Auto Expo 2023 LIVE: ஆட்டோ எக்ஸ்போவில் டாடா சியாரா இவி சொகுசு கார்
Auto Expo 2023 LIVE Updates: கடந்த மூன்று வருட காத்திருப்புக்குப் பிறகு, நாட்டின் மிகப்பெரிய ஆட்டோ கண்காட்சியான 'ஆட்டோ எக்ஸ்போ' (ஆட்டோ எக்ஸ்போ 2023) இன்று முதல் தொடங்குகிறது.
LIVE
Background
Auto Expo 2023 LIVE Updates: கடந்த மூன்று வருட காத்திருப்புக்குப் பிறகு, நாட்டின் மிகப்பெரிய ஆட்டோ கண்காட்சியான 'ஆட்டோ எக்ஸ்போ' (ஆட்டோ எக்ஸ்போ 2023) இன்று முதல் தொடங்குகிறது. ஆட்டோ எக்ஸ்போ 2023 இன் 16வது பதிப்பு இம்முறை இரண்டு வெவ்வேறு இடங்களில் நடைபெறுகிறது. அதன்படி, புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் ஆட்டோ எக்ஸ்போ உபகரண கண்காட்சியும், கிரேட்டர் நொய்டாவில் ஆட்டோ எக்ஸ்போ மோட்டார் ஷோ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆட்டோ எக்ஸ்போ 2023 இன் முதல் இரண்டு நாட்கள், ஜனவரி 11 (இன்று) மற்றும் ஜனவரி 12 ஆகியவை ஊடகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மூன்றாவது நாளான அதாவது ஜனவரி 13 அன்று வர்த்தகர்களுக்காக திறந்திருக்கும். ஆட்டோ எக்ஸ்போ ஜனவரி 14 முதல் ஜனவரி 18 வரை பொது மக்களுக்கு திறக்கப்படும். ஆட்டோ எக்ஸ்போ மோட்டார் ஷோ காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், வார இறுதி நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பொதுமக்களுக்கு பார்வைக்கு திறந்திருக்கும். மேலும் இந்த நிகழ்ச்சியின் கடைசி நாளான ஜனவரி 18ம் தேதி காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இருக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த கார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன?
ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் மாருதி சுசுகி, BYD இந்தியா, டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய் மோட்டார் இந்தியா, எம்ஜி மோட்டார் இந்தியா, கியா இந்தியா, டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் உள்ளிட்டவை அடங்கும். மஹிந்திரா உள்ளிட்ட பல நிறுவனங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
எந்தெந்த கார்கள் அறிமுகப்படுத்தப்படும்?
ஆட்டோ எக்ஸ்போவில் வரும் சில பிரத்யேக மாடல்கள் மாருதி சுசுகி ஜிம்னி 5-டோர், மாருதியின் கான்செப்ட் எலக்ட்ரிக் எஸ்யூவி, ஹூண்டாய் ஐயோனிக் 5, ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட், கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட், கியா கார்னிவல், கியா ஈவி9 கான்செப்ட், எம்ஜி ஏர் ஈவி, எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட். Toyota GR Corolla, Tata Punch EV, Tata Safari facelift, BYD Seal EV உள்ளிட்ட பல கார்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஆட்டோ எக்ஸ்போவில் டாடா சியாரா இவி சொகுசு கார்
டாடா நிறுவனத்தின் சியாரா இவி மற்றும் ஹாரியர் இவி ஆட்டோ எக்ஸ்போ 2023ல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
கீவே ரெட்ரோ எஸ்.ஆர்.250 அறிமுகம்
பென்லீ சகோதரி நிறுவனமான கீவே நிறுவனத்தின் கீவே ரெட்ரோ எஸ்.ஆர்.250 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆட்டோ எக்ஸ்போவில் இடம்பெற்றுள்ள அதிநவீன மோட்டார் சைக்கிள்
ஆட்டோ 2023 எக்ஸ்போவில் அதிநவீன இரு சக்கர வாகனங்கள் இடம்பெற்றுள்ளன.
ஆசியாவில் முதன்முறையாக அறிமுகமாகும் லெக்சஸ் ஆர்.எக்ஸ். 500எச்
இந்தியா உள்பட ஆசியாவிலே முதன்முறையாக லெக்சஸ் ஆர்.எக்ஸ். 350 எச் மற்றும் லெக்சஸ் ஆர்.எக்ஸ்.500 எச் கார்கள் அறிமுகமாகிறது.
லெக்சஸ் ஆர்.எக்ஸ். 500 எச் அறிமுகம்
டர்போசார்ஜ் செய்யப்பட்ட எஞ்சின் மற்றும் பின்புறத்தில் மின்சார மோட்டார் பொருத்தப்பட்ட லெக்சஸ் ஆர்.எக்ஸ் 500 எச் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.