Fuel Efficient Cars: கம்மி பட்ஜெட் - மைலேஜில் மிரட்டும் பெட்ரோல், டீசல், ஹைப்ரிட் கார்கள் - 28 கி.மீ.., 5 ஸ்டார் ரேட்டிங்
Fuel Efficient Cars: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 20 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் அதிக மைலேஜ் தரும் பெட்ரோல், டீசல் மற்றும் ஹைப்ரிட் கார் மாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Fuel Efficient Cars: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 20 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் அதிக மைலேஜ் மூன்று கார் மாடல்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
மைலேஜில் அசத்தும் கார்கள்:
இந்திய் ஆட்டோமொபைல் சந்தையில் நல்ல மைலேஜை தரக்கூடிய காரை வாங்க விரும்பி, பெட்ரோல், டீசல் அல்லது ஹைப்ரிட் கார் மாடலில் எதை தேர்வு செய்வது என தெரியாமல் குழம்புகிறீர்களா? 20 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் எரிபொருள் செலவை கணிசமாக குறைக்கும் ஒரு நல்ல மைலேஜ் கார் தான் உங்களது இலக்கா? அதற்கான தீர்வுகளாக மூன்று சிறந்த கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. அவை நல்ல வடிவமைப்பு மற்றும் செயல்திறனை கொண்டிருப்பதோடு, மைலேஜிலும் உரிமையாளர்களை நிம்மதியடைய செய்யும் மாடல்களாக உள்ளன.
1. மாருதி சுசூகி கிராண்ட் விட்டாரா - ஹைப்ரிட் இன்ஜின்
சிறந்த செயல்திறன் மற்றும் மைலேஜ் அம்சங்களுடன் ஒரு காரை வாங்க விரும்பினால், மாருதி சுசூகியின் கிராண்ட் விட்டாரா நிச்சயம் உங்களுக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இதில் இடம்பெற்றுள்ள 1.5 லிட்டர் மைல்ட் ஹைப்ரிட் இன்ஜின், 103bhp மற்றும் 139Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. 5 ஸ்பீட் மேனுவல் மற்றும் 6 ஸ்பீட் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன. ஆட்டோமேடிக் ட்ரான்சஸ்மிஷனில் ஆல் வீல் ட்ரைவ் தொழில்நுட்பமும் இடம்பெற்றுள்ளது. மேனுவல் ட்ரான்ச்மிஷன் வேரியண்ட் லிட்டருக்கு 21.11 கிலோ மீட்டர் மைலேஜும், ஆட்டோமேடிக் வேரியண்ட் 20.50 கிலோ மீட்டர் மைலேஜும் வழங்குகிறது.
இரண்டாவதாக வழங்கப்படும் 1.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின் ஆனது, 115.5bhp மற்றும் 141Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. இதில் e-CVT ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. அதன் வாயிலாக நல்ல நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது லிட்டருக்கு 27.97 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாருதி கிராண்ட் விட்டாராவின் விலை 11.42 லட்சத்தில் தொடங்கி 20.68 லட்சம் வரை நீள்கிறது. இந்த எஸ்யுவி ஆனது இந்திய சந்தையில் ஹைடெக் அம்சங்கள் நிறைந்த கார் மாடலாகும்.
2. டாடா ஆல்ட்ரோஸ் - டீசல் இன்ஜின்
செயல் திறனுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பவரா? மைலேஜ் தரக்கூடிய டீசல் இன்ஜின் வாகனத்தை விரும்புகிறீரா? எனில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட டாடா ஆல்ட்ரோஸ் 2025 எடிஷன் உங்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் காராக இருக்கும். இதன் விலை 6.89 லட்சத்தில் தொடங்கி 11.49 லட்சம் வரை நீள்கிறது.
மிகவும் எரிபொருள் செயல்திறன் கொண்ட 1.5 லிட்டர் டீசல் இன்ஜினை கொண்டு, 90bhp மற்றும் 200Nm ஆற்றலை உற்பத்தி செய்கிறது. அதில் 5 ஸ்பீட் மேனுவல் மற்றும் 6 ஸ்பீட் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை பெற்றுள்ளது. இந்திய சந்த்கையில் கிடைக்கும் ப்ரீமியம் ஹேட்ச்பேக்கான ஆல்ட்ரோஸ், லிட்டருக்கு 23.64 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது.
3. ஃபோல்க்ஸ்வாகன் விர்டஸ் - பெட்ரோல் இன்ஜின்
சிறந்த செயல்திறன் கொண்ட பெட்ரோல் காரை தேடுபவருக்கு, ஃபோல்க்ஸ்வாகன் விர்டஸ் நல்ல தேர்வாக இருக்கும். செடானாது ஸ்போர்ட்டி லுக் உடன் இந்திய சாலை சூழலுக்கு ஏற்ற நல்ல க்ரவுண்ட் க்ளியரன்ஸை கொண்டுள்ளது. இதன் விலை 11.56 லட்சத்தில் தொடங்கி 19.40 லட்சம் வரை நீள்கிறது.
விர்டஸில் வழங்கப்பட்டுள்ள 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆனது, 115bhp மற்றும் 178Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. வாகனத்தில் 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் 6 ஸ்பீட் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.
கூடுதலாக 1.5 லிட்டர் ஃபர்போ பெட்ரோல் இன்ஜின் ஆனது, 150bhp மற்றும் 250Nm ஆற்றலை உற்பத்தி செய்கிறது. இதிலும் 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் 7 ஸ்பீட் டூயல் க்ளட்ச் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் லிட்டருக்கு 18 முதல் 20 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவீன காலத்திற்கு ஏற்ப தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் வசதிகளை கொண்டு, பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.





















