மேலும் அறிய

Renault Duster: புது ஆட்டோமேடிக், 7 சீட்டர், ஹைப்ரிட், மினி எஸ்யுவி - டஸ்டரையே ப்ராண்டாக மாற்றும் ரெனால்ட், எப்படி?

Renault Duster SUV Upgrades: டஸ்டர் கார் மாடலையே தனது ப்ராண்டாக மாற்றிக்கொள்ளும் வகையில், 7 சீட்டர் மற்றும் ஹைப்ரிட் உள்ளிட்ட 4 அப்க்ரேட்களை எஸ்யுவியில் வழங்க ரெனால்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Renault Duster SUV Upgrades:  ரெனால்ட் டஸ்டர் கார் மாடலில் வழங்கப்பட உள்ள 4 முக்கிய அப்க்ரேட்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ரெனால்ட் டஸ்டர் எஸ்யுவி அப்க்ரேட்கள்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கடந்த மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட, மூன்றாம் தலைமுறை ரெனால்ட் டஸ்டர் எஸ்யுவி ஆனது விற்பனையில் அசத்தி வருகிறது. உள்ளூரில் டஸ்டர் ப்ராண்டை மேலும் வலுப்படுத்த ஃப்ரான்ஸ் நிறுவனம் விரும்புகிறதாம். அதற்காக இந்த காரின் லைன் - அப்பில் 4 முக்கிய அப்க்ரேட்களை வழங்க பரிசீலினை நடைபெறு வருகிறதாம்.  அதில் மலிவு விலை ஆட்டோமேடிக் வேரியண்ட் , வலுவான ஹைப்ரிட் எடிஷன், 3 வரிசை இருக்கை வேரியண்ட் மற்றும் ரக்கட் மினி வெர்ஷன் ஆகியவை அடங்குமாம். அவை தொடர்பாக வெளியாகியுள்ள ஆரம்பகட்ட தகவல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

டஸ்டரின் 4 புதிய வேரியண்ட்கள்

1. புதிய மலிவு விலை ஆட்டோமேடிக் வேரியண்ட்

வெளியாகியுள்ள ஊடக தகவல்களின்படி, டஸ்டரின் லைன் - அப்பில் விரைபில் புதிய தொடக்க நிலை அதெண்டிக் 1.3 லிட்டர் ஆட்டொமேடிக் வேரியண்டை ரெனால்ட் அறிமுகப்படுத்த உள்ளதாம். தற்போதைய ​​சூழலில் தொடக்க நிலை அதெண்டிக் ட்ரிம்மைத் தவிர, மற்ற அனைத்து 1.3L டர்போ பெட்ரோல் வேரியன்ட்களும் 6-ஸ்பீட் DCT டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 1.0 லிட்டர்டர்போ பெட்ரோல் இன்ஜின் கொண்ட டஸ்டர் மாடல்களில், ரெனால்ட் நிறுவனம் CVT ஆட்டோமேட்டிக் அல்லது ஆட்டோமேடர் கியர்பாக்ஸ் ஆப்ஷனை வழங்கவும் வாய்ப்புகள் நிலவுகின்றனவாம்.

2. டஸ்டர் ஹைப்ரிட்

டஸ்டர் மாடலின் விரிவாக்கத்தைத் தொடர்ந்து, ரெனால்ட் இந்தியா இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது டஸ்டர் ஹைப்ரிட் எடிஷனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த ஹைப்ரிட் பவர்ட்ரெயினில் 109bhp திறன் கொண்ட 1.8 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின், இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் (ஒரு 49bhp டிரைவ் மோட்டார் மற்றும் ஒரு 20bhp ஜெனரேட்டர் மோட்டார்) மற்றும் 1.4kWh பேட்டரி பேக் ஆகியவை அடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒருங்கிணைந்த சக்தியாக 160bhp மற்றும் 172Nm ஆற்றலை உற்பத்தி செய்ய முடியுமாம்.


Renault Duster: புது ஆட்டோமேடிக், 7 சீட்டர், ஹைப்ரிட், மினி எஸ்யுவி - டஸ்டரையே ப்ராண்டாக மாற்றும் ரெனால்ட், எப்படி?

3. ரெனால்ட் டஸ்டர் 7 சீட்டர்

ரெனால்ட் டஸ்டரின் 7-சீட்டர் எடிஷன் 2027-ஆம் ஆண்டில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. RGMP ப்ளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்ட இந்த மூன்று வரிசை இருக்கைகளை கொண்ட எஸ்யுவி, அதன் டர்போ பெட்ரோல் இன்ஜின்கள் மற்றும் ஹைப்ரிட் பவர்ட்ரெய்ன் ஆகியவற்றை ஸ்டாண்டர்ட் 5-சீட்டர் டஸ்டரில் இருந்து கடனான பெறுமாம். ஒட்டுமொத்த வடிவமைப்பு மற்றும் ஸ்டைலிங், உட்புறம், அம்சங்கள் மற்றும் பல பாகங்கள் அதன் 5-சீட்டர் எடிஷனிலிருந்து நீட்டிக்கப்பட்ட வடிவில் அப்படியே பின் தொடரப்பட உள்ளது. இதனால்,  7 சீட்டர் டஸ்டர் நீளமாகவும், கூடுதலாக ஒரு வரிசை இருக்கைகளைக் கொண்டிருப்பதால் அதிக இடவசதியுடனும் இருக்கும். சந்தைப்படுத்தப்படும்போது ​​7-சீட்டர் ரெனால்ட் டஸ்டரானது டாடா சஃபாரி, மஹிந்திரா XUV 7XO மற்றும் எம்ஜி ஹெக்டர் பிளஸ் ஆகிய மாடல்களுடன் போட்டியிட உள்ளது.

இதையும் படியுங்கள்: Innova Hycross: இன்னோவா ஹைக்ராஸ்க்கு சவால், மாருதி 7 சீட்டர் படுதோல்வி - ஹைப்ரிட்டுக்கு ரூ.2.15 லட்சம் சலுகை

4. மினி ரெனால்ட் டஸ்டர்

ரெனால்ட் நிறுவனம், ப்ரிட்ஜர் கான்செப்ட்டை அடிப்படையாகக் கொண்டு, இந்திய சந்தைக்காக 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட ஒரு புதிய எஸ்யுவியை தயாரித்து வருகிறது. பெரும்பாலும் மினி டஸ்டர் என்று குறிப்பிடப்படும் இந்த புதிய சப்-காம்பாக்ட் மாடல், RGMP ப்ளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டு, உறுதியான மற்றும் கம்பீரமான வடிவமைப்புடன் வெளிவர உள்ளது. பெட்ரோல், ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக் உள்ளிட்ட பல இன்ஜின் ஆப்ஷன்களுடன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியாகியுள்ள தகவல்களின்படி, ரெனால்ட் நிறுவனம் புதிய 1.2 லிட்டர், நான்கு சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினை உருவாக்கி வருகிறது. இது ப்ரிட்ஜர் காம்பாக்ட் எஸ்யுவியில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது . இந்த இன்ஜின், டஸ்டரின் 1.3 லிட்டர் TGDi இன்ஜினின் மேம்படுத்தப்பட்ட வடிவமாக இருக்கும். உற்பத்திக்குத் தயாரான ரெனால்ட் ப்ரிட்ஜர், 2027-ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ரெனால்ட் டஸ்டரின் விலை வரம்பானது ரூ.10.49 லட்சத்தில் தொடங்கி ரூ.20.09 லட்சம் வரை நீள்கிறது. புதிய மாடல்கள் சந்தைப்படுத்தப்பட்டால் தொடக்க நிலை வேரியண்ட்களின் விலை குறைவதோடு, டாப் எண்ட் ஹைப்ரிட் வேரியண்ட்களின் விலை கணிசமாக உயரவும் வாய்ப்புள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

32 கி.மீ மைலேஜ்... ரூ. 3.49 லட்சம் விலை! முதன்முறையாக கார் வாங்குபவர்களுக்கு மாருதி கொடுத்த மாஸ் ஆஃபர்!
maruti suzuki s presso : 32 கி.மீ மைலேஜ்... ரூ. 3.49 லட்சம் விலை! முதன்முறையாக கார் வாங்குபவர்களுக்கு மாருதி கொடுத்த மாஸ் ஆஃபர்!
பிரெஸ்ஸா vs நெக்ஸான்: ரூ. 1 லட்சம் முன்பணம், EMI எதற்கு கம்மி? பட்ஜெட் SUV எது? ஒப்பீடு!
பிரெஸ்ஸா vs நெக்ஸான்: ரூ. 1 லட்சம் முன்பணம், EMI எதற்கு கம்மி? பட்ஜெட் SUV எது? ஒப்பீடு!
TVS Apache: குழந்தைகளுக்கு ரேஸ் பைக்.. டிவிஎஸ் நிறுவனத்தில் அசத்தலான அறிமுகம்!
TVS Apache: குழந்தைகளுக்கு ரேஸ் பைக்.. டிவிஎஸ் நிறுவனத்தில் அசத்தலான அறிமுகம்!
Bolero Neo Plus: நாட்டின் மலிவான 9 சீட்டரில் இருக்கும் குறைகள்..! SUV யாருக்கு ஒத்து வராது? மாற்று ஆப்ஷன்கள் என்ன?
நாட்டின் மலிவான 9 சீட்டரில் இருக்கும் குறைகள்..! SUV யாருக்கு ஒத்து வராது? மாற்று ஆப்ஷன்கள் என்ன?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Kangana Ranaut on CJP Protest :”போராட்டமா இது வாந்தி வருது இவங்களை வளர்த்தது யார்?” மாணவர்களை அசிங்கப்படுத்திய கங்கனா
Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
Mekadatu Dam: தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
Vaiko Book Release : ’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ சொல்வது உண்மையா..? – காரணம் என்ன ?
’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ பேச்சு உண்மையா..?
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
பிரெஸ்ஸா vs நெக்ஸான்: ரூ. 1 லட்சம் முன்பணம், EMI எதற்கு கம்மி? பட்ஜெட் SUV எது? ஒப்பீடு!
பிரெஸ்ஸா vs நெக்ஸான்: ரூ. 1 லட்சம் முன்பணம், EMI எதற்கு கம்மி? பட்ஜெட் SUV எது? ஒப்பீடு!
கனிமக் கொள்ளைக்கு நிரந்தரத் தடை, சிபிஐ விசாரணை- தவெக அரசிடம் அன்புமணி வலியுறுத்தல்
கனிமக் கொள்ளைக்கு நிரந்தரத் தடை, சிபிஐ விசாரணை- தவெக அரசிடம் அன்புமணி வலியுறுத்தல்
TN Govt: தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
Kangana Ranaut: CJP நீட் போராட்டம்.. வாந்தி வருது.. இவங்கெல்லாம் நல்ல பெண்களா?.. கேவலமாக பேசிய கங்கனா!
Kangana Ranaut: CJP நீட் போராட்டம்.. வாந்தி வருது.. இவங்கெல்லாம் நல்ல பெண்களா?.. கேவலமாக பேசிய கங்கனா!
Embed widget