Upcoming Cars: அடுத்த 6 வாரம்.. அறிமுகமாகப்போகும் 6 கார்கள்.. லிஸ்ட் இதுதான் ப்ரோ!
இந்திய சந்தையில் அடுத்த 6 வாரத்திற்குள் அறிமுகமாக உள்ள 6 புதிய கார்களின் பட்டியலை கீழே காணலாம்.

இந்தியாவில் கார் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, ஒவ்வொரு நிறுவனங்களும் அதற்கேற்ப புதிய புதிய வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
இந்தியாவில் அடுத்த 6 வாரங்களுக்குள் அறிமுகமாக உள்ள புதிய கார்களின் விவரத்தை கீழே காணலாம்.
Tata Harrier - Safari Petrol:
டாடா நிறுவனத்தின் வெற்றிகரமான கார்கள் Harrier மற்றும் Safari ஆகும். பெட்ரோலில் இயங்கும் Harrier காரை அறிமுகப்படுத்த உள்ளனர். இந்த கார் 1.5 லிட்டர் Hyperion turbocharged பொருத்தப்பட்ட காராக இருக்கும். 158 எச்பி மற்றும் 255 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 6 கியர்கள் கொண்டதாக அறிமுகமாக உள்ளது. அதேபோல, பெட்ரோலில் இயங்கும் டாடா Safari காரும் அறிமுகமாக உள்ளது. சபாரி பழைய மாடலில் உள்ள எஞ்ஜின் மற்றும் ட்ரான்ஸ்மிசன் இதே காரில் இருக்கும் என்று கருதப்படுகிறது. 5 சீட்டராக அறிமுகமாக உள்ளது. இந்த இரண்டு கார்களும் இந்த மாதம் அறிமுகமாக உள்ளது.
Next-gen Kia Seltos:
கியா நிறுவனத்தின் வெற்றிகரமான கார் Seltos ஆகும். இதன் புதிய படைப்பாக கியா அறிமுகப்படுத்த உள்ள கார் Next-gen Kia Seltos ஆகும். இந்த கார் வரும் 10ம் தேதி அறிமுகமாக உள்ளது. இது சந்தைக்கு விற்பனைக்கு அடுத்தாண்டு ஜனவரி வரும் என்று கருதப்படுகிறது. இதன் உட்புற அமைப்பு பெரியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளிப்புற தோற்றமும் வசீகரமாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. Trinity Panoramic Display இதில் இடம்பெற்றுள்ளது. செல்டாஸ் காரில் உள்ளது போலவே எஞ்ஜின் மற்றும் ட்ரான்ஸ்மிசன் இந்த காரிலும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
MINI Cooper Convertible:
மினி கூப்பர் காரின் புதிய வெர்சன் இந்த MINI Cooper Convertible ஆகும். இந்த கார் இந்தியாவில் வரும் 2026ம் ஆண்டு ஜனவரியில் அறிமுகமாக உள்ளது. திறந்தவெளியில் ஓட்டுவதற்கு ஏற்ற வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. முழுவதும் ஆட்டோமெட்டிக் பேப்ரிக் கூரையை கொண்டது. 18 நொடிகளில் திறக்கும் திறன் கொண்டது. 2 லிட்டர் டர்போசேஞ்ச்ட் பெட்ரோல் எஞ்ஜின் கொண்டது. 201 எச்பி மற்றும் 300 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 100 கிலோ மீட்டர் வேகத்தை 6.9 நொடிகளில் எட்டும். அதிகபட்சமாக மணிக்கு 237 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.
Maruti e Vitara:
மாருதி நிறுவனத்தின் வெற்றகரமான படைப்பு இந்த Vitara கார் ஆகும். இந்த காரின் அப்டேட் வெர்சன் Maruti e Vitara. மின்சார காரான இந்த கார் வரும் ஜனவரியில் விற்பனைக்கு வர உள்ளது. பல்வேறு வசதிகளுடன் இந்த கார் சந்தைக்கு வர உள்ளது. 10 இன்ச் அலாய் சக்கரங்கள், 10 வே பவர் இலகுவான ஓட்டுநர் இருக்கை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கொண்டது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 543 கிலோ மீட்டர் செல்லும் ஆற்றல் கொண்டது. 7 ஏர்பேக்குகள் உள்ளது.
Mahindra XUV 7XO:
மஹிந்திராவின் எக்ஸ்யூவி கார்களுக்கு இந்திய சந்தையில் தனி வரவேற்பு உள்ளது. மஹிந்திரா சந்தையில் அறிமுகப்படுத்த உள்ள புதிய கார் Mahindra XUV 7XO ஆகும். இந்த கார் வரும் ஜனவரி மாதம் அறிமுகமாக உள்ளது. புதிய அலாய் சக்கரங்கள், போல்டர் முகப்பு விளக்குகள், புதிய ரேடியட்டர் கிரில் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கொண்டது.
இந்த கார்கள் அனைத்தும் இந்திய சந்தையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.





















