில் இத்தனை கி.மீட்டர் மைலேஜா? பட்ஜெட் விலையில் மாஸான ஹோண்டா இ ஸ்கூட்டர்கள் - என்னென்ன?
Honda E Scooters: ஒரே சார்ஜில் இத்தனை கி.மீட்டர் மைலேஜா? பட்ஜெட் விலையில் மாஸான ஹோண்டா இ ஸ்கூட்டர்கள் - என்னென்ன?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Embed widget